தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழகத்தில் மீண்டும் மழையின் அளவு எப்பொழுது அதிகரிக்கலாம் ?

10-12 2019 நேரம் காலை 11:15 மணி வருகின்ற டிசம்பர் 14 (14-12-2019) ஆம் தேதி வாக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம்.13-12-2019 ஆம் தேதிகளில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகள் உட்பட வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.அதன் பின் அதற்கு மறுநாள் ஆகிய 14-12-2019 ஆம் தேதி அன்று நாகை , காரைக்கால் , புதுச்சேரி , கடலூர் , விழுப்புரம் , செங்கல்பட்டு , சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் 14-12-2019 ஆம் தேதி வாக்கில் தென் கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழக உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக லேசானது முதல் மிதமான மழை பல்வேறு பகுதிகளிலும் பதிவாகலாம்.பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.

17-12-2019 அல்லது 18-12-2019 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு தென் கடலோர மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரளவு மழை பதிவாகும் என நம்பலாம்.அதற்காண சாத்திய கூறுகளும் உள்ளன.

மேற்கத்திய கலக்கம் (western disturbance)
========================
நாம் எதிர்பார்த்தது போல மேற்கத்திய கலக்கத்தின் தாக்கத்தால் காஷ்மீரின் மழை பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் இது மேலும் தீவிரமடையும் மழை பகுதிகளில் பனி மழையும் சமவெளி களில் மழையும் பதிவாக தொடங்கலாம்.நாட்டின் பிற மாநிலங்களின் சமவெளி பகுதிகளை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மாநிலம் #amritsar பகுதியில் குறைந்த பட்சமாக 5.6°C அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

12-12-2019 ஆம் தேதி முதல் 13-12-2019 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்  ராஜஸ்தான் ,ஹரியானா ,பஞ்சாப் ,புதுடில்லி ,ஜம்மு மாநிலங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய வலுவான மழை பதிவாகலாம் 13-12-2019 ஆம் தேதி வாக்கில் உத்திரகாண்ட் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களின் இமயமலை பகுதிகளை ஒட்டியிருக்கும் சமவெளி பகுதிகளில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...