தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10 மார்ச் 2020 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் இன்றைய வானிலை

10-03-2020 நேரம் காலை 10:00 மணி நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.இது தொடர்பான தகவல்களை நேற்றைய எனது குரல் பதிவின் வாயிலாகவும் குறிப்பிட்டு இருந்தேன்.கடந்த 24 மணி நேரத்தில் #கோவை மாவட்டம் #வால்பாறை PTO சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 52 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல #கொடைக்கானல் சுற்றுவட்டப் பகுதிகளிலும் 32 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

இன்று பகல் நேரத்தில் #திருச்சி மாநகராட்சி பகுதிகள் உட்பட #திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் பகல் நேர வெப்பநிலையானது அதிகபட்சமாக 2°C வரையில் அதிகரித்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.அதே போல #தஞ்சாவூர் ,#கும்பகோணம் உட்பட தஞ்சை மாவட்ட பகுதிகளிலும் #நெய்வேலி ,#விருதாச்சலம் உட்பட கடலூர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும்  , #பெரம்பலூர் , #அரியலூர் ,#கள்ளக்குறிச்சி ,#வேலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பு சற்று அதிகமாக உணரப்படலாம். இந்த 24 மணி நேரத்திற்குள்ளான வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக பகல் நேரத்தில் வெளியில் அலைபவர்களுக்கு எளிதில் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம்.ஆகையால் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் அவ்வப்பொழுது தண்ணீர் மற்றும் நீர் சத்து அதிகமாக உள்ள பொருட்கள் மற்றும் பழவகைகளை உட்கொள்வது நல்லது.

 வழக்கம்போல  ஈரோடு , கரூர் ,தாராபுரம் , அரவாகுறிச்சி ,மதுரை ,சிவகாசி ,சேலம் ,நாமக்கல் உட்பட மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்ட பகுதிகளின் பல்வேறு பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலையானது அதிகரித்தே இருக்கும்.

நாகை ,காரைக்கால் ,புதுச்சேரி ,விழுப்புரம் ,கடலூர் ,காஞ்சிபுரம் ,சென்னை ,தொருவள்ளுர் ,செங்கல்பட்டு உட்பட கடலோர மாவட்டங்களிலும் இன்று மற்றும் அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்கலாம்.

10-03-2020 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=====================
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 52 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 32 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 24 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
கொடைக்கானல் அப்பர் லேக் வியூ பாய்ண்ட் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 0.4 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...