தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-03-2020 கொரானா நோய் தொற்றின் தற்போதைய நிலவரம் | Corona virus current situation india and spain

#கொரானா UPDATE :
===================
27-03-2020 நேரம் மாலை 4:45 மணி இந்தியாவில் இதுவரையில் #கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 775 ஆக உள்ளது இன்று மட்டும் இதுவரையில் புதியதாக 48 நபர்களுக்கு கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.இதுவரையில் இதனால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 என கணிக்கிடப்பட்டு உள்ளது.

அதே சமயம் சர்வதேச அளவில் இன்று ஒரே நாளில்  #ஸ்பெயின் நாட்டில் மட்டும் இதுவரையில் 493 நபர்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல இன்றைய நாளில் மட்டும் இதுவரையில் அந்நாட்டில் புதியதாக 6273 நபர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.மேலும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் #ஸ்பெயின் நாட்டில் 64,059 நபர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

தற்போதைய நிலவரப்படி உலகின் வல்லரசு என தன்னைக் கூறிக்கொல்லும் #அமெரிக்க ஏகாதி பத்தியத்தில் சர்வதேச அளவில் அதிகபட்சகமாக இதுவரையில் 85,749 நபர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதில் 82 ,577 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரையில் அந்நாட்டில் 1304 நபர்கள் இந்த நோய் தொற்றால் உயிரிழந்து இருக்கின்றனர்.இத்தாலியில் நேற்று வரை 80,589 நபர்கள் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர் அதே போல உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8215 ஆக இருந்தது.#இத்தாலி நாட்டின் இன்றைய நிலவரம் என்னெவென்றே தெரியவில்லை. அந்த நாடு மீண்டும் பொருளாதார ரீதியாகவும் சரி வளர்ச்சியிலும் சரி முன்னர் இருந்த நிலையை அடைய குறைந்தது 20 முதல் 30  ஆண்டுகளாவது ஆகும் என்பது எனது கணிப்பு.

அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி போன்ற நாடுகளின் தகவல்களை இங்கு நான் பதிவிட்டு இருப்பது உங்களின் பயத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல.அந்த நோய் தொற்றின் தீவிரத்தையும் உண்மை நிலையையும் உங்களுக்கு உணர்த்தவே தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.

அச்சத்தை தவிர்த்து நமது அரசு எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி.இதைப்போன்ற ஒரு நிலைமை நம் மக்களுக்கு ஏற்படாமல் காப்போம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...