தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

CORONAVIRUS HELPLINE NUMBERS DISTRICTWISE | மாவட்டங்கள் வாரியாக கொரானா வைரஸ் உதவி மைய எண்கள்

நண்பர்களே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்தும் இந்த
பக்கத்தின் வாயிலாக என்னுடன் தொடர்ந்து கடந்த சில ஆண்டு காலங்களாக பலரும் இணைந்துள்ளீர்கள்.நமது Puducherry Weather முகநூல் பக்கத்தை தொடங்கிய அந்த நாளில் இருந்து இதுவரையில் எத்தனையோ முறை இயற்க்கை பேரிடர்கள் தொடர்பான தகவல்களை பதிவிட்டு இருக்கிறேன்.ஆனால் கடந்த 50 ஆண்டுகளில்  நாம் இதுவரையில் சந்தித்திராத ஒரு சூழலை தற்சமயம் எதிர்கொண்டு இருக்கிறோம்.

நான் 10 வயது சிறுவனாக இருந்த பொழுது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் நாளில் அதாவது 04-12-1993 ஆகிய அன்று  காரைக்கால் அருகே மணிக்கு அதிகபட்சமாக 165 கி.மீ வேகத்திலான காற்றுடன் புயல் கரையை கடந்தது.அதன் காரணமாக #காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த 20,000 வீடுகளும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் 13,131 வீடுகளும் சேதமடைந்ததாகவும் 61 நபர்கள் உயிரிழந்ததாகவும் பின்னால் வெளிவந்த அறிக்கைகளின் வாயிலாக அறிய முடிந்தது.நீண்ட நாட்களாக மின்சாரம் இன்றி மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மாலை பொழுதை நண்பர்களுடனும் , உறவுனர்களுடனும் பேசி , விளையாடி மகிழ்ந்தது இன்னும் என் நினைவில் நீங்காமல் உள்ளது.அன்று 24 மணி நேரமும் செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி சானல்கள் கிடையாது (தொலைக்காட்சியே சில வீடுகளில் தான் இருக்கும்) , இணையம் (internet) என்றால் என்னவென்றே தெரியாது.அன்று பொழுதுபோக்குவதற்கும் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே  உலக விஷயங்களை அறிந்து கொள்ளுவதற்கும்  வசதிகள் பெரிதாக கிடையாது.ஆனால் அன்று முதல் அடுத்த 30 நாட்கள் எங்கள் பொழுதை தெருவில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று  நண்பர்களுடன் விளையாடியே மகிழ்ச்சியுடன் களித்தோம்.

ஆனால் இன்று பேரிடராக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த கொரானா விவகாரத்தில் பொழுதை களிக்க கோடிக்கணக்கான இணையத்தளங்கள் உண்டு , இணைய சேவை உண்டு , ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் உண்டு ஆனால் பல ஆண்டு காலம் பழகிய நண்பர்களை கூட தொட்டு பேச முடியாது.இன்னொரு புதிய மனிதரை அருகில் பார்க்கையில் பலருக்கும் பயம் தொற்றிக்கொள்கிறது.இந்த நிலை என்று தான் மாறும் என்றும் தெரியவில்லை.

விறைவாக நாம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இந்த தற்காலிக தனிமையை ஏற்றுக்கொள்ள தான் வேண்டுமோ என்னவோ!. அனைவரும் இயன்றவரையில் அத்தியாவசிய காரணிகள் இன்றி வெளியில் நடமாடுவதை சில காலம் தவிர்த்திருப்போம்.

மாவட்டங்கள் வாரியாக கொரானா உதவி தொலைப்பேசி எண்கள்.
=======================

தமிழகம்
=========

அரியலூர்: 04329-228709

ஈரோடு: 0424-2260211

உதகமண்டலம்: 0423-2444012 / 2444013

கடலூர்:  04142-220700

கரூர்: 04324-256306

கள்ளக்குறிச்சி: 04146-223265

கன்னியாகுமரி:  04652-231077 

காஞ்சிபுரம்: 044-27237107/27237207

கிருஷ்ணகிரி: 04343-234424

கோயம்புத்தூர்:  0422-2301114

சிவகங்கை: 04575-246233

செங்கல்பட்டு: 044- 27237107 /  27237207

சென்னை: 044-25243454

சேலம்: 0427-2452202

தஞ்சாவூர்: 04362-230121

தர்மபுரி:  04342-230562/234500

திண்டுக்கல்: 0451-2460320

திருச்சி: 0431-2418995

திருநெல்வேலி: 0462-2501070/2501012

திருப்பத்தூர்:  04179-222111

திருப்பூர்: 0421-2971199

திருவண்ணாமலை: 04175-232377

திருவள்ளூர்: 044-27664177/27666746

திருவாரூர்: 04366-226623

தூத்துக்குடி: 0461-2340101

தென்காசி: 0462-2501070 /2501012

தேனி: 04546-261093

நாகப்பட்டினம்: 04365-252500

நாமக்கல்: 04286-281425/8220402437

புதுக்கோட்டை: 04322-222207

பெரம்பலூர்: 04328-224455

மதுரை: 0452-2546160

ராணிப்பேட்டை: 0416-2258016

ராமநாதபுரம்: 04567-230060

விருதுநகர்: 04562-252601/252017

விழுப்புரம்: 04146-223265

வேலூர்: 0416-2258016

புதுச்சேரி
=========
0413 - 2336050
0413 - 2333644
104

காரைக்கால்
============
04368 - 227704

04368 - 261242

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...