தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

INTER TROPICAL CONVERGENCE ZONE (ITCZ) என்றால் என்ன ? வானிலை அறிவயிலில் ஏப்ரல் மாதத்தின் சிறப்புகள்

31-03-2020 நேரம் காலை 10:30 மணி தற்போது உலகெங்கிலும் நிலவி வரும் சூழல்கள் என்னவென்பது உங்களுக்கே தெரிந்து இருக்கும்.அந்த தகவல்களை 24 நேரமும் உங்களிடத்தில் கொண்டு சேர்க்க ஊடகங்களுக்கு பஞ்சம் இருப்பதாக தெரியவில்லை.அதே சமயம் தமிழகத்தில் அறுவடை செய்ய ஆட்கள் இன்றி விளைப் பொருட்கள் வீணாகும் சூழ்நிலை உருவாகி இருப்பதையும்  அறிந்து கொள்ள முடிகிறது.பல நாட்கள் பாடுபட்டு விளைவித்த பொருட்களை அறுவடை செய்ய இயலாமல் இருப்பது என்பது ஒரு குழந்தையை கருவில் சுமந்து அதனை கையில் சுமக்க இயலாத சூழ்நிலையுடன் ஒப்பிடலாம்.ஆனால் இன்று நமக்கு வேறு வழியும் இல்லை. மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் நாம் இந்த ஊரடங்கை கிடைபிடித்து தான் ஆகவேண்டும்.இந்த கொரானா தொடர்பான அச்சங்கள் களைந்து அனைத்தும் நிறைவடைந்து பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாறும் தருணத்தில் நாம் ஒரு பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.அதற்கு இப்போதிலிருந்தே ஆயுத்தமாக இருப்போம்.

நமது பக்கத்தின் வாயிலாக  ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அறிவார்ந்த பயனுள்ள தகவல்களை மட்டுமே வழங்கம் வேண்டும் என்று தான் கருதுகிறேன்.அந்த வகையில் நான் குறைந்த அளவிலான நீட்டிக்கப்பட்ட கால இடைவெளியிலான கணிப்புகளை  கணிப்பதற்கு கருத்தில் எடுத்துக்கொள்ளும் சில யுக்திகள் தொடர்பாக தான் இங்கு இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். நாளை முதல் பிறக்க இருக்கும் ஏப்ரல் மாதம் வளிமண்டலவியல் (வானிலை) ஆராய்ச்சிகளில் மிகவும் முக்கியமானது என்றே கூறலாம்.நான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் நைஜீரிய  கடலோர பகுதிகளின் அருகிலும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளிலும்  காற்று குவிதல் (convergence) எவ்வாறு அமைந்து இருக்கிறது என்பதைனை உற்று நோக்குவேன்.மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத முதல் 10 நாட்களுக்கு உள்ளாகவோ இலங்கையின் தெற்கு பகுதிகளில் மழை எப்படி பதிவாகி வருகிறது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என கருதுகிறேன்.அது எதனால் அதற்கும் இந்திய பருவமழைக்கும் என்ன தொடர்பு என்ற ஒரு கேள்வியை நீங்கள் முன் வைப்பீர்களானால் அதற்கான என்னுடைய பதில் இதுவாக தான் இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் நாள் சூரியனின் தாக்கம் நிலநடுக்கோடு அல்லது பூமத்திய ரேகை (Equator) அருகே அதிகமாக இருப்பதாக நாம் கணக்கில் கொள்கிறோம்.இதனை நாம் ஆங்கிலத்தில் Equinox என்கிறோம்.அதற்கு முன்பாக டிசம்பர் 21 முதல் மார்ச் 20 வரையிலான காலகட்டத்தில் அதன் தாக்கம் பூமியின் தென் அரைக்கோலத்தில் (Southern hemisphere) இல் அதிகமாக இருந்திருக்கும் என்பதே அதற்கு பொருள்.மார்ச் 21 ஆம் நாள் முதல் சூரியனின் தாக்கம் பூமியின் வடக்கு அரைக்கோலத்தில் (Northern Hemisphere) அதிகரிக்க தொடங்குகிறது.மார்ச் 21 முதல் ஜூன் 21 வரையிலான காலகட்டத்தில் சூரியனின் தாக்கம் நில நடுக்கோடு (Equator) முதல் கடகரேகை (Tropic of Cancer) வரை பயணிக்கிறது.பின்னர் ஜூன் 21 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலகட்டத்தில் அது கடக ரேகையில் முதல் நிலநடுக்கோடு வரை கீழ் நோக்கி பயணிக்கிறது.சூரியனின் தாக்கம் பூமியில் மாறுபடுவதை பொறுத்து நிலத்தில் காற்று குவிதல் ஏற்படும் பகுதிகளும் மாறுதல் அடைகின்றன அதனை தான் நாம் Inter Tropical convergence Zone (ITCZ) என்கிறோம்.

சூரியனின் தாக்கம் மார்ச் இறுதி நாட்களில் நிலநடுக்கோடு (equator) அருகே அதிகமாக இருக்கும் பொழுது இலங்கையின் தெற்கு பகுதிகளில் காற்று குவிதல் அதிகரிக்கிறது.இந்த காலகட்டத்தில் இலங்கையின் தெற்கு பகுதிகளில் ஏற்படும் இந்த காற்று குவிதல் தான் Inter Tropical convergence Zone (ITCZ).அது என்ன சூரியனின் தாக்கம் நில நடுக்கோடு (equator) அருகே அதிகமாக இருக்கும் பொழுது இலங்கையின் தெற்கு பகுதிகளில் காற்று குவிதல் எப்படி அதிகரிக்கிறது? என்று கூட நீங்கள் கேட்கலாம்.கடல் பகுதியை ஓப்பிடுகையில் நிலப்பகுதி அதிகமாகவும் , வேகமாகவும் வெப்பம் அடைவதை தான் இது நமக்கு உணர்த்துகிறது.அதனை அடிப்படையாக கொண்டு பார்த்தால் பொதுவாகவே நமக்கு அருகே உள்ள நிலப்பகுதிகளில் சூரியனின் தாக்கம் நிலநடுக்கோட்டை கடந்து மேல் நோக்கி முன்னேறுகையில் இலங்கையின் தெற்கு பகுதிகளில் தான் முதலில் காற்று குவிதல் அதிகரிக்க வேண்டும்.

ITCZ வடக்கு நோக்கி முன்னேறி மே மாதத்தில் அந்தமான் நிகோபார் தீவுகளை அடைகையில்    அந்தமான் நிகோபார் பகுதிகளில் பருவமழை தொடங்கி விட்டதாக அறிவிக்கப்படுகிறது. South west monsoon Axis என்பது Inter Tropical convergence Zone (ITCZ) ஐ தான் குறிக்கிறது.

பூமியின் தென் அரைக்கோலத்தில் (southern hemisphere) மஸ்க்கரீன் உயர் அழுத்தமானது (Mascarene Anticyclone) ஏப்ரல் மாதத்தில் தான் மேற்கு நோக்கி நகர தொடங்குகிறது.இதன் சுழற்சியினால் அரபிக்கடல் காற்று தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில்  இந்திய நிலப்பரப்பினுள் நுழைய வழி வகை செய்கிறது.பூமியின் தெற்கு அரைக்கோலத்தில் தென் கிழக்கு திசையில் பயணிக்கும் காற்று வடக்கு அரைக்கோலத்தில் தென் மேற்கு திசையில் பயணிக்க காரணம் கொரியாலிஸ் force (Coriolis force) தான்.Coriolis force தொடர்பாக விரிவான தகவல்களை அறிய - https://youtu.be/vqBhRrUb198

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...