தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-04-2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | april 9 2020 last 24 hours rainfall data


09-04-2020 நேரம் காலை 9:40 மணி நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் நாம் எதிர்பார்த்தது போல சிறப்பான மழை பதிவாகியுள்ளதை அறிய முடிகிறது.நேற்றைய சூழலுக்கும் இன்றைக்கும் பெரிய வித்தியாசங்கள் என்று எதுவும் இருக்கப்போவதில்லை.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் , மேற்கு , மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும்.இன்றும் #சேலம் மாவட்டத்தில் நண்பகளுக்கு பிறகு ஏற்காடு மலை அருகே மழை மேகங்கள் குவிவதை நீங்கள் காத்திருந்து காணலாம்.நேற்று #திருச்சி மாநகரின் புறநகர் பகுதிகளில் மழையை பதிவு செய்த வலுவான மழை மேகங்கள் மாநகராட்சியின் சில பகுதிகளில் மழையை பதிவு செய்தது ஆயினும் வலுவான பகுதி #கரூர் மாவட்டத்தை அடைந்தது அதனுடைய விளைவே #மயிலம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 76 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.இன்றும் சிறப்பான மழை தமிழக உள் மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது.


கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

===============================

மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 76 மி.மீ

பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 46 மி.மீ

பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 42 மி.மீ

பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  41 மி.மீ

தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 36 மி.மீ

செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) -  34 மி.மீ

பெரம்பலூர் AWS (பெரம்பலூர் மாவட்டம்) -  31 மி.மீ

பொண்ணையார் அணை (திருச்சி மாவட்டம்) -  31 மி.மீ

ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  29 மி.மீ

ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 29 மி.மீ

வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 28 மி.மீ

 மாயனூர் தடுப்பணை (கரூர் மாவட்டம்) -  26 மி.மீ

வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 21 மி.மீ

வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 20 மி.மீ

பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 19 மி.மீ

சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 18 மி.மீ

சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ

அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ

அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 16 மி.மீ

தேக்கடி (தேனி மாவட்டம்) -15 மி.மீ

கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) -  15 மி.மீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ

புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ

பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 13 மி.மீ

வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ

போச்சாம்பள்ளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) -  12 மி.மீ

நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ

எம்ரால்டு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ

கோயம்புத்தூர் தெற்கு  (கோவை மாவட்டம்) - 12 மி.மீ

சின்கோனா (கோவை மாவட்டம்) - 12 மி.மீ

மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) -  12 மி.மீ

வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ

புலிவலம் (திருச்சி மாவட்டம்) -  10 மி.மீ

பையூர் (தர்மபுரி மாவட்டம்) -  10 மி.மீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ

ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 9 மி.மீ

பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) -  8 மி.மீ

மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 8 மி.மீ

நெடுங்கல்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ

காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ

சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 8 மி.மீ

சிற்றாறு-I (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ

ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 7 மி.மீ

வி.களத்தூர்(பெரம்பலூர் மாவட்டம்) -  7 மி.மீ

கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ

கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 5 மி.மீ

ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  5 மி.மீ

மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 4 மி.மீ

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ

அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) -  4 மி.மீ

சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 4 மி.மீ

மறநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) -  3 மி.மீ

கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ

பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 3 மி.மீ

நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ

தோகைமலை (கரூர் மாவட்டம்) - 3 மி.மீ

நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 3 மி.மீ

பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 3 மி.மீ

மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  2 மி.மீ

தென்காசி (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ

பரமத்திவேலூர் (கரூர் மாவட்டம்) - 2 மி.மீ

குந்தா பாலம்(நீலகிரி மாவட்டம் ) - 2 மி.மீ

கடவூர் (கரூர் மாவட்டம்) - 2 மி.மீ

செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ

பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  2 மி.மீ

தொட்டபெட்டா , உதகை (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ

வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ

குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ

ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 1 மி.மீ

வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ

கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) -1 மி.மீ

அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?
==============================

நிகழ் நேர தகவல்
=================
09-04-2020 நேரம் பிற்பகல் 1:50 மணி தற்சமயம் தமிழகத்தை ஒட்டியிருக்கும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்ட பகுதிகளில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #சென்னை மாநகரின் மேற்கு புறநகர் பகுதிகளிலும் சில நிமிடங்களுக்கு முன்பு மழை மேகங்கள் அங்கும் இங்குமாக சில இடங்களில் சிறு சிறு மழை மேகங்கள் பதிவாகி வந்தன தற்சமயம் #ஸ்ரீபெரம்பத்தூர் , #சுங்கவார்ச்சத்திரம் அருகே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் அந்த மழை மேகங்கள் கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்து பின்னர் வலுவிழக்க தொடங்கும்.தெற்கு ஆந்திராவை பொறுத்தவரையில் தற்சமயம் #சூலூர்பேட்டை , #ஸ்ரீஹரிகோட்டா , #ஸ்ரீசிட்டி என பல்வேறு பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இதன் தாக்கத்தால் #கும்மிடபூண்டிக்கு வடக்கே உள்ள #எலவூர் , #மணலூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #புலிகேட் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறைகாற்றுடனான மழை பதிவாகலாம் அதேபோல் #ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியை ஒட்டிய #திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மேலும் தற்சமயம் காலையில் நான் குறிப்பிட்டு இருந்தது போல  #ஏற்காடு அருகே உள்ள பகுதிகளிலும் நண்பகளுக்கு பிறகு மழை மேகங்கள் குவிய தொடங்கி வருகின்றன.#திருவாரூர் மாவட்டம் #மன்னார்குடி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த 24 மணி நேர வானிலை
=============================
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் உள் , மேற்கு உள் ,தென் உள்  மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்றும் #ஆந்திர மாநிலம் #திருப்பதி உட்பட  #சித்தூர் மாவட்ட பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம் அதே போல் #திருவள்ளூர் , #வேலூர் , #இராணிப்பேட்டை மற்றும் #காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.

இன்றும் #சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதே போல் #நாமக்கல் , #திருச்சி மாவட்டங்களிலும் இன்று பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மேலும் #மதுரை மாவட்டத்தில் #மதுரை மாநகர் அல்லது அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவைத்தவிர்த்து #ஈரோடு , #திருப்பூர் , #திண்டுக்கல் , #விருதுநகர் , #தேனி , #கோவை , #நெல்லை , #தென்காசி என மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.

இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுக்கோட்டை , ராமநாதபுரம் தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் மாவட்டங்களின் #கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பதிவாகலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...