தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 06 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

06-04-2020 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

06-04-2020 நேரம் காலை 10:50 மணி நான் கடந்த வாரம் பதிவிட்டு இருந்த குரல் மற்றும் எழுத்து பூர்வமான பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இந்த பதிவுடன் 05-04-2020 ஆகிய நேற்று இரவு 9:15 மணி வாக்கில் பதிவு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படத்தையும் இணைத்துள்ளேன்.கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகி வந்த தகவல்களை நான் நிகழ் நேரத்திலும் அவ்வப்பொழுது பதிவிட்டு வந்தேன்.அந்த செயற்கைக்கோள் படம் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் #சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகி வந்தது அதே போல நேற்று பிற்பகலில் மதுரை , விருதுநகர் மாவட்டங்கள் உட்பட தென் உள் மற்றும் தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகி வந்தது இதன் காரணமாக தமிழக உள் ,தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேகங்கள் சூழ்ந்து இருப்பதை அந்த படத்தின் வாயிலாக காணலாம்.

இந்த காலகட்டத்தில் பதிவாகும் மழையை நாம் காற்று முறிவு (Wind Discontinuity) மழை என வழங்குவோம்.மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் ஒன்றோடு ஒன்று எதிர் திசையில் நெருங்குகையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அழுத்தம் குறைந்து காற்று மேலெழும்பி மேகங்கள் உருவாகி அவை குளிர் அடைந்து ஒடுங்கி அந்த பகுதிகளில் வெப்பசலன மழையை பதிவு செய்கிறது.பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் மேற்கு திசை காற்று உள் மாவட்டங்களில் ஊடுருவ தொடங்குகையில் உருவாகும் இந்த மழையானது சேலம் , கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் செய்யப்படும் மாம்பழ அறுவடைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.மாம்பழம் சரியான பக்குவத்தில் முதிர்ச்சி அடைய இந்த மழை அவசியம்.07-04-2020 ஆகிய நாளை மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய 3 அல்லது 4 நாட்கள் தமிழக மேற்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை ஆங்காங்கே சில இடங்களில் பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது.08-04-2020 மற்றும் 09-04-2020 ஆம் தேதிகள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய நாட்களாக இருக்கும்   என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அந்த தேதிகளில் திருச்சி , மதுரை உட்பட தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.ஒவ்வொரு நாளும் அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகள் தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.

தூத்துக்குடி மழை வாய்ப்புகள்
==========================
இந்த ஏப்ரல் மாதம் பதிவாகும் மழை என்பது #தூத்துக்குடி பகுதிக்கும் முக்கியமானது பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதம் பதிவாகும் வெப்பசலன மழைக்கு பிறகு தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில் #தூத்துக்குடி நகர பகுதி உட்பட #தூத்துக்குடி மாவட்டத்தின் அநேக பகுதிகளிலும் மழைக்காண வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவே. இவ்விரண்டு மாதங்களில் அங்கும் இங்குமாக பதிவாகும் வெப்பசலன மழையை தவிர்த்து மழைக்காக வட கிழக்கு பருவமழை காலகட்டம் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.11-04-2020 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு #தூத்துக்குடி மற்றும் #ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடம் கூடிய வெப்பசலன மழை அவ்வப்பொழுது பதிவாகலாம்.

வட கடலோர மாவட்டங்களின் இரவு நேர வெப்பநிலை
=====================
வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் இரவு நேர வெப்பநிலையானது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதிகமாக உணரப்படலாம்.மேலும் அதிகமான ஒப்பு ஈரப்பதத்தின் தாக்கத்தால் #புதுச்சேரி ,  #காரைக்கால் , #நாகப்பட்டினம் , #கடலூர் , #காஞ்சிபுரம் , #செங்கல்பட்டு , #சென்னை , #திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் இரவு நேரங்களில் வியர்வை அதிகமாக வெளியேறுவதை உணர்வீர்கள்.பகல் நேரத்திலும் வியர்வை அதிகமாக வெளியேறும்.வட கடலோர மாவட்ட மக்கள் இன்று முதல் வீட்டில் இருந்தாலும் அதிக நீரை உட்கொள்வது நல்லது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் #பெங்களூரு , #மைசூரு சுற்றுவட்டப் பகுதிகள் #சேலம் மாவட்ட பகுதிகள் அதிக பலனை அடையும் என நம்பலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...