தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 07 கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

07-04-2020 நேரம் காலை 9:50 மணி இன்று அதிகாலை நேரத்தில் கோவை , #உடுமலைப்பேட்டை உட்பட கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.நேற்று #ஓசூர் , #தென்கனிக்கோட்டை உட்பட #கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலும் #சேரன்மாதேவி  உட்பட #நெல்லை மாவட்ட பகுதிகளிலும் த்ர்மபுரி மாவட்ட பகுதிகளிலும் இதர பிற பகுதிகளிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.மேலும் நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் சேலம் , தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் #பெங்களூரு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் #கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.மேலும் இன்று #திருச்சி மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் இடியுடன்  கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை விரிவாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்.
============================
தென்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 35 மி.மீ
ஓசூர் தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 22 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 20 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
சேரம்பாடி (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
சத்தியமங்களம் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
புதுசத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை  (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
ஓ வேலி  (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 3 மி.மீ
வுட் பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 3 மி.மீ
பில்லிமலை எஸ்டேட்  (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
தமிழ்நாடு விவசாய பல்கலை ,கோவை (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 2 மி.மீ
அதர் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
பீளமேடு (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
எம்ராலட் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
நெல்லை (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...