தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 17 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

17-04-2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் சித்தாறு அணை சுற்றிவட்டப் பகுதிகள் உட்பட #கன்னியாகுமரி  மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் , #விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் என தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு பகுதிகளில்  ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகியுள்ளது மேலும் நாம் எதிர்பார்த்தது போலவே #தஞ்சை மாவட்ட கடலோர பகுதியான #அதிராம்பட்டினம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது இவைத்தவிர்த்து நேற்று காலை #நாகை மாவட்டம் #வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 21 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை சில இடங்களில் பதிவாகலாம் இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல உள் மற்றும் வட மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் அதிகரிக்க தொடங்கலாம் வறண்ட வானிலையே தொடரும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===============================
சிவலோகம் - சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம்) - 31 மி.மீ
சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 21 மி.மீ
கழியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 13 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 3 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 3 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ

#puducherry_weather

Vedaraniyam வேதாரண்யம் Kaliyal அதிராம்பட்டினம் Adirampattinam

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...