தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 20 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

20-04-2020 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழக தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.குறிப்பாக தேனி மாவட்டம் #போடிநாயக்கனூர் உழவர் சந்தை அருகே கிட்டத்தட்ட 83 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது அதே சமயம் #போடிநாயக்கனூர் மேற்கு பகுதிகளில் 9 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று உள்ளது.இவை தவிர்த்து அதிகாலை நேரத்தில் #ராமநாதபுரம் , #தூத்துக்குடி மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது நேற்று பிற்பகலில் #நீடாமங்கலம் , #கும்பகோணம் என #திருவாரூர் மற்றும் #தஞ்சை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை பதிவானது அதே போல் சேலம் மாவட்ட மேற்கு மற்றும் #ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை சில இடங்களில் பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

Jetstreams என்றால் என்ன ? என்று விளக்குமாறு முன்பு சிலர் என்னை குறுந்தகவல்கள் வாயிலாக தொடர்பு கொண்டிருந்தீர்கள்.அதன் முதல் பகுதியை ஒரு காணொளியாக வெளியிட்டு இருக்கிறேன்.உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் அதனை காணலாம் - https://youtu.be/zQKjaA1R7F0

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
===============================
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 83 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 42 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 22 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 21 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 15 மி.மீ
தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம்) -  15 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 14 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  12 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 9 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
போடிநாயக்கனூர் மேற்கு (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
வைப்பார் (தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
ஈரோடு AWS (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  4 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) -  3 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) -  3 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 1 மி.மீ 

இன்னமும் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட மழை தகவல்கள் முற்றிலும் வெளியாகவில்லை அதே போல் #கும்பகோணம் பகுதிகளின் மழை அளவு கிடைக்கப்பெறவில்லை.ஊரடங்கின் காரணமாக மழை அளவுகள் கிடைக்கப் பெறுவதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.


#puducherry_weather

Bodinayakkanur Bodinayakkanur - போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர் - BODI நீடாமங்கலம் கும்பகோணம் மாநகரம் / Kumbakonam City ராஜபாளையம்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...