தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 26 கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

26-04-2020 நேரம் காலை 9:30 மணி தற்சமயம் நாம் எதிர்பார்த்த படி #புதுச்சேரி மற்றும் #கடலூர் மாவட்டங்களில் மழை ஆங்காங்கே பதிவாகி வருவதை அறிய முடிகிறது.#திருவண்ணாமலை உட்பட #திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்சமயம் சிறப்பான மழை பதிவாகி வரலாம்.#மகாபலிபுரம் - #செங்கல்பட்டு உட்பட #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட #புறவழிசாலை மற்றும் #கிழக்குகடற்கரைசாலை என பல்வேறு பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.#திருக்கோவிலூர் , #திருவரங்கம் , #சாத்தனுர் , #சின்னியம்பேட்டை என பல்வேறு பகுதிகளிலும் தற்சமயம் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.நேற்று தமிழக உள் மவட்டங்களில் பதிவான மழையை தவிர்த்து  இன்று அதிகாலை அதாவது நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேரத்தில்  ஜவ்வாது மலை அருகிலும் #காணியம்பாடி அருகிலும் மீண்டும் வலுவான மழை மேகங்கள் உருவாக தொடங்கின அதன் பின்னர் அதிகாலை நேரத்தில் #சென்னை மாநகர் உட்பட #காஞ்சிபுரம் , #செங்கல்பட்டு மற்றும் #திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் என  #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் சிறப்பான அளவு மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் #காஞ்சிபுரம் மாவட்டம் #ஸ்ரீபெரம்பத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 89 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்கள் தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.தற்பொழுது இந்த பதிவில் அனைத்து பகுதிகளின் மழை நிலவரத்தை பதிவு செய்கிறேன்.

அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகளை காண - https://youtu.be/jHLu2N9vDx0

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 89 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 57 மி.மீ
கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம்) - 50 மி.மீ
மயிலாப்பூர் , DGP அலுவலகம் (சென்னை மாநகர் ) - 49 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 48 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 45 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 45 மி.மீ
சூலகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 43 மி.மீ
சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 39 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 38 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 38 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 35 மி.மீ
செஞ்சம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 32 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 32 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 31 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 28 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 26 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 26 மி.மீ
திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 25 மி.மீ
ஜமீன்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 23 மி.மீ
மதுராந்தகம் தாலுக்கா அலுவலகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 21 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 20 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 20 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 19 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 18 மி.மீ
வேம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 18 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 15 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 13 மி.மீ
ஜமுனமரத்துர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
ராஜசிங்கமங்களம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
தாம்பரம் (தாலுக்கா அலுவலகம்) - 10 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ

நிகழ் நேர தகவல்களை பதிவு செய்ய வேண்டியது உள்ளது.ஆகையால் 10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை பதிவிட்டு இருக்கிறேன்.10 மி.மீ க்கும் குறைவாக நிறைய பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது இந்த பட்டியலில் இடம்பெறாத உங்கள் பகுதியின் மழை நிலவரத்தை நீங்கள் அறிய விரும்பினால் உங்களின் ஊரின் பெயரை பதிவு செய்யயுங்கள்...காலை 8:30 மணிக்கு பிறகு பதிவான பகுதிகளின் மழை நிலவரம் நாளைய பட்டியலில் இடம் பெறும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...