தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 9 மாலை 4:20 மணி சென்னையில் சிறப்பாக பதிவாகி வரும் வெப்பசலன மழை | 3 மாதங்களுக்கு பிறகு இடியுடன் கூடிய மழை

09-04-2020 நேரம் மாலை 4:20 மணி #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சிறப்பான மழை தற்சமயம் பதிவாகி கொண்டு இருப்பதை ராடார் படங்களின் வாயிலாக அறிய முடிகிறது.மேலும் #காஞ்சிபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் தற்சமயம் மிக மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அப்பகுதிகளில் தற்சமயம் பலத்த சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய மழை பதிவாகி வரலாம்.தற்சமயம் #அடையாறு , #வேளச்சேரி , #தியாகராயநகர் , #மயிலாப்பூர் என #சென்னை மாநகரின் அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #பெருங்களத்தூர் , #கூடுவாஞ்சேரி , #தாம்பரம் , #பல்லாவரம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் தற்சமயம் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.இன்னும் சற்று நேரத்தில் #செங்கல்பட்டு சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகலாம் தற்சமயம் #மறைமலைநகர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.தற்சமயம் #மறைமலைநகர் - #சென்னை இடைப்பட்ட அநேக புறவழிச்சாலை பகுதிகளிலும் மழை பதிவாகி வருகின்றன அடுத்த சில நிமிடங்களில் #மாமண்டூர் அருகிலும் மழை பதிவாகும்.மேலும் #திருவண்ணாமலை மாவட்டம் #செய்யாறு , #இஞ்சிமேடு , #காஞ்சிபுரம் , #வாலாஜாபாத் சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

மேலும் நாம் எதிர்பார்த்தது போல் #வேலூர் , #கானியம்பாடி , #குடியாத்தம் உட்பட #வேலூர் மாவட்ட பகுதிகளிலும் #போளூர் , #சாத்தனூர் உட்பட #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இவைத்தவிர்த்து #ஈரோடு மாவட்டம் #பவானிசாகர் அணை சுற்றுவட்டப் பகுதிகளிலும் #தாராபுரம் அருகே #குண்டட்டம் மற்றும் #பல்லடம் அருகிலும் #தட்டையங்கார்ப்பேட்டை , #கண்ணனூர் உட்பட #திருச்சி மாவட்டம் #துறையூர் அருகே உள்ள பகுதிகளிலும் சிவகங்கை மாவட்டம் #திருபுவனம் மற்றும் #தேனி மாவட்டம் #மேகமலை அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அதேபோல் #கிருஷ்ணகிரி - #பர்கூர் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...