தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-04-2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | மீண்டும் வெப்பசலன மழை உள் மாவட்டங்களில் எப்பொழுது?

21-04-2020 நேரம் காலை 11:10 மணி நாம் எதிர்பார்த்தது போலவே நேற்றும் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகியுள்ளது.இது தொடர்பான தகவல்களை நேற்றைய எனது பிற்பகல் நேர குரல் பதிவில் youtube பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன்.#தேனி மாவட்டம் #போடிநாயக்கனூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 29 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

மீண்டும் தமிழக உள் மாவட்டங்களில் எப்பொழுது மழை பதிவாக தொடங்கலாம்?
============================
24-04-2020 ஆம் தேதி முதல் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை மீண்டும் பதிவாக தொடங்கலாம்.#பெங்களூரு , #தர்மபுரி , #கிருஷ்ணகிரி , #சேலம் , #திருப்பத்தூர் மற்றும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் இந்த வெப்பசலன மழையால் அதிக பலனை அடையும் இவைத்தவிர்த்து மதுரை , திருச்சி ,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அவ்வப்பொழுது வெப்பசலன மழை பதிவாகும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 29 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 28 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 8 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 5 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) -  4 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) -  2 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 1 மி.மீ
சிவகிரி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ

#puducherry_weather

போடிநாயக்கனூர் - BODI தென்காசி தென்காசி மாவட்டம் Thenkasi Thirunelveli திருநெல்வேலி

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...