தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் கனவுகள் | விளையாட்டு மைதானமும் விமான நிலையமும் | துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

நான் பள்ளி பருவத்தில் இருந்த பொழுது #காரைக்கால் பகுதியில் விளையாட்டு மைதானம் கட்டவும் விமான நிலையம் கட்டவும் இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.மைதானம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் நாம் அந்த மைதானத்தில் பயிற்சி எடுத்து ஒரு சர்வதேச விளையாட்டு வீராக ஆகிவிடலாம் என்று கூட கனவுகள் கண்டுள்ளேன்.என்ன செய்வது 80 களின் குழந்தைகளாக பிறந்து (80s Kids)  90 களில் சுற்றி திரிந்த எங்களுக்கு 10 ஆம் வகுப்புவரை அந்நாளில் உலகம் எப்படி இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறது.அந்த வயதில் நான் அலைபேசியை பார்த்தது கூட கிடையாது.பள்ளி முடிந்ததும் தினமும் மிதி வண்டியில் மைதான கட்டுமான பனிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தூரத்தில்  இருந்து பார்த்து செல்வது வழக்கம்.அச்சமயங்களில் பள்ளியில் இருந்து வீடு திரும்ப இவ்வளவு நேரமா என்று பெற்றோர்களிடம் வாங்கிய திட்டுக்கள் ஏராலம்.ஆனால் சில நாட்களிலேயே மைதான கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.நானும் எனது மைதான கனவுகளை களைத்து விட்டு பள்ளி விட்டால் வீடு படிப்பு என இயல்பான உப்பு சப்பு இல்லாத வழக்கமான 80's Kids இன் வாழ்வியல் முறைக்கே திரும்பிவிட்டேன்.

காலங்கள் ஓடின....ஒருவழியாக மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது சில நாட்களுக்கு முன்பு எனது மகனுடன் சென்று வந்தேன்.அச்சமயமும் வெளிப்புறத்தில் மைதான கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தன கடந்த சில ஆண்டுகளாக அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக விளையாட்டு மைதானம் என்று பேரளவுக்காவது ஒன்று இருக்கிறதே என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

ஆனால் விமான நிலையம் அது வெறும் கனவாகவே உள்ளது.நடுவில் ஒரு முறை இந்தியாவின் முதல் தனியார் SUPER AIRPORT காரைக்கால் பகுதிக்கு வருவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின மத்திய அரசும் முதல் கட்ட பனிக்கு ஒப்புதல் வழங்கியதாக தெரியவருகிறது.இதற்காக புதிய இடமும் ஒதுக்கப்பட்டு நில கையகப்படுத்தப்படும் நிகழ்வும் அரங்கேறிவது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.

நானும்  காரைக்காலுக்கு super விமான நிலையம் வரும்...என காத்திருந்த நாட்கள் போய் சில வருடங்களுக்கு பிறகு ...காரைக்காலுக்கு சிறிய விமான நிலையம் வரும்......என காத்திருந்தேன்..
இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு காரைக்காலுக்கு விமான நிலையம் வரும் என கத்திருத்தேன்.

தற்சமயம் வெறும் வரும்........மட்டும் தான் என்னிடம் உள்ளது...

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...