தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

INTER TROPICAL CONVERGENCE ZONE (ITCZ) என்றால் என்ன ? | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

15-04-2020 நேரம் காலை 9:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் #தூத்துக்குடி பகுதிகளிலும் சில பகுதிகளில் மழை பதிவாகி இருப்பதை அறியமுடிகிறது #முள்ளிக்காடு அதாவது #தூத்துக்குடி துறைமுகம் அருகே கிட்டதட்ட 8 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.மேலும் #நெல்லை மாவட்டம் #பாளையங்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளில் 18 மி.மீ அளவு மழையும் #திருநெல்வேலி நகர பகுதிகளில் அதாவது #திருநெல்வேலி தாலுக்கா அலுவலகத்தில் கிட்டதட்ட 12 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.நெல்லை , தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் இதர பிற பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவியுள்ளது.

அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக வட  மற்றும் உள் மாவட்டங்களின் அநேக இடங்களிலும் வறண்ட வானிலையே தொடரும்.பகல் நேர வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க தொடங்கலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் கேரளாவிலும் அதனை ஒட்டிய தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்பொழுது சில இடங்களில் மழை பதிவாகலாம் இவைத்தவிர்த்து தூத்துக்குடி நெல்லை உட்பட தென் கடலோர மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் ஓரிரு நாட்கள் சில இடங்களில் மழை பதிவாகலாம்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடிகையில் தற்சமயம் பகல் நேர வெப்பநிலையில் அதிக அளவிலான உயர்வு என்பது தென்படவில்லை.இதுவரையில் எந்த ஒரு பகுதியிலும் 41°C வெப்பம் உள் மாவட்டங்களில் பதிவாகவில்லை. வெப்பசலன மழைக்கு ஆதாரமே வெப்பநிலை மாற்றங்கள் தான்.Inter Tropical Convergence Zone (ITCZ) இன் பூமியின் வட அரைக்கோள (Northern Hemisphere) வருகை என்பது சற்றே தாமதமடைந்து உள்ளது.இதற்கு முந்தைய பதிவில் அதனுடைய வருகையை அறியவே நான் மார்ச் மாதங்களில் இலங்கையின் தெற்கு பகுதிகளில் காற்று குவிதல் எப்படி உள்ளது என்பதனை உற்று நோக்குவேம் என்று ஒருமுறை குறிப்பிட்டு இருந்தேன்.


இந்த மாத இறுதி வாரத்திலும் மார்ச் மாதத்திலும் தமிழக உள் மாவட்டங்களில் மீண்டும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நேரம் இருக்கிறது என்பதற்காக தினமும் வெப்பநிலை அளவுகளுடன் ஒரு எழுத்து பூர்வமான பதிவை பதிவு செய்து.உங்களுடைய பொன்னான நேரத்தை நான் விரையம் ஆக்க விரும்பவில்லை.உங்களுக்கு தினந்தோறும் பதிவாகும் வெப்பநிலை அளவுகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் இந்த இணைப்பில் http://www.imdchennai.gov.in/obs_data.htm பார்த்து கொள்ளுங்கள்.வானிலையில் குறிப்பிட தக்க பயனுள்ள மாற்றங்கள் ஏற்படுகையில் கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமான எழுத்து பூர்வமான பதிவுகளை பதிவிடுகிறேன்.

Inter tropical convergence zone (ITCZ) தொடர்பாக அடிப்படை தகவல்களையும் இந்திய பருவமழையில் அதனுடைய பங்கு என்ன என்பது தொடர்பாகவும்  ஒரு காணொளியை  பதிவிட்டு இருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை காண - https://youtu.be/5JW8eEuJcqE அடுத்த வரக்கூடிய நாட்களில் மேலும் பல உபயோகமான தகவல்களை பதிவேற்றம் செய்ய இருக்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 18 மி.மீ
திருநெல்வேலி தாலுக்கா அலுவலகம் (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
தூத்துக்குடி துறை முகம் (தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 6 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 4 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...