தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

04.05.2020 வானிலை அறிக்கை

04-05-2020 நேரம் காலை 10:30 மணி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய மூச்சுமுட்ட முயன்று வருகிறது என சொல்லலாம்.ஆன பொழுதும் கடல் சார் அலைவுகளின் (MJO) சாதகமற்ற சூழல்களின் காரணமாக அடுத்த சில நாட்களில் அதாவது 07-05-2020 அல்லது 08-05-2020 ஆம் தேதி வாக்கில் அது முற்றிலும் வலுவிழந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான மேலோட்டமான தகவல்களை 02-05-2020 ஆம் தேதி அன்று நமது Youtube பக்கத்தில் குரல் பதிவாக பதிவிட்டு இருந்தேன்.இன்றைய பிற்பகல் நேர குரல் பதிவிலும் இது தொடர்பாக விரிவாக பதிவிடுகிறேன்.மொத்தத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த சில நாட்கள் உட்பட அடுத்து வரக்கூடிய சில நாட்களையும் சேர்த்து தமிழக உள் மாவட்டங்களில் பதிவாக வேண்டிய வெப்பசலன மழை தடைப்பட்டு இருப்பது தான் மிச்சம்.

மீண்டும் உள் மாவட்டங்களில் வெப்பசலன மழை எப்பொழுது பதிவாக தொடங்கலாம்
==========================
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்த பிறகு மீண்டும் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பசலன மழை அதிகரிக்க தொடங்கும்.கடலோர மாவட்டங்களிலும் அதன் பின்னர் ஒரு சில சில நாட்கள் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.நிகழும் மே மாதத்தில் தமிழகத்தில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

என்னை பொறுத்தமட்டில் மே 10 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு குமரிக்கடல் அல்லது அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.

04-05-2020 ஆகிய இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய சில பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.இவைத்தவிர்த்து உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களையும் பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன். கடந்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #சேலம் மாவட்ட மேற்கு மற்றும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.

கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகள்
==========================
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
கழியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
இரணியல் (கண்ணியகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 3 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
சின்னக்கல்லார் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 1 மி.மீ
குமாரபாளையம் (ஈரோடு மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...