தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11.05.2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

11-05-2020 நேரம் காலை 10:10 மணி நாம் எதிர்பார்த்தது போல இன்று அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.#தூத்துக்குடி நகர பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.நாளையும் அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம்.இன்றும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களை பொறுத்தவரையில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை அதாவது அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

மேலடுக்கு சுழற்சியின் நகர்வுகள்
========================
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி தொடர்கிறது.தற்சமயம் மாதிரிகள் அது வலுப்பெற்று #Amphan புயலாக உருவெடுத்து #விசாகப்பட்டினம் அடைந்து அதன்பின்னர் கரையோரத்திலயே வளைந்து (#re_curve)  வங்கதேசம் அல்லது மியான்மர் பகுதியை அடைய முற்படும் என்பதை போன்ற கணிப்பை வெளிப்படுத்து வருகின்றன. அடுத்த 2 நாட்களில் அது மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியிலயே வளைந்து மியான்மர் கரையை அடையும் என்பது போல கூட காட்டலாம்.எதுவாயினும் நான் முன்பு சொன்னதை போல அது வலுவடைந்தால் நம்மை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.அதே போல #அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இயல்புக்கு முன்பாகவே தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதும் உண்மையே.ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வரை உருவாகவில்லை.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 38 மி.மீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 30 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 22 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
தீர்த்தாண்டனத்தம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
தூத்துக்குடி துறை முகம் (தூத்துக்குடி மாவட்டம்) - 9 மி.மீ
வலிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 9 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
ஆவுடையார் கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 5 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 4 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 3 மி.மீ
தரங்கம்பாடி (நாகை மாவட்டம்) - 3 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 1 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...