தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17 மே 2020 தீவிர புயலாக உருவெடுத்த AMPHAN

17-05-2020 நேரம் நண்பகல் 12:35 மணி நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அந்த #AMPHAN (#ஆம்புன்) புயலானது இன்று காலை ஒரு தீவிர புயலாக (#Severe_Cyclone) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவெடுத்தது.அது மேலும் தீவுரமடைந்து வருவதால் அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு மிக தீவிர புயல் (#Very_Severe_Cyclone) என்கிற நிலையை அடையலாம்.அதன் பிறகு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது அதி தீவிர புயல் என்கிற நிலையையும் அடையலாம்.இன்று காலை 9:00 மணி வாக்கில் அது Latitude 11.4°N மற்றும் Longitude 86°E இல் நிலைக் கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.அதாவது அதனுடைய மையப்பகுதியானது #பரங்கிப்பேட்டை க்கு கிட்டத்தட்ட 680 கி.மீ க்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டு இருக்கிறது.அடுத்த சில மணி நேரங்களில் அது வடக்கில் நகர்ந்து அதன் பின்னர் வட-வட கிழக்கு திசையில் வளைந்து நகர்ந்து வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைய முனையலாம்.20-05-2020 ஆம் தேதி வாக்கில் அது #ஒடிசா அல்லது #மேற்கு_வங்கத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.

அடுத்த 24 மணி நேர வானிலை
=========================
அடுத்த 24 மணி நேரத்தில் அது வடக்கு திசையில் நகர முற்படும் என்பதால் #கர்நாடக, #தமிழக மற்றும் #கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #கர்நாடக மற்றும் #கேரள மாநில கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#பெங்களூரு உட்பட #கர்நாடக மாநில தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம். தமிழகத்தை பொறுத்தவரையில் நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல  அடுத்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்டம் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம் மேலும் அதுனுடைய நகர்வுகளை பொறுத்து தமிழக வட உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.#டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.வட கடலோர மாவட்டங்களிலும் இன்று அல்லது நாளை மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

#புதுச்சேரி மற்றும் #காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் #காரைக்கால் ,#திருவாரூர் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதனுடைய நகர்வை பொறுத்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.#புதுச்சேரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்றும் நாளையும் #புதுச்சேரி அருகே மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது.அதனுடைய நகர்வு சாதகமாக இருக்கும் பட்சத்தில் #புதுச்சேரி மவட்டத்திலும் இன்று இரவு அல்லது நாளை மழை சில இடங்களில் பதிவாகலாம்.இந்த மழை வாய்ப்புகள் அதனுடைய நகர்வுகளை பொறுத்து சிறு மாறுதல்களுக்கு உட்பட்டவை.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 27 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 21 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
கொல்லிமலை Arg ( நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 4 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 3 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 3 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 2 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...