தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19 மே 2020 அம்பன் (AMPHAN) புயலின் தற்போதைய நகர்வுகள் | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | last 24 hrs rainfall data and amphan super cyclones movement

19-05-2020 நேரம் நண்பகல் 12:35 மணி #AMPHAN சூப்பர் புயலானது இன்று காலை 8:30 மணி வாக்கில் Latitude 16°N மற்றும் Longitude 86.8°E இல் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது சற்று முன்பு நான் அதை Track செய்து வந்தபொழுது அதாவது இன்று நண்பகல் 12:00 மணி வாக்கில் அது Latitude 16.4°N மற்றும் Longitude 86.9°E இல் நிலைகொண்டு இருப்பதை அறிய முடிந்தது இதன் வாயிலாக அது வட-வட கிழக்கு திசையில் தற்சமயமும் நகர்ந்து வருவதை. உறுதி செய்ய முடிகிறது.மேலும் அதனுடைய அதிக பட்ச சுழற்சியின் வேகம் கிட்டத்தட்ட 112 Knots களாக பதிவாகி இருந்தது அதாவது கிட்டத்தட்ட மணிக்கு 207 கி.மீ வேகத்தில் அதனுடைய சுழற்சியால் அதிகபட்சமாக காற்று வீசி வருகிறது இது அதிகம் என்ற பொழுதிலும் நேற்று மாலை மற்றும் இரவுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு என்று தான் கூற வேண்டும். நாம் எதிர்பார்த்தது போல அதன் வலு சற்று குறைய தொடங்கி இருப்பதையும் அறிய முடிகிறது.ஆனபொழுதும் இது பலத்த சேதங்களை விளைவிக்க போதுமானவை.

அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது மேலும் வட-வட கிழக்கு திசையில் நகர்ந்து 20-05-2020 ஆம் தேதியாகிய நாளை மாலை அல்லது இரவில் #மேற்கு_வங்கத்தின் கடலோர பகுதிகளை ஒரு தீவிர புயல் என்கிற நிலையில் நெருங்க முற்படலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம் #கேரள மாநிலத்தில் தற்சமயம் சில இடங்களில் மழை பதிவாகிவரலாம் கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தின் #ஆழப்புழா மாவட்டத்தின் #சேர்த்தலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 140 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்று மாலை முதல் கேரளாவிலும் மழையின் அளவு குறைய தொடங்கலாம்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் இன்று அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம் இதர அநேக பிற பகுதிகளிலும் வரண்ட வானிலையே தொடரும்.இன்று காலை அங்கும் இங்குமாக பதிவான சிறு மழையால் வட கடலோர பகுதிகளில் சற்று ஆறுதலான சூழல் நிலவி வரலாம் ஆனால் அது நிறந்தரமாக அடுத்து வரக்கூடிய 4 -5 நாட்களில் அதிகரிக்க இருக்கும் வெப்பநிலையை எதிர்கொள்ள உதாவது.

முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த வரக்கூடிய 4 அல்லது 5 நாட்களுக்கு #சென்னை , #செங்கல்பட்டு , #திருவள்ளூர் , #வேலூர் , #ராணிப்பேட்டை , #திருவண்ணாமலை , #கடலூர் ,#புதுச்சேரி , #காரைக்கால் ,#திருவாரூர் , #நாகப்பட்டினம் , #மயிலாடுதுறை , #அரியலூர் , #பெரம்பலூர் ,#கள்ளக்குறிச்சி ,#விழுப்புரம் ,#புதுக்கோட்டை , #மதுரை , #சிவகங்கை , #விருதுநகர் , #ராமநாதபுரம் ,#நெல்லை , #தூத்துக்குடி  , #திருப்பத்தூர் ,#விருதுநகர் என அநேக கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் அநேக இடங்களிலும் பகல் நேர வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க தொடங்கலாம்.ஏன் சில உள் மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட வில்லை என கேட்காட்கீர்கள்.நான் எடுத்துக்காட்டாக தான் சில மாவட்டங்களை குறிப்பிட்டு இருக்கிறேன் இதர பிற உள் மவட்டங்களையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
அரூர் ARG (தர்மபுரி மாவட்டம்) - 96 மி.மீ
மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 84 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 50 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  44 மி.மீ
தன்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 31 மி.மீ
அகரம்சீகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 30 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  27 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 24 மி.மீ
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  24 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 21 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  19 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 17 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) -  16 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  16 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) -  15 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்) - 11 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  11 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) -  10 மி.மீ
கீழ்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  10 மி.மீ


நேரமின்மை காரணமாக 10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் தகவல்களை இங்கே பதிவுட்டு உள்ளேன்.இந்த பட்டியலில் இடம்பெறாத 10 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் ஊரின் பெயரை Comment செய்யுங்கள்.

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...