தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 தென் மேற்கு பருவமழை கேரளாவில் எப்பொழுது தொடங்கலாம் | details about upcoming onset of south west monsoon in kerala 2020

15-05-2020 நேரம் காலை 9:00 மணி


கேரளாவில் தென் மேற்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம்? 

==================


Amphan புயல்

============

தற்சமயம் வங்கக்கடலில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்ததே.#Amphan புயல் நாளை உருவாகி அது திசை வட-வட கிழக்கு திசையில் வளைந்து செல்ல தொடங்கியதும் மேடன் ஜூலியன் அலைவின் (#Madden_Julian_Oscillation) சாதகமான கட்டம் சிறப்பான கடல் பரப்பு வெப்பநிலை (SST) மற்றும் சாதகமான #Vertical_Wind_shear உள்ளிட்டவை அவை மேலும் தீவிரமடைந்து ஒரு #தீவிர_புயலாக (#Severe_Cyclone) உருவெடுக்க வழி வகை செய்யும்.அதற்கு மேலும் அது தீவிரமடைந்து ஒரு மிக_தீவிர_புயல் (Very_severe_cyclone) என்கிற நிலையை கூட அது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அடையலாம்.நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது போல இதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது.இந்த #Amphan புயல் தமிழக கரையை நெருங்காது.தற்பொழுது உள்ள சூழலில் அது சென்னைக்கு கிழக்கே ஒரு 600 முதல் 700 கி.மீ தொலைவில் விலகி செல்லும் என நான் கருதுகின்றேன் அதையும் பொறுத்து இருந்து பார்த்து விடலாம்.இந்த புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்புகளாவது ஏதேனும் இருக்குமா? என்று நீங்கள் கேட்கலாம்,உங்களது கேள்விக்கான பதில் இன்றைய பிற்பகல் நேர பதிவில் இருக்கும்.


கேரளாவின் தென் மேற்கு பருவமழை

============================

கேரளாவில் மிக விரைவாக தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஆண்டு 2009 ஆம் ஆண்டு அச்சமயம் இயல்புக்கும் 8 நாட்களுக்கு முன்பாகவே மே 23  ஆம் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.இம்முறை அதற்கான சூழல்கள் இல்லை.தற்பொழுது வங்கக்கடல் பகுதிகளில் நீடித்து வரும் சூழல்களால் #அந்தமான் தீவுகளில் இயல்புக்கு முன்பாகவே அதாவது வருகின்ற 16 அல்லது 17 ஆம் தேதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது தற்சமயம் மாற்றியமைக்கப்பட்ட பருவமழை தொடங்கவிருக்கும் இயல்பான தேதி (மே 22) உடன் ஒப்பிட்டால் அங்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பருவமழை தொடங்கவிருக்கிறது.இந்த புயல் கரையை கடந்த பிறகு மீண்டும் சாதகமான சூழல்கள் நிலவ தொடங்க குறைந்தது 3 அல்லது 4 நாட்களாவது ஆகும்.பூமியின் தெற்கு அரைக்கோலத்தின் தென் கிழக்கு திசை வர்த்தக காற்று வடக்கு அரைக்கோலத்தில் #Coriolis_force இன் காரணமாக திசை மாறி தென்மேற்கு காற்றாக இங்கு வருகிறது.மே 24 ஆம் தேதி வாக்கில் #சோமாலிய கடல் பகுதிகளை அடைந்து வரக்கூடிய காற்று மெல்ல மெல்ல வலுவடைய தொடங்கலாம்.அன்றிலிருந்து ஒரு வாரம் என்று வைத்துக்கொள்வோம்.அதன்படி பார்த்தால் #கேரளாவில் தென் மேற்கு பருவமழையானது அதன் இயல்பான தேதியை ஒட்டியே தொடங்கலாம்.என்னை பொறுத்தவரையில் மே 30 முதல் ஜூன் 2 வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.


இவ்வளவு பெரிய பதிவு தேவையா என்று கூட  உங்களில் சிலர் கேட்கலாம்.இதனை ஆங்கிலத்தில் 6 வரிகளில் பதிவிட்டு விடுவேன்.தமிழில் பதிவிடும் பொழுது இவ்வளவு விளக்கங்கள் தேவை படுகின்றன.இல்லையென்றால் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சி போட்டது போல ஆகிவிடும்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

===========================

சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 62 மி.மீ

சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 38 மி.மீ

வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 32 மி.மீ

சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 30 மி.மீ

பெரியாறு அணை (தேனி மாவட்டம்) - 26 மி.மீ

களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ

திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 17 மி.மீ

கன்னிமார் (கண்ணியகுமரி மாவட்டம்) - 15 மி.மீ

பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ

பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ

புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ

குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ

விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ

ஸ்ரீவில்லுபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ

சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 10 மி.மீ

வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ

சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ

போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ

சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ

ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ

குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ

தேக்கடி (தேனி மாவட்டம்) - 3 மி.மீ

ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 3 மி.மீ

தென்காசி (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ

உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 2 மி.மீ

சோத்துப்பாறை (தேனி மாவட்டம்) - 2 மி.மீ

எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ

சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ

கூடலூர் (தேனி மாவட்டம்) - 1 மி.மீ


#Puducherry_Weather


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...