தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 தென் மேற்கு பருவமழையும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும்.

06-05-2020 நேரம் காலை 11:00 மணி அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்சமயமும் அதே இடத்தில் தொடர்கிறது அதனுடைய அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக இன்னமும் ஒரு தெளிவான விடை கிடைக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்.நாட்களும் வேகமாக நகர்ந்து வருகின்றன வெப்பசலன மழைக்கு ஏதுவான சாதகமான சூழல்கள் உருவாகுவதை இது மேலும் தாமதம் அடைய செய்ய வாய்ப்புகள் உள்ளது.அது வலுவடையாமல் விரைவில் வலுவிழந்து விட வேண்டும் என்பதே தமிழக உள் மாவட்டத்தை சார்ந்த அனைவரின் விருப்பமாக தற்சமயம் இருக்க முடியும்.

தென் மேற்கு பருவமழையும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும்
=======================
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இயல்பாக தென் மேற்கு பருவமழை மே 20 ஆம் தேதி வாக்கில் தொடங்கும்.ஒரு வேளை இந்த குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைகிறது என்றால் அதனுடைய தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்படவே அடுத்த 2 முதல் 3 நாட்களாவது ஆகலாம் அதாவது 09-05-2020 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு என்று வைத்துக்கொள்வோம் அவ்வாறு அது வலுவடைந்து வட-வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு மத்திய  வங்கக்கடல் பகுதிகளில் வலுக் குறைய தொடங்கி வட கிழக்கு திசையில் மியான்மர் அல்லது அதனை ஒட்டிய வங்கதேசத்தை நோக்கி நகர தொடங்கினால் மே 15 ஆம் தேதி வாக்கிலயே அதாவது இயல்புக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்கியதாக அறிவிப்புகள் வெளியாகலாம் ஒருவேளை நாம் குறிப்பிட்ட இந்த பாதையில் அது பயணிக்காமல் அந்தமான் தீவுகளுக்கு பலன் வழங்காமல் மாற்று பாதையில் வலுவுடன் சென்று மியான்மர் கடல் பகுதியை அடையும் பட்சத்தில் அது அந்தமானின் பருவமழைக்கும் உகந்ததள்ள தமிழகத்துக்கும் அது நன்மை வழங்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்காது.அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பருவமழை எப்பொழுது தொடங்கவேண்டும் என்று நிர்ணயம் செய்யும் சக்தியாக தற்சமயம் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திகழ்கின்றது.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் வலுவிழந்து விட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
==========================
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 9 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...