தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அதி தீவிர புயலாக உருவெடுத்த AMPHAN | 2020 மே 18 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

18-05-2020 நேரம் காலை 10:00 மணி நாம் எதிர்பார்த்தது அந்த #AMPHAN புயலானது அதி தீவிர புயல் (#Extremly_Severe_Cyclone) என்கிற நிலையை இன்று காலை அடைந்தது.இன்று காலை 5:30 மணி வாக்கில் அது ஒரு #அதி_தீவிர_புயலாக Latitude 13.2°N மற்றும் Longitude 86.3°E இல் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருந்தது.சற்று முன்பு தனியார் செயற்கைக்கோல் நிறுவனங்களின் உதவியுடன் அதனை நான் Track செய்தபொழுது கிட்டத்தட்ட காலை 9:00 மணி வாக்கில் அது Latitude 13.3°N மற்றும் Longitude 86.4°E இல் நிலைகொண்டு இருப்பதை அறிய முடிகிறது அதனுடைய வட-வடகிழக்கு திசை நகர்வை இது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.அது மேலும் இதே திசையில் பயணித்து 20-05-2020 ஆம் தேதி வாக்கில் ஒரு #மிக_தீவிர_புயல் என்கிற நிலையில் மேற்கு வங்கம் அல்லது வங்கதேசத்தான் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம்.அது கரையை கடக்கையில் மணிக்கு அதிகபட்சமாக 190 கி.மீ  வரையிலும் அப்பகுதிகளில் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.இது கரையை கடக்கும் மாநிலத்தில் இது பெரிய சேதம் விளைவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது.

அதனுடைய நகர்வுகளை பொறுத்து இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#கர்நாடக மாநிலம் #பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளில் சில இடங்களில் வலுவான மழையும் பதிவாகலாம்.அதே போல கேரள மாநில கடலோர பகுதிகள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகலாம்.தமிழக மழை வாய்ப்புகள் தொடர்பான விரிவான தகவல்களை அந்த புயலின் நகர்வுகளுக்கு ஏற்ப பிற்பகலில் விரிவாக பதிவிடுகிறேன்.

நேற்று தமிழக உள் மாவட்டங்களில் நாம் எதிர்பார்த்தது போல சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக #கரூர் மாவட்டம் #பழவிடுதி சுற்றுவட்டப் பகுதிகளில் 126 மி.மீ அளவு மழையும் #புதுக்கோட்டை நகர பகுதியில் கிட்டத்தட்ட 125 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 126 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  125 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 83 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) -  83 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 70 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 70 மி.மீ
பொன்னையாரு அணை (திருச்சி மாவட்டம்) -  66 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 61 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 60 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 55 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 52 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 49 மி.மீ
துவாக்குடி AWS (திருச்சி மாவட்டம்) - 48 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 42 மி.மீ
வரட்டுப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 41 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 38 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 37 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 37 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 37 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
சங்கிரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 33 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 32 மி.மீ
கல்லணை ARG(தஞ்சை மாவட்டம்) - 31மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 29 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
எருமைபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 28 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) -  25 மி.மீ
குண்டேரிப்பள்ளம்(ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 25 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 25 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 24 மி.மீ
கோவில்பட்டி ,மருங்காபுரி தாலுக்கா (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) -  24 மி.மீ
பண்டலூர் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
பரமத்தி வேலூர் (கரூர் மாவட்டம்) - 24 மி.மீ
நந்தியார் , லால்குடி (திருச்சி மாவட்டம்) -  23 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 23 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  22 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 22 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 22 மி.மீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) -  22 மி.மீ
தீர்த்தாண்டாதனம்(ராமநாதபுரம் மாவட்டம்) - 21 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
தேன்கனிக்கோட்டை(கிருஷ்ணகிரி மாவட்டம்) -  21 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
ஒகேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 20 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  20 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
ஈரோடு AWS (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 17 மி.மீ
நாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) -  17 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 16 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  14 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 14 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
பீளமேடு, கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கீழநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி),பென்னாகரம் (தர்மபுரி),திருப்பத்தூர் (சிவகங்கை), கொடநாடு (நீலகிரி), மொடக்குறிச்சி (ஈரோடு), புலிவலம் (திருச்சி),அவுடையார் கோவில் (புதுக்கோட்டை) 10மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
மனமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
அரிமலம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம்(திருச்சி மாவட்டம்) -  8 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
கொடிவேரி (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 7 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மவட்டடம்) - 7 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
கட்டுமாவடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  6 மி.மீ
வெட்டிகாடு(தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) -  5 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 4 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 4 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 4 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 4 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 4 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 3 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 3 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 3 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 3 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 3 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) -  2 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 2 மி.மீ
கருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 2 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர் மாவட்டம்) - 2 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  2 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ


#Puducherry_Weather


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...