தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வங்கக்கடலில் உருவாக இருக்கும் Amphan புயல் |குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதனுடைய நகர்வுகள்

13-05-2020 நேரம் பிற்பகல் 1:30 மணி நாம் முன்பு எதிர்பார்த்து இருந்தது போலவே தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Low_Pressure_Area) இன்று காலை உருவானது.அது மேலும் தீவிரமடைந்து 15-05-2020 ஆம் தேதியாகிய நாளை மறுநாள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Depression) என்கிற  நிலையை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடையலாம்.நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் தீவிரமடைந்து 16-05-2020 ஆம் தேதி வாக்கில் #Amphan_Cyclone (#ஆம்ஃபான்_புயலாக) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அது உருவெடுக்கலாம்.முதலில் அது வட மேற்கு திசையில் நகர முற்பட்டாலும் 17-05-2020 ஆம் தேதி வாக்கில் அதனுடைய திசையை மாற்றிக்கொண்டு வளைந்து கிழக்கு - வட கிழக்கு திசையில் நகர தொடங்கலாம்.நான் முன்பே சில முறை நமது பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா அது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அது நம்மை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று.அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாக அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.எதையும் உறுதி செய்து கொள்ள இன்னும் 2 நாட்கள் காத்திருப்பது நல்லது.அது நம்மை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் ,தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.தற்சமயம் #மன்னார்குடி , #கூத்தாநல்லூர் அருகிலும் #திருத்துறைப்பூண்டி அருகே #வடபாதி பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...