தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆம்பன்- AMPHAN புயலின் நகர்வுகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகுமா? | வெப்பநிலை எவ்வாறு இருக்கும்

15-05-2020 நேரம் பிற்பகல் 1:45 மணி நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த அந்த தீவுர காற்றழுத்த தாழ்வு பகுதியானது (#Well_Marked_Low_Pressure_Area) அதே இடத்தில் நீடிக்கிறது அடுத்த சில மணி நேரங்களில் இன்று அது நாம் எதிர்பார்த்த படியே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (#Depression) உருவெடுக்கலாம்.மேலும் 16-05-2020 ஆகிய நாளை அது (#Amphan_Cyclone) #ஆம்பன்_புயலாக உருவெடுக்கலாம்.அதனுடைய நகர்வுகள் தொடர்பாக நாம் இதற்கு முந்தைய பதிவுகளிலயே நிறைய அலசி விட்டோம்.

கடந்த காணொளியின் இணைப்பு - https://www.facebook.com/1611990775491571/posts/3226297527394213/

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இதனால் ஏதேனும் மழை வாய்ப்புகள் உள்ளதா?
============================
இனி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மழை வாய்ப்புகள் என்பது முற்றிலும் அடுத்து உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் நாளை உருவெடுக்க இருக்கும் புயல் ஆகியவைகளின் நகர்வுகளை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.நேரடியான மழை வாய்ப்புங்கள் இல்லை என்று போதிலும்.17-05-2020 ஆம் தேதி வாக்கில் அது வட-வட கிழக்கு திசையில் விலகி செல்ல முற்படுகையில் அது காற்றை தம்வசம் எவ்வாறு இழுக்கிறது என்பதை பொறுத்தே உள் மற்றும் கடலோர மாவட்டங்களின் மழை வாய்ப்புகள் அமையும்.பொதுவாக இதைப்போன்ற மழை வாய்ப்புகளை கிட்டத்தட்ட உறுதியாக ஒரு 12 மணி நேரத்திற்கு முன்னாள் கூறலாம் மற்றபடி இந்த காலகட்டத்தில் அதாவது ஒரு புயலின் தாக்கத்தால் ஏற்படும் மழை வாய்ப்புகள் மாற்றங்களுக்கு உட்பட்டதே.Windy  செயலியையோ அல்லது மாதிரிகளை பார்த்தோ குழப்பம் அடையாதீர்கள்.

அதே சமயம் அது எப்படி விலகி சென்றாலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.கேரள மாநிலமும் அதிக பயனடையும். மற்றபடி தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் ஒரு 12 மணி நேரத்திற்கு முன்பாக தான் ஓரளவு சரியாக எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாகும் என்று கிட்டத்தட்ட சரியாக கூற முடியும்.பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் அது நம்மை விட்டு விலகி செல்ல முற்படுகையில் குறிப்பாக மே 17 மற்றும் 18 ஆம் தேதிகளின் வாக்கில் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு எந்தெந்த பகுதிகள் என்பதனை அன்றன்றைக்கு பதிவிடுகிறேன்.

தமிழக கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் பகல் நேர வெப்பநிலை உயர்வு
==========================
அந்த புயல் நம்மை விட்டு விலகி செல்கையில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை  தம்வசம் இழுத்து செல்வதால் தமிழக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் அதன்பிறகு பகல் நேர வெப்பநிலையானது மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இதுவரையில் வட கடலோர மாவட்டங்களில் நிகழும் 2020 ஆம் ஆண்டில் ஒரு முறை கூட 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  40°C அளவு வெப்பம் பதிவாகவில்லை.அந்த புயல் விலகி சென்றதும் அதாவது 19 ஆம் தேதி முதல் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலையானது வட கடலோர மாவட்டங்களில் தற்பொழுது நிலவி வருவதை விட 3°C முதல் 5°C வரையில் அதிகரிக்கலாம்.சில பகுதிகளில் அதற்கு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

அடுத்த 24 மணி நேர வானிலை
=======================
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வெப்பசலன மழை பதிவாகலாம் #மூணாறு சுற்றுவட்டப் பகுதிகளில் சற்று வலுவான மழை பதிவாகவே வாய்ப்புகள் உண்டு.தமிழக தென் உள் மாவட்டங்களிலும் இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...