தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சூப்பர் சூறாவளியாக உருவெடுத்த AMPHAN | Super Cyclone AMPHAN formed in central bay of bengal

18-05-2020 நேரம் பிற்பகல் 2:15 மணி மத்திய வங்கக்கடல் பகுதியில் சூப்பர் புயலாக (#Super_Cyclone) ஆக உருவெடுத்தது #AMPHAN (#ஆம்பன்) இது நாம் முன்பு எதிர்பார்த்த வலுவை விட மிக அதிகம் என்றே கூறலாம்.இன்று காலை 11:00 மணி வாக்கில் அதனுடைய அதிகபட்ச சுழச்சியின் வேகம் கிட்டத்தட்ட 121knots க்ளாக இருந்தது அதாவது மணிக்கு 224 கி.மீ என்கிற வேகத்தில் இருந்தது சற்று முன்பு நான் தனியார் செயற்கைக்கோள் உதவியுடன் நான் Track செய்து கொண்டு இருந்தபொழுது அதன் சுழற்சியின் அதிகபட்ச வேகம் கிட்டத்தட்ட 130 knots க்ளாக அதிகரித்து இருந்ததை காண முடிந்தது அதாவது மணிக்கு கிட்டத்தட்ட 241 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக அதன் சுழற்சியால் காற்று வீசி வருகிறது.இந்த சூறாவளி கரையை நெருங்கும் பொழுது சற்று வலு குறைய தொடங்க வாய்ப்புகள் உண்டு ஆனாலும் அது மிக பலத்த சேதத்தை விளைவிக்கக் கூடும்.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதிகபட்சமாக 200 கி.மீ அல்லது அதற்கு அதிகமான வேகத்திலும் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது வட-வட கிழக்கு திசையில் வளைந்து நகர்ந்து 20 ஆம் தேதி வாக்கில் மேற்குவங்கத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது.

இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு #பொள்ளாச்சி , #தாராபுரம் , #உடுமலைப்பேட்டை , #பல்லடம் சுற்றிவட்டப் பகுதிகளில் மணிக்கு அதிகப்பட்சமாக 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.

நாம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சூப்பர் புயல் இந்தியாவில் தடம் பதிக்க காத்திருக்கிறது இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 29 ஆம் நாள் சூப்பர் புயல் ஓடிசாவில் கரையை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழக மழையை பொறுத்தவரையில் மாதிரிகளை நம்பாதீர்கள் சற்று முன்பு நான் அந்த #AMPHAN சூப்பர் புயலை Track செய்த பொழுது அதாவது பிற்பகல் 1:00 மணி வாக்கில் Latitude 13.5°N மற்றும் 86.4°E இல் நிலைகொண்டு இருந்தது.நாம் எதிர்பார்த்ததை விட விரைவாக முன்னேறி சென்று கொண்டு இருப்பதை இது உறுதிபடுத்துகிறது.மேலும் தற்சமயம் #ஊத்தங்கரை அருகே #விஷமங்கலம் மற்றும் #சிங்காரப்பேட்டை சுற்றிவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மற்றபடி பிற பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவில் மழை மேகங்கள் உருவாக தொடங்கவில்லை.பொதுவாக இன்று வட உள் மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது. மழை மேகங்கள் உள் மாவட்டங்களில் அதிகமாக பதிவாக தொடங்கியதும் நிகழ் நேர தகவல்களை பதிவு செய்கிறேன் அதனுடன் இணைத்தே அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகளையும் உறுதி செய்கிறேன்.இது பொறுமை காக்க வேண்டிய நேரம்.

உங்கள் பகுதியில் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...