தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாவட்டத்தில் கொரானா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது | திருநள்ளாறு பகுதியில் தீவிர சோதனை

10-05-2020 #காரைக்கால் மாவட்டத்தில் ஒருவருக்கு #கொரானா நோய் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.இத்தனை நாட்கள் , அதாவது கிட்டதட்ட 47 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு மே 10 ஆம் தேதியாகிய இன்று  மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு  #கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.#காரைக்கால் மாவட்டம் #திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட #சுரக்குடி பகுதியை சார்ந்த 37 வயது ஓட்டுநர் (தனி நபர் பாதுகாப்பு கருதி அவருடைய பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை ) ஒருவரை ஒரு வழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்க கைது செய்தபொழுது அவருக்கு #கொரானா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது அப்பொழுது அவருக்கு #கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் காரணமாக அவரருடைய குடும்பத்தினர் 5 நபர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 8 நபர்களுக்கும்  #கொரானா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் அவரை கைது செய்த காவலர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு இருகின்றனர்.

"என்னடா இது அவருடைய பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு புகைப்படத்தையே பதிவிட்டு இருக்கின்றாயே" என்று நீங்கள் யாரும் ஆவேசப்பட வேண்டாம்.இன்று காலை பழக்கடைக்கு சில பழங்கள் வாங்க சென்று இருந்தேன்.அப்பொழுது ஊரடங்கு எப்படி இருக்கிறது என ஒரு புகைப்படம் எடுக்க எண்ணினேன்.அதனை பார்த்த பழக்கடையில் இருந்த அந்த தம்பி (புகைப்படத்தில் இருப்பவர்) அவரையும் புகைப்படம் எடுக்கும்படி வற்புறுத்தி மலிவு விலையில் பழங்கள் கிடைக்கும் என முகநூலில் பதிவிட சொன்னார்.இதோ பதிவிட்டுவிட்டேன் மற்றபடி அவருக்கும் சுரக்குடி #கொரானா தொற்றுக்கும் எந்த வித தொடர்பு இல்லை.

#காரைக்கால் மாவட்டத்தில் #சுரக்குடி பகுதி சீல் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.


#karaikal_corona #karaikal_covid19 #thirunallar

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...