16-07-2017 (ஞாயிற்றுகிழமை ) விடுமுறை நாள் என்பதாலும் காரைக்காலில் தற்பொழுது மாங்கனி திருவிழா கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் காரைக்காலை அம்மையார் குளம் அருகே பாரதியார் சாலையில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும் வெளியூர்களில் இருந்து நேற்று மக்கள் கூட்டம் காரைக்காலை நோக்கி படையெடுத்தது.சமீப காலமாக விடுமுறை நாட்களில் வெளியூர் மக்கள் காரைக்காலில் குவிந்து வருவது என்பது வாடிக்கையான செய்தி என்றாலும் 16-07-2017 அன்று நேற்று இயல்பை விட கூட்டம் அதிகமாக இருந்ததை உணர முடிந்தது என்கின்றனர் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து வரும் உள்ளூர் வாசிகள்.
காரைக்காலுக்கு 100 கி.மீ க்கும் குறைவான தொலைவில் உள்ள நகரங்களான நாகப்பட்டினம் ,திருவாரூர் ,கும்பகோணம் ,வேதாரண்யம் ,மயிலாடுதுறை ,சீர்காழி போன்ற நகரங்களுக்கு அருகே இருந்து வருகைபுரிந்த மக்கள் காரைக்கால் கடற்கரையில் அலைகடல் என திரண்டனர் கூடவே உள்ளூர் மக்களும் காரைக்கால் கடற்கரைக்கு படையெடுத்ததால் காரைக்கால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது ஆனாலும் காவல்துறையின் நடவடிக்கைகள் உடனடியாக அந்த போக்குவரத்து நெரிசல்கள் சரிசெய்யப்பட்டன.
அதிக 4 சக்கர வாகனங்களின் வருகையால் காரைக்கால் கடற்கரை வாகன நிறுத்துமிடம் நிறைந்து காணப்பட்டது மாலை 6:30 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு வாகனம் நிறுத்த இடமின்றி சாலைகளின் ஓரங்களிலேயே சிலர் வாகனகங்களை நிறுத்தி விட்டு சென்றனர் சிலர் சாலை ஓரத்தில் இருக்கும் நடைபாதையின் மேலும் வாகனங்களை ஏற்றி நிறுத்தி இருந்தனர் இதனால் நடைப்பயிற்சி செய்யும் உள்ளூர் வாசிகள் சிறு இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது இது தொடர்பாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஒரு உள்ளூர் வாசியிடம் நாங்கள் கேட்டபொழுது நடைப்பதையில் வாகனங்கள் நிறுத்துவது கூட பரவாயில்லை காரைக்கால் நகரப்பகுதியில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு செல்லும் பிராதன சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் நடைபாதையில் மாடு ,நாய் போன்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் சில இடங்களில் மிருகங்களின் கழிவுகள் மண்டி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே கிடப்பதாகவும் தெரிவித்தனர்.