தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
காரைக்கால் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்கால் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காரைக்கால் NITயில் உதவி பேராசிரியர் மற்றும் பிற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

காரைக்கால் நகரில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கிக் கொண்டு இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி புதுச்சேரி (NIT Puducherry )யில் உதவி பேராசிரியர்கள் உட்பட பல காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு இந்த மாதம் 8ஆம் நாள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.அதண்ப்படி கணினி அறிவியல் ,மின் மற்றும் மின்னணு,இயந்திரவியல் போன்ற துறைகளில் தலா ஒரு உதவிப்பேராசிரியர் மற்றும் கற்பித்தல் இல்லாத துறைகளில் பதிவாளர் ,துணை பதிவாளர் ,நூலக உதிவியாளர் ,கணக்காளர் ,நிர்வாக பொறியாளர் ,இளநிலை உதவியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)/  இளநிலை பொறியாளர் (மின்னியல் ) போன்ற  பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

 NIT என்பது நம் காரைக்காலின் தேசிய அளவிலான அடையாளங்களில் ஒண்று.இந்தியாவில் உள்ள 30 NIT களில் ஒண்று காரைக்காலில் இருக்கிறது என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.வழக்கமாக அங்கு காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவது நம் காரைக்காலில் இருக்கும் இளைங்கர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.அந்த நிலை மாறி இந்த முறை காரைக்காலில் இருந்து அதிக மக்கள் பணியில் அமர்வார்கள் என்று நம்புவோம்.

NIT யின் அந்த அறிவிப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்

காரைக்கால் பயணம்

காரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சியில் உள்ளது இது காரைக்காலில் இருந்து 160கிமீ தொலைவில் உள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து நிறைய பேருந்துகள் இரவு நேரங்களில்  இயக்கப்படுகின்றன .

காரைக்கால் வழி

சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் வழி

சென்னை ---- புதுச்சேரி---கடலூர் ---சிதம்பரம் ---சிர்காழி ---காரைக்கால்

பயண தூரம்  :293 கிமீ

 திருச்சியிலிருந்து  காரைக்கால் செல்லும் வழி 

திருச்சி ---தஞ்சாவூர் ---திருவாரூர் ---காரைக்கால்

 பயண தூரம்  :156 கிமீ

 மதுரையிலிருந்து  காரைக்கால் செல்லும் வழி

மதுரை ---திருச்சி ---தஞ்சாவூர் ---திருவாரூர் ---காரைக்கால்

 பயண தூரம்  :288 கிமீ.

கோவையிலிருந்து  காரைக்கால் செல்லும் வழி 

கோயம்புத்தூர் ---கரூர் ---திருச்சி ---தஞ்சாவூர் ---திருவாரூர் ---காரைக்கால்

 பயண தூரம்  :363 கிமீ.

Related Posts Plugin for WordPress, Blogger...