தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
காரைக்கால் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்கால் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு

நிரவி ,திருப்பட்டினம் பகுதியில் 144 தடை உத்தரவு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.நேற்று பகல் 12 மணியளவில் புதுவை மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் திரு வி.எம்.சி.சிவக்குமார் நிரவி பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதனை அடுத்து நிரவி மற்றும் திருப்பட்டினம் ஆகிய இரு காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையிலும்.பொது சொத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் 144 தடை உத்தரவு பிரிப்பிக்கப்பட்டு இருப்பதாக காரை மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் பெலியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் அன்று தொடங்கிய 40 ஜூனியர் இன்ஸ்பெக்டர் காலி பணியடங்களுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 16ஆம் நாளுடன் நிறைவு பெற்றது.அதன் பின் தேர்தல் காரணங்களுக்காக அக்டோபர் 23ஆம் தேதி அன்று அதற்கான எழுத்து தேர்வு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,காரைக்கால்,மாஹி,ஏனாம் என நான்று மாவட்டங்களில் ஆறு மையங்களில் நடைபெற உள்ள இந்த எழுத்துத் தேர்வில் 3,375 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.மொத்தம் நூறு கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்த எழுத்து தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களின் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீங்கள் இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பத்தி இருந்தால் உங்களுடைய ஹால் டிக்கெட்டை கீழ் காணும் தளத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் https://recruitment.puducherry.gov.in/

மேலும் தேர்வுக்கு பிண் இந்த தேர்வின் சரியான விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாகவும்.தேர்வின் முடிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரைக்காலில் மாவட்ட மேலாளர் வேலைவாய்ப்பு | District Managers Recruitment in Karaikal District

காரைக்கால்  மாவட்ட e-கவுர்ணன்ஸ் சொசைட்டி,இது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு.இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் காரைக்கால் மாவட்ட e-கவுர்ணன்ஸ் சொசைட்டயில் பணிபுரிய மாவட்ட மேலாளர்கள் (e -District Manager )தேவை என விளமப்ரம் செய்யப்பட்டு உள்ளது.பொறியியல் மற்றும் கணினி தொடர்புடைய படிப்புகளில் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .மேலும் இப்பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது.

பணியின் பெயர் (Designation) : மாவட்ட மேலாளர் (District Manager)

நிரப்பப்படவுள்ள காலியிடங்கள் : 02.

கல்வி தகுதி /Educational Qualification  : பி.ஈ ,பி டெக் ,பிசிஏ,எம்சிஏ அல்லது ஏதாவது கணினி சார்ந்த படிப்பில் பட்டயம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.(B.E/B Tech/BCA/MCA or graduate in any discipline must have at least ccc level proficiency  at NIELIT)

ஊதியம் / Remuneration : ரூபாய் 25,837 / மாதம்  (per month )

விண்ணப்பிக்க இறுதிநாள் (Last date) : 14/10/2016.



மேலும் முழு விபரங்களும் www.karaikal.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.மேலும் முக்கிய தகவல்கள்,விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப படிவம் உள்ளிட்டவற்றை தரவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

Karaikal e District Managers Recruitment Notification

மதுக்கடையாக மாறிவரும் காரைக்கால் கடற்கரை

தமிழகம்  மற்றும் புதுச்சேரி மாநில நகரங்களின் வழியாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இங்கே மதுக்கடை எங்கே உள்ளது என்று கேட்டு விசாரித்து மது அருந்தி செல்வது வாடிக்கையான ஒன்று.ஆனால்,உள்ளூரில் உள்ள மக்கள் சிலரிடம் கேட்டால் எவண்டா மதுக்கடைக்கு சென்று மது அருந்துவது என்று கூறுவார்கள்.ஆம் பொது இடங்களில் மது அருந்தவே நிறைய பேர் விரும்புகிறார்கள்.இது  அணைத்து நகரங்களிலும் நடக்கின்ற ஒன்று தான் என்றாலும்.மக்கள் கூடுகின்ற பொது இடங்கள்,சாலைகளின் ஓரங்கள்,நடைபாதைகள் போன்றவற்றில் இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டும். காவல் துறை இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

வெறும் கருத்து மட்டும் சொன்னால் போதாது ஆதாரமும் வேண்டுமல்லவா.அதற்காக காரைக்கால் கடற்கரையின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ள டாக்டர்.விக்ரம் சாராபாய் சாலையை எடுத்துக்கொள்வோம்.மாலை மற்றும் காலை நேரங்களில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அணைத்து தரப்பினரும் இங்கே தான் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.சமீப காலமாக குறிப்பாக மாலை நேரங்களில் இந்த சாலையின் இரு புறங்களிலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அறுந்துகின்றனர்.அந்த இடமே இருள் சூழ்ந்து சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகள் போல் காட்சியளிக்கிறது.மக்களின் பயன் பாட்டிற்காக பல கோடி செலவு செய்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த சாலையில் பெண்கள் மாலை நேரங்களில் செல்வதற்கே பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.நாம் அங்கு சென்று பார்த்த பொழுதும் அது உண்மை என்பது போலவே இருந்தது.

சாலைகளின் இரு புறங்களிலும் மது பாட்டில்கள்,தண்ணீர் பொட்டலங்கள்,பிளாஸ்டிக் பைகள் என ஒரே குப்பை மையமாக  காட்சியளிக்கிறது.காரைக்கால் கடற்கரையின் அழகிய சதுப்பு நில காடுகள் குப்பை காடுகளாக மாறி வருகின்றன.இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதே அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களின் கருத்தாக உள்ளது.

இதோ காரைக்கால் டாக்டர் விக்ரம் சாராபாய் சாலையின் ஓரத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த புகைப்பட காட்சி இங்கே இணைக்கப்படுகிறது.



















கிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால்

புதுவை மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் புதுச்சேரியில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.புதுவை மாநிலத்தின் மற்றொரு முக்கிய மாவட்டமான காரைக்காலுக்கு ஒருமுறை கூட வருகை தரவில்லை இங்கேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று காரைக்காலின் பல்வேறு தரப்பு  மக்களும்  தங்களுடைய ஆதங்கங்களை சமூக ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர் . இந்நிலையில் இன்று (18/08/2016) காலை காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார் மேதகு துணை நிலை ஆளுநர்.இவருடைய வருகை பற்றிய தகவலை முன்பே அறிந்திருந்ததால் நேற்றே (17/08/2016)  காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக முக்கிய சாலைகளின் ஓரமாக கொட்டிக்கிடந்த குப்பைகள் யாவும் சரி செய்யப் பட்டு விட்டன.இன்று காரைக்கால் கடற்கரை முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தூய்மையாக இருப்பதை உணர முடிவதாக பொது மக்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று 18/09/2016 (வியாழக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.நாளை 19/08/2016 (வெள்ளிக்கிழமையும் ) மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.துணை நிலை ஆளுநரை சந்திக்க விரும்புவோர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணிக்குள் முன் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் காரைக்கால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாரத்திற்கு ஒருமுறையாவது  மேதகு ஆளுநர் அவர்கள் காரைக்காலுக்கு ரகசியமாக வருகை புரிந்து அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

திருநள்ளாறு சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

பிரெஞ்சுக் காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்து 1954ஆம் ஆண்டு விடுதலைப் பெற்று பிறகு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் நகரில் இருந்து வெறும் ஐந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் திருநள்ளாறு.

திருநள்ளாற்றின் சிறப்பு அங்குள்ள சணி பகவான் ஆலயம் அங்கு எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்.


திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்
திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்
திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்
திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்
திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்
திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்
திருநள்ளார் சணி பகவான் ஆலயம்


திருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்

காரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார்  மற்றும் அதனுடைய சிறப்புகளை இதற்கு முந்தைய பதிவுகளில் பேசி இருக்கிறோம்.திருநள்ளாரின் சிறப்புகளுக்கு சற்றும் சலைக்காதது இந்த திருமலைராயன் பட்டினம்.இது தற்போது காரை மக்களால் சுருக்கமாக திரு.பட்டினம் என்றும் டீ.ஆர்.பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன் பட்டினம்
 காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நிரவி மற்றும் திருமலைராயன் பட்டினம் இணைந்து ஒரு சட்டமன்ற தொகுதியாக விளங்குகிறது.காரைக்காலில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் நாகூர் ,
நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது.

 திருமலைராயன் பட்டினம் ஒரு துறைமுக நகரம்
மிகச்சிறந்த துறைமுக நகரமாக அக்காலத்தில் விளங்கிவந்தது இந்த திருமலைராயன் பட்டினம்.இங்கே உள்ள பகுதிகளில் முத்துக்குளியல் சிறப்பாக செய்யப்பட்டு.உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.தென் இந்தியாவின் ஒரு முக்கிய துறைமுகமான காரைக்கால் துறைமுகம் அமைந்துள்ளதும் திருமலைராயன் பட்டினத்தை சார்ந்து உள்ள பகுதியில் தான்.

திருமலைராயன் பட்டினம் பெயர் காரணம்
திருமலைராயனால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியே திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.இவ்வூரில் ஒரு ஆறு உள்ளது அதன் பெயரும் திருமலைராயன் ஆறு தான்.

திருமலைராயன் என்பவன் யார்?
 தஞ்சைப்பகுதியில் குமாரகம்பண்ணனின் ஆட்சி ஏற்பட்டபொழுது.அவனது பிரதிநிதிதியாக திருமலைராயன் (கி.பி 1457 - 1468) என்பவன் காரைக்கால் மற்றும் தஞ்சை பகுதிகளை ஆண்டு வந்தான்.

திருமலைராயன் பட்டினம் பற்றிய மேலும் பல சிறப்புகளை இன்னொரு தருணத்தில் ஒரு புதிய பதிவில் விரிவாக பார்ப்போம்.

காரைக்கால் மாவட்டம்

காரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு  புதுச்சேரி  மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்காடு ,திருமலைராயன் பட்டினம் ,நிரவி ஆகிய 6 கொம்யூன்கள் உள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 5 சட்டமன்ற தொகுதிகள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது.

புதுச்சேரி மாநிலமே சுற்றுளாவுக்கு பெயர் போனது இதில் காரைக்கால் மாவட்டம் மட்டும் சலைத்ததா என்ன.காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சில முக்கிய சுற்றுலா தளங்களை கீழே காணலாம்.

காரைக்கால் சுற்றுலா

கோவில்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்கள்
  • காரைக்கால் அம்மையார் திருக்கோவில் .
  • திருநள்ளார் சணிஸ்வர பகவான் ஆலயம்.
  • திருமலைராயன் பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில்.
  • தூய தேற்றரவு அன்னை ஆலயம் ,காரைக்கால் 
  • அம்பகரத்தூர் பத்ர காளியம்மன் கோவில்.
  • பெருமாள் கோவில் ,காரைக்கால் 
  • அண்ணாமலை ஈஷ்வரர் கோவில் ,காரைக்கால் .
பொழுதுப்போக்கு தளங்கள்
  • காரைக்கால் கடற்க்கரை 
  • காரைக்கால் அம்மையார்கோவில் தெப்பக்குளம்.
காரைக்காலுக்கு அருகே அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்

  • திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் (16 கிமீ )
  • வேளாங்கண்ணி புணித ஆரோக்கிய அன்னை ஆலயம் (30.2 கிமீ )
  • தரங்கம்பாடி கோட்டை (13.4 கிமீ )
  • பிச்சாவரம் (75 கிமீ )
  • கோடியக்கரை மிருகங்கள் சரணாலயம் (81 கிமீ ).
  • நாகூர் ஆண்டவர் தர்கா (13 கிமீ ).
  • கங்கைக்கொன்ட சோழபுரம் (73 கிமீ )
  • சிக்கல் சிங்காரவேலர் கோவில் (23 கிமீ ).
  • அருள்மிகு நாகநாதசுவாமி கோவில் ,திருநாகேஷ்வரம் (50 கிமீ ).
  • வைத்தீஷ்வரன் கோவில் (44 கிமீ ).
  • ஆலங்குடி குரு பகவான் ஆலயம் (66 கிமீ ) 
  • பூம்புகார் (37 கிமீ ).

கங்கைக்கொன்ட சோழபுரம்




Related Posts Plugin for WordPress, Blogger...