16.12.2020 நேரம் இரவு 10:00 மணி நான் கடந்த குரல் பதிவில் மாலை நேரத்தில் குறிப்பிட்டு இருந்தது போல #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களை மழை மேகங்கள் பதம் பார்த்து வருகின்றன தற்சமயம் #பண்ருட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான தரமான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #கடலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் இரவு 8:30 மணி வரையில் 47 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது மேலும் மேலும் #புதுச்சேரி மாவட்டம் #திருபுவனை மற்றும் கடலூர் மாவட்டம் #மாளிகைமேடு , #மணப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
இவைத்தவிர்த்து தற்பொழுது #விருத்தாசலம் , #பலையபட்டினம் , #அரியலூர் , #பழுவூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #செங்கல்பட்டு - #திண்டிவனம் இடைப்பட்டு இருக்கும் அநேக இடங்களிலும் #விழுப்புரம் - #திண்டிவனம் இடைப்பட்ட பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகும் இது தொடர்பான தகவல்களை சில மணி நேரங்களுக்கு முன்பு குரல் - https://youtu.be/QAsS0ZRe_ek விரிவாக குரல் பதிவு செய்திருக்கிறேன்.மேலும் #புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் மழை பதிவாக இருக்கிறது.
மேலும் தற்பொழுது #அடையாறு , #சோழிங்கநல்லூர் , #பாலவாக்கம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #சென்னை மாநகரின் தெற்கு புறநகர் மற்றும் தெற்கு பகுதிகளிலும் மழை பதிவாகும்.அதே #டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் மழை பதிவாகும்.
அதேபோல #விழுப்புரம் , #பெரம்பலூர் மற்றும் #ராமநாதபுரம் மாவட்ட வடக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாகும்.
எழுத்துப்பூர்வமாக அனைத்து தகவல்களையும் பதிவிடுவது சிரமமாக உள்ளது ஆகையால் குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே..
இரவு 8:30 மணி வரையில் பதிவாகி இருக்கும் மழை அளவுகளின் படி
==========
கடலூர் - 47 மி.மீ
புதுச்சேரி - 33 மி.மீ
மீண்டும் நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேரத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.