தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
சினிமா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகர் கமல்ஹாசனுக்கு குறி வைக்கும் மன்னார்குடி மாஃபியா

தமிழகத்தின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போழுது தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார் நடிகர் கமலஹாசன்.அவர் சசிகலாவை எதிர்த்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நேரடியாகவே ஒரு சில கருத்துக்களை தைரியமாக முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள் வாக்களித்த மக்கள் உங்களை பார்த்துக்கொள்வார்கள் என்று ஒரு பதிவினை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் இந்த கருத்து மக்களை வன்முறைக்கு தூண்டுவதாக உள்ளது எனக்கூறி சென்னை மாவட்ட தலைவர் தடா ரஹீம் மற்றும் மாநில தலைவர் பெரிடோஸ் ஆகிய இருவரும் இன்று சென்னை கமிஷனரிடம் புகார் வழங்கியுள்ளனர்.புகாரை பெற்றுக்கொண்ட கமிஷ்னரும் விசாரணைக்கு பின் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

எது எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம் மன்னார்குடி மாஃபியாவின் பார்வை தற்பொழுது கமலின் பக்கம் திரும்பியுள்ளது என்பது மட்டும் உண்மை.


சசிகலா திரைப்படம் தொடரும் சர்ச்சைகள்

சில தினங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் வாழக்கையை படமாக்க போவதாக இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக அறிவித்து இருந்தார்.இந்நிலையில் சற்றுமுன் ராம்கோபால் வர்மா தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில் சசிகலா மற்றும் ஜெயலலிதா இடையில் நடந்த பல உண்மை சம்பவங்களை போயஸ் தோட்ட பணியாளர் ஒருவரிடம்  இருந்து தெரிந்துக்கொண்டேன் அவர்  கூறிய தகவல்கள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.அந்த தகவல்கள் அனைத்தையும் நான் எனது படத்தில் அப்படியே படமாக்க உள்ளேன் என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டு இருக்கிறார்.







ஓ.பி.எஸ் க்கு குவியும் திரைபிரபலங்களின் ஆதரவுகள்

தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் அம்மா சமாதியில் மேற்கொண்ட மெரினா தியானத்துக்கு பிறகு ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் ஒரு கதாநாயகன் போல மாறிவிட்டார் ஏற்கனவே சசிகலாவுக்கு எதிராக இருந்த அனைவரும் ஓ.பி.எஸ் உடன் கைகோர்க்க தயாராக உள்ளனர்.ஓ.பி.எஸ் ஆபத்தானவர் அவரை பின்புறம் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக இருந்தாலும் இன்றைய அரசியல் சூழலில் தமிழக இளைஞர்களின் மத்தியில் ஹீரோ அவர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.சரி தற்பொழுது பேச இருப்பது ஓ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்துவரும் திரை பிரபலங்களைப் பற்றி தான்.


முதலாவதாக நாம் பார்க்க இருப்பது உலக நாயகன் கமல் .டிசம்பர் 2015 சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபொழுது கமல்ஹாசன் எழுதிய எழுதிய கடிதத்தால் பன்னீர் செல்வத்துக்கும் அவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.ஆயினும் இந்த விவகாரத்தில் பன்னீர் செல்வம் திறமையானவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தை மிகவும் திறமையாக கையாண்டார் அவரே முதல்வராக தொடரட்டும் என தற்பொழுது தெரிவித்துள்ளார்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் கங்கை அமரன்  : சசிகலாவின் தான் நான் என் சொத்துக்களை இழந்தேன் அவர் முதல்வர் பதவிக்கு வருவது நியாயமா அவரை எதிர்க்கும் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு ஆம்பளை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு சசிகலாவுக்கு என்றாலும் மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான் நானும் அவரைத்தான் ஆதரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்கியராஜ்  : பன்னீர் செல்வமே முதல்வராக தொடரட்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.பன்னீர் செல்வத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர்.


இசையமைப்பாளர் இமான் : தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது.இது தான் சிறந்த வழி சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு : இவர் அரசியல் சார்ந்து இருப்பதால் வெளிப்படையாக கருத்து கூற வில்லை ஆனால் தந்து டிவிட்டர் பக்கத்தில் ஒரு நாயகன் உதயமாகிறான் என மறைமுகமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜீ.வி.பிரகாஷின் புதிய தொண்டு நிறுவனம்

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராக வளம் வரும் ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளின் நலனுக்காக புதிய தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க இருக்கிறார்.ஜல்லிக்கட்டு தடை நீக்க போராட்டத்தில் ஈடுபட்டு இளைஞர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று இருக்கும் அவருக்கு இந்த விவசாயிகள் தொண்டு நிறுவன விஷயமும் பொதுமக்களிடையே நல்ல பெயரினை பெற்று தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

இவர் நிஜ வாழ்வில் பிறருக்கு பலனளிக்கும் வகையில் எடுக்கும் நல்ல முடிவுகளைப் போல இனி வரக்கூடிய காலங்களில் நல்ல சமூக வளர்ச்சிக்கான கருத்துடைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என நம்பலாம்.

உலகத்துக்கே வழிகாட்டிய தமிழக இளைஞர்கள்

மாணவர்களே இளைஞர்களே இந்த உலகத்துக்கே இந்த உலகத்துக்கே வழிகாட்டும் முறையாக இப்போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான ,ஒரு தலைவன் இல்லாமல் ,ஒரு கட்சியினுடைய துணை இல்லாமல் ,வேறு எந்த இயக்கத்தின் ஆதரவு இல்லாமல் ,ஆதரவையும் நாடாமல் யாரும் வரக்கூடாது என்று தடை செய்து விட்டு நீங்களாக நடத்துவது உங்களுக்குள் இருக்கும்  தன்னம்பிக்கையை  காட்டுகிறது .இந்தத் தன்னம்பிக்கையை அமைதியான போராட்ட வழியை இந்த உலகம் கண்டிப்பாக பின்பற்றப் போகிறது.உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள் என்று தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை பாராட்டி காணொளி பதிவை வெளியிட்டுள்ளார்.


ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு திரைப்படம் உருவாக்கப்படும் என்ற செய்தி முன்னதாக ஊடகங்களில் வெளியாகிவந்தது.யார் அந்த படத்தை இயக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி மூத்த இயக்குனரான தாசரி நாராயண ராவ் 'அம்மா ' என்ற தலைப்பை தெலுகு சேம்பர் ஆப் காமெர்ஸில் பதிவு செய்து உள்ளார்.தெலுங்கு,தமிழ்,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.


நான்று நாட்களில் ₹208 கோடி வசூல் செய்த டங்கல் திரைப்படம்

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஹிந்தி,தமிழ்,தெலுங்கு என இந்தியாவில் மூன்று மொழிகளில் வெளியாகிய திரைப்படம் தான் டங்கல்.அமீர் கான் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது.இந்நிலையில் கடந்த  நான்கு நாட்களில் இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் ₹132 கோடி வசூல் செய்திருக்கிறதாம் அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ₹76 கோடி வசூலை அள்ளிக் குவித்திருக்கிறதாம்.ஆக மொத்தம் சரவதேச அளவில் வெளியிடப்பட்ட நான்று நாட்களில் ₹208 கோடி வசூல் செய்து ஒரு புதிய சாதனையை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறதாம் இந்த திரைப்படம்.


டிசம்பர் 23 வெள்ளித் திரையில் மீண்டும் தோன்றும் வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்டர் ஆகும் திரைப்படம் தான் கத்தி சண்டை நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் என்பதை விட வடிவேலு மீண்டும் வருகிறார் என்பதற்காகவே சிறுவர் பட்டாளம் திரையரங்கை நோக்கி படையெடுக்கும் என படக்குழுவினரால் எதிர்பார்க்கப் படுகிறது அதனால் இந்த திரைப்படத்தை உச்ச நட்சத்திரங்களின் படத்தோடு வெளியிடாமல் போட்டியில்லா நேரம் பார்த்து களமிறக்க திட்டம் வைத்திருந்தார்களோ என்னவோ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் பட்ட இத்திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதியே வெளிவரும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 23 அன்று வெளியாக வேண்டிய சிங்கம் 3 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப் பட்டிருப்பதுதான் கத்தி சண்டை படக்குழுவினரின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என கோலிவுட்டில் மூணு முணுக்கப் படுகிறது.


ஆஸ்கர் மேடையில் மீண்டும் தமிழ் ஒலிக்குமா ?

உலக புகழ் பெற்ற பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் பீலேவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் 'பீலே- பெர்த் ஆப் எ லெஜெண்ட்' ஆங்கிலத்தில் மே மாதம் 6ஆம்  நாள் அமெரிக்காவில் வெளியாகிய இத்திரைப்படத்திற்கு இசையமைத்தது வேறு யாரும் இல்லை நமது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தான்.தற்பொழுது இந்த திரைப்படத்தில் சிறப்பாக  இசையமைத்தமைக்காக  ஏ.ஆர்.ரகுமான் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.2009ஆம் ஆண்டு வெளியாகிய 'ஸ்லம் டாக் மில்லினியர்' திரைப்படத்துக்காக ஏற்கனவே அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது திறமைக்கான அளவுகோல் என்பது இங்கு பலரின் கருத்தாக உள்ளது ஆனால் அது வெறும் அங்கீகாரம் மட்டுமே என்போர் வெகு சிலரே  அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன் என்றே வைத்துக் கொள்வோம் ஆனாலும் சர்வதேச அளவில் நம் திறமைக்கு  அங்கீகாரம் வழங்கப்படும்  பொழுது நம்மில் எத்தனை பேர் நம் தாய் மொழியில் பேச தயாராக இருப்போம் ? எத்தனை பேர் தலைக்கனம் இன்றி புகழை இறைவனுக்கு சமர்பிப்போம்?.அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் அவரின் மூலமாக மீண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் தமிழ்  ஒலிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.ஒலிக்குமா என்பதை பிப்ரவரி 26 2017 வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வசூல் வேட்டையில் சென்னை 600028 -2

சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2007 ஏப்ரல் 27இல் பல புதுமுகங்களை நாயகர்களாக அறிமுகப்படுத்தி வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் சென்னை 600028.அதன் இரண்டாம் பாகமான சென்னை 600028 II கடந்த வாரம் 2016 டிசம்பர் 9ஆம் தேதி வெளியானது.திரையிடப்பட்டு முதல் வாரம் நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் திட்ட திட்ட 1.42 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதன் மூலம் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் பல படங்களை பின்னுக்குத்தள்ளி இருக்கிறது.இந்நிலையில் இன்று கரையை கடந்து இருக்கும் வர்தா புயலால் இன்றைய வசூல் நிலவரம் என்னவென்று சரியாக தெரியவில்லை.இந்த திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.




நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் : பிரதமர் மோடியின் வாழ்த்து

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த துக்கம் சில தினங்களில் கரையை கடக்க இருக்கும் வர்தா புயலின் தாக்கம் போன்ற பல விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்திவந்தாலும்.நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு அவரின் பிறந்தநாளான இன்று ஒரு திருவிழா என்று தான் சொல்ல வேண்டும்.கொட்டும் மழையிலும் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல கட்டம் கட்டி நிற்கிறார்கள்.இதற்கிடையில் "நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்" என்று இந்திய பிரதமர் மோடி டிவிட்டரில் நடிகர் ரஜினகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மீண்டும் பல்கெரியாவுக்கு புறப்படும் அஜித்

முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மரணமடைந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் பல்கெரியாவில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 3.45 மணிக்கு சென்னை வந்தார் பின்னர் அங்கிருந்து தனது மனைவி ஷாலினியுடன் அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு காலை 7 மணிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பின்னர் அங்கிருந்து சென்று சோ அவர்களின் உடலுக்கும்  இறுதி அஞ்சலி செலுத்தினார்.பல்கெரியா நாட்டில் தல 57 திரைப்படத்துக்கான படப்பிடிப்பில் இருந்து பாதியில் வந்ததால் மீண்டும் இன்று இரவு பால்கெரியாவுக்கு புறப்படுகிறார் அஜித்.


நான்று நாட்களில் 1.47 கோடி வசூல் செய்த விஜய் ஆண்டனியின் திரைப்படம்

இந்த மாத முதல் நாளில் வெளியான விஜய் ஆண்டனியின் சைத்தான் திரைப்படம் வார இறுதியில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் ருபாய் வசூல் செய்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.ஒரு மிகப்பெரிய நட்சத்திர பின்னணி இல்லாத  திரைப்படம் வெளியாகிய நான்று நாட்களில்  திட்ட திட்ட ஒன்றரை கோடி வசூல் செய்து இருப்பது தான் இப்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் டாப் நியூஸ்.இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் முதல் வாரத்தில் 60 லட்சம் ருபாய் வசூல் செய்திருந்தது அந்த சாதனையை சைத்தான் இப்பொழுது முறியடித்திருக்கிறது.மேலும் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதல் வாரத்தில் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் சைத்தான் படத்திற்கு தான் சேரும்.


கலைவாணரின் 108வது பிறந்தநாள்

நகைச்சுவையுடன் சமூக பிரச்சனைகளையும் முன் வைத்து நடிப்பதில் கலைவாணருக்கு நிகர் கலைவாணர் தான். தென்னகத்தின் 'சார்லி சாப்ளின்' என்று திரையுலகளில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தார். ஒரு நாடக கம்பெனியில்  சோடா விற்கும் பையனாக தனது இளமைப் பருவத்தை கடந்தவர் பின் வில்லுப்பாட்டு கலைஞராக தனது கலையுலக வாழவைத் தொடங்கினார்.சொந்தமாக நாடக கம்பனியை நடத்தும் அளவு உயர்ந்த அவர் பின்னர் 1936 வெளிவந்த சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.திட்ட திட்ட 150 படங்களில் நடித்த அவர் சொந்தமாக வசனங்கள் எழுதி அதையே நாடகத்திலும்,திரையுலகிலும் பயன்படுத்தி வந்தார்.தனது சீர்திருத்த வசனங்களால் மக்களை சிந்திக்க வைத்த அவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட 30ஆம் நாள் மரணத்தை தழுவினார்.அவர் மறித்து 59ஆண்டுகள் கடந்த பிறகும் மக்கள் மனதில் என்றும் நீங்காத கலைஞனாக இப்பொழுதும் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்.

திலீப் காவ்யா திருமணம் மலையாள திரையுலகில் மீண்டும் ஒரு காதல் ஜோடி

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் திரைப்படத்தில் அவருடைய வாய்பேச முடியாத தம்பியாக நடித்தவர் தான் நடிகர் திலீப்.இவர் மலையாள திரைப்பட உலகில் மோகன்லால் ,மம்புட்டிக்கு  அடுத்து பிரபலாமானவர்.அவர் தனது முதல் காதல் மனைவியான மஞ்சு வாரியரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மலையாள திரையுலகின் மற்றுமொரு பிரபல நடிகையான காவ்யாவை இன்று மனம் முடித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.திலீப் காவ்யாவின் திருமணத்தில் முக்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.நடிகை காவ்யா தமிழில் காசி ,சாது மிரண்டால் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...