தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
சூறாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூறாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிலிப்பைன்ஸ் வடக்கு லூசன் மாகாணத்தை அச்சுறுத்தும் யூடு (YUTU ) புயல் - தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை எப்போது தொடங்கலாம் ?

28-10-2018 நேரம் பிரிப்பகல் 2:10 மணி நான் இதற்கு முந்தைய எனது பதிவுகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது அணைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக அரங்கேறி வருகின்றன.அந்த பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல 29-10-2018 ஆகிய நாளை மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இதன் காரணமாக 29-10-2018 ஆகிய நாளை மாலை முதல் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் 30-10-2018 அன்று நள்ளிரவு அல்லது  31-10-2018 அன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip ) அருகே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் குறிப்பாக #தம்ரா (#Dhamra) , #ராஜ்நகர் (#Rajnagar) அருகே உள்ள கடலோர பகுதிகளில் அது கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசாவில் கரையை கடந்து அதன் தாக்கம் குறைய தொடங்கியதும் முன்பு நான் பதிவிட்டு இருந்தது போல தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே நிலைகொள்ள முற்படலாம் இதன் காரணமாக 30-10-2018 அன்று மாலை அல்லது நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் அதக்ரு மறுநாள் ஆன 31-10-2018 ஆம் தேதி அன்று திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,புதுச்சேரி ,கடலூர் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.31-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நவம்பர் மாத முதல் வார நாட்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

28-10-2018 கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த 5 ஆம் வகை மிக சக்திவாய்ந்த சூறாவளியான #யூடு (#YUTU) வானது தற்பொழுது ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணமான #லூசன் (#LUZON) இன் வட கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான #TUGUEGARAO வுக்கு கிழக்கே மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக அது நிலைகொண்டிருக்கும் கடல் பகுதிகளில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 240 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் கிழக்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதியான #Palanan , #Divlacan ,#Dinapigue அருகே கரையை கடக்க முற்படலாம் மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அப்பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ க்கு அதிகமான அளவு காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் #MANGHUT போல அல்லாமல் வடக்கு  #லூசன் (#LUZON)  மாகாணத்தின் அநேக இடங்களிலும் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை என ஒரு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தகூடியதாக இருக்கலாம்.இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் இதுவரையில் பிலிப்பைன்ஸ் சந்தித்த இயற்கை பேரழிவுகளில் இது மறக்குமுடியாததாக கூட பதிவாகி விடலாம்.#Santiago , Candon , #Laoag , #Aparri , #Baguio, #calayan என அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் இது பலத்த சேதத்தை உண்டு பண்ணலாம்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


16-09-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

16-09-2018 நேரம் காலை 11:35 மணி  தற்பொழுது இந்த ஆண்டின் சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் அந்த #மங்குட் (#MANGKHUT) சூறாவளியானது நேற்று முன்தினம் ஒரு 5ஆம் வகை சூறாவளியாக #பிலிப்பைன்ஸ் (#Phillipines) நாட்டின் வடக்கு பகுதிகளை கடந்து தற்பொழுது 16-09-2018 ஆகிய இன்று ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலுக்குறைந்து #மக்காவு (#Macau) மற்றும் அதன் அருகே உள்ள தெற்கு சீனப்பகுதிகளை நோக்கி நகர்ந்து  வருகிறது #ஹாங்காங் (#Hongkong) பகுதிகளிலும் கனமழை உட்பட மணிக்கு 160 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.


Effect of MANGKHUT Typhoon in india
மேலும் அந்த  #மங்குட் (#MANGKHUT) சூறாவளியானது அதன் சுழற்சியால் வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்தும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து ம்  காற்றை வேகமாக இழுப்பதாலும் கிழக்கு திசை காற்று இந்திய வட  கிழக்கு மாநிலங்களில் வீரியம் குன்றி இருப்பதாலும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளின் வழியே நிலப்பகுதிகளில் இருந்து காற்று கடல் பகுதிக்குள் வர முற்படுகிறது இதன் காரணமாக 16-09-2018 ஆகிய இன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு வட கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது மேலும் அது 17-09-2018 ஆகிய நாளை அல்லது 18-09-2018 ஆகிய நாளை மறுநாள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Area) உருப்பெறலாம் அதைப்போல அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (#Depression) உருவெடுத்து வட கிழக்கு திசையில் நகர தொடங்கலாம் அதனுடைய நகர்வுகளை அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.மேலும் அது 20-09-2018 அல்லது 21-09-2018 ஆம் தேதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.பின்னர் கரையை கடந்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து மீண்டும் #ஒடிசா ,#சத்தீஸ்கர் மற்றும் #மத்தியபிரதேச மாநிலங்களில் ஆங்காங்கே கனமழையை ஏற்படுத்தி நகர்ந்து செல்லலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் குறிப்பாக 16-09-2018 மற்றும் 17-09-2018 ஆம் தேதிகளில் கடந்த சில நாட்களை போன்று தமிழக வட ,வட உள் ,தென் உள் ,மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் தெற்கு ஆந்திர பகுதிகளிலும் கடந்த சில நாட்களை போலவே மழை மேகங்கள் இரவு நேரங்களில் குவிய வாய்ப்புகள் உள்ளதால் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஒவ்வொரு நாளும் அன்றைய மழைக்கான வாய்ப்புகளையும்  தினந்தோறும்  பிற்பகலில் பதிவிடுகிறேன்.மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதும் தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைய தொடங்கலாம் அதாவது குறிப்பாக 18-09-2018 அல்லது 19-09-2018 ஆம் தேதிகளில் மழையின் அளவு அதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து இருக்கலாம்.மேலும் அது வலுப்பெற்று வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்ல தொடங்குகையில் குறிப்பாக 20-09-2018 அல்லது 21-09-2018 முதல் தமிழகத்தின் பல இடங்களிலும் பகல் நேர வெப்பநிலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் செப்டம்பர் இறுதி வாரத்தில் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


2017 நவம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை - வங்கக்கடலில் ஒடிசா அருகே கரையை கடக்க இருக்கும் சூறாவளி காரணாமாக வட கிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

தற்போது வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது அது தீவிரமடைந்து அடுத்த இரண்டு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது மேலும் அது 18-10-2017 அல்லது 19-10-2017 ஆம் தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரு சூறாவளியாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .அந்த புயலானது 19-10-2017 அல்லது 20-10-2017 ஆம் தேதி வாக்கில் வட ஆந்திரா அல்லது ஒடிசா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை விட்டு விலகி செல்கையில் அதாவது 18-10-2017 முதல் வட தமிழகத்தில் மழை குறைந்து வறண்ட வானிலை நிலவ வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் 19-10-2017 அன்று கேரள மாநிலத்துக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தின் ஒரு சில தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு.அந்த சூறாவளியானது கரையை கடக்க முற்படும்பொழுது காற்றில் உள்ள ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்படுவதால் அன்று முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவ தொடங்கம் மேலும் கரையை கடந்த அந்த புயல் மீண்டும் கிழக்கு திசையில் அதாவது வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.அவ்வாறு அது வலுவுடன் மீண்டும் கிழக்கு திசையில் நகரும் பட்சத்தில் அது தமிழகத்துக்கு அவ்வளவு நல்லதொரு விஷயமாக இருக்காது மாறாக அதனால் அன்று முதல் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.அதனால் வடகிழக்கு பருவமழை தொடுங்குவதிலும்  தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தற்பொழுது நிலவும் வானிலையை கொண்டு அடுத்து வரக்கூடிய 4 வாரங்களுக்கான மழை அளவு எப்படி இருக்கும் என்று விளக்கி கொடுக்கப்பட்டுள்ளது இதை நீடிக்கப்பட்ட வரம்பியல் கணிப்பு என்பார்கள் அதில் இடது பக்கம் இருக்கும் படங்கள் ஒவ்வொரு வாரத்திலும் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் மழையின் அளவு எப்படி இருக்கும் என்பதை விளக்கி காட்டுகிறது அதில் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்கள் மழை தனது இயல்பான அளவில் இருந்து மாறுபடுவதை  காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஊதா நிறங்கள் மழை அதிகரித்திருக்க கூடிய வாய்ப்புகளை உணர்த்துகின்றன ஆரஞ்சு நிறங்கள் மழையின் அளவு இயல்பான அளவை விட குறைந்து இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன.அந்த நிறங்களின் அடர்த்தியை பொறுத்து அதன் அளவுகளும் அதிகரிக்கின்றன .அதில் 20-10-2017  முதல் 26-10-2017 ஆம் தேதி வரை உள்ள காலங்களிலும் 27-10-2017 முதல் நவம்பர் 02-11-2017 வரை உள்ள காலங்களிலும் தமிழகம் முழுவதும் இயல்பான அளவை விட மழை குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிவிக்கிறது.அதுவம் -5 ,-10,-15 என்கிற அளவில் இது மிகவும் மோசமான சூழல்.நான் ஒரு முறை இதற்கு முந்தய பதிவில் வடகிழக்கு பருவமழை முன்பாகவே அறிவிக்கப்பட வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்துக்கு பிறகு தான் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தேன் ஆனால் இப்பொழுது நிலவும் வானிலையின்  அடிப்படையில் பார்த்தால் வட கிழக்கு பருவமழை தொடங்குவதிலேயே தாமதம் இருக்கும் என்பது போல தெரிகிறது.2017 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் பயனை நவம்பர் மாதமாவது முழுமையாக வழங்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிடைத்த மழை நீரை முறையாக சேமித்து வைத்திருந்தால் விரைவில் தொடங்க இருக்கும் இந்த வறட்சியை சுலபமாக சமாளித்திருக்கலாம்.இனியாவது நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வோம் நீர் நிலைகளை பாதுகாப்போம்.


Related Posts Plugin for WordPress, Blogger...