தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
ஜல்லிக்கட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜல்லிக்கட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம்

இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை மாநில முதல்வர் வி.நாராயணசாமி PSLV C-37 என்ற ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்  கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அதன் இயக்குனர் கிரண்குமாருக்கும் புதுச்சேரி மக்கள் மற்றும் அரசு சார்பில் தனது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் புதுச்சேரி மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம் அது தொடர்பாக மத்திய அரசு தற்போது பதில் அனுப்பியுள்ளது எனவும் அந்த கடிதத்தில் வறட்சி குறித்து ஆய்வு செய்ய  வறட்சி பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மத்திய குழுவை அனுப்ப உள்ளதாக அதில் குறிப்பிடப் பட்டு உள்ளது எனவும் கூறினார்.

அதன் பிறகு புதுச்சேரியில்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக புதுச்சேரி சட்டபேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியவுடன் அதை சட்டமாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் கூறினார்.


ஜல்லிக்கட்டு : மாணவர் போராட்டம் களைக்கப்பட்டதன் உண்மை காரணம் ?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற  வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மாணவர்கள் நேற்று முன்தினம் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று திடீரென மாணவர்கள்  கூட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் அதனால் மாணவர்களுக்கு எந்த வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று கூறியும்  போராட்டத்தை இத்துடன் முடித்துக்கொண்டு மாணவர்கள் களைந்து செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து  ஈடுபட்டு வந்த திரையுலக நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கூறினர்.இதற்கு முன்னரே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து போராடி வந்தவர்களெல்லாம் அவசர சட்டம் இயற்றிய உடனே போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ நேற்றுடன் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெற்று வந்த போராட்டம் நிறைவு பெற்றது.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் இந்த போராட்டம் கையாளப்பட்ட விதமே வேறு அங்கு யாரும் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட வில்லை.மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட வில்லை.இதெற்கு காரணம் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாராயணசாமி ஒழிக ! ரங்கசாமி ஒழிக ! என குரல் எழுப்பவில்லை தேவையில்லாத அரசியல் பின்னணியை அங்கு வெளிப்படுத்த வில்லை.ஆனால் தமிழ் நாட்டில் அப்படியல்ல அவர்களின் மாநில அரசியல் தலைவர்களையே கேலி செய்தும் விமர்சனம் செய்தும் குரல் எழுப்பினர்  போராட்டம் களைக்கப்பட்டதற்கு அதுவே  கூட ஒரு காரணமாக இருக்கலாம்.தமிழக அரசு நினைத்திருந்தால் இந்த போராட்டத்தை என்றோ நிறுத்தியிருக்க முடியும் என்பதை காட்டவே நேற்று அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

ஆரம்பத்தில் இது வெறும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான ஒரு போராட்டமாக தான் இருந்தது மாணவர்கள் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியவுடன் இதை புரட்சி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்தன அதற்கு பின் தான் சில திரை நட்சத்திரங்கள் தாமாகவே முன் வந்து இந்த போராட்டத்தில் இணைந்தனர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் அதன் பின் போராட்டம் வலுப்பெற்றது கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளும் மாறின சிலர் தனி தமிழகம் குடியரசு தின எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர் இதைப்போன்ற விஷயங்கள் உழவுத்துறை மூலம் எப்படியும்  மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கும் போராட்டத்தை களைக்கப்பட்டதற்கான காரணம் அதுவாக கூட இருக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபட்ட திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களை முகநூல் மற்றும் வாட்சப்பில் வெளியிட்டு அடுத்த முதல்வர் இவர் தான் என்று வைரலாக பரவி வந்த செய்திகள் பலருக்கும் கடுப்பை கிளம்பியிருக்கும்.ஆனால் அந்த செய்திகளை பரப்பியது மாணவர்கள் தானா அல்லது அந்த திரையுலக நட்சத்திரங்களே ஆள் வைத்து பரப்ப சொன்னார்களா என்று சரியாக தெரியவில்லை எதுவாயினும் இது கூட போராட்டம் களைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்படி யோசனை செய்ய செய்ய புதுப்புது காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் மொத்தத்தில் போராட்டம் களைக்கப்பட்டதற்கு இவர் தான் காரணம் அவர் தான் காரணம் என்று யார் மீதாவது பழி கூறுவதை விட்டு விட்டு நாம் எதற்காக போராட்டத்தை தொடங்கினோமோ அதை மறந்து பிறர் கூறியதை செய்ய ஆரம்பித்தோமே அந்த செயல் தான் காரணம் என்பதனை ஏற்றுக்கொண்டால் நல்லது.

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே இயற்றப்பட்ட அவசர சட்டத்தை நிரந்திரமாக இயற்றுவதற்கான சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.இதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட திருத்த முன் வடிவினை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து மசோதா குறித்து பேசினார். இந்த சட்ட முன் வரைவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் வரவேற்றுப் பேசினர். உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக புதிய சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேறியதாக தகவல்.இனி இந்த சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் இருக்கிறது அவர் கையெழுத்துக்கு பின் இது நிரந்தர சட்டமாகும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க மாட்டோம் முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி அண்ணா நகரில் அரசின் கீழ் இயங்கும் பாப்ஸ்கோ நிறுவனத்தின் புதிய காய்கறி கடையை திறந்து வைத்த முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்  புதுச்சேரி மாநிலத்தில் மாணவ,மாணவியர் அமைதியான முறையில் புதுவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறினார் மேலும் அவர் இதைப்பற்றி தொடர்ந்து கூறுகையில்  தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது அதைப்போல் புதுச்சேரி சட்டப்பேரவையில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் மாணவியர் போராட்டம் நடத்தப்படும் இடத்தில் அதிக அளவில் உள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் கூடுதலாக பெண் காவலர்கள் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவ,மாணவயிரை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட மாட்டார்கள்.போராட்டக் காரர்களே நல்லதொரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்து வரும் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி முதல்வரின் இந்த கருத்து அம்மாநில இளைஞர்களையும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் கவர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.


உலகத்துக்கே வழிகாட்டிய தமிழக இளைஞர்கள்

மாணவர்களே இளைஞர்களே இந்த உலகத்துக்கே இந்த உலகத்துக்கே வழிகாட்டும் முறையாக இப்போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான ,ஒரு தலைவன் இல்லாமல் ,ஒரு கட்சியினுடைய துணை இல்லாமல் ,வேறு எந்த இயக்கத்தின் ஆதரவு இல்லாமல் ,ஆதரவையும் நாடாமல் யாரும் வரக்கூடாது என்று தடை செய்து விட்டு நீங்களாக நடத்துவது உங்களுக்குள் இருக்கும்  தன்னம்பிக்கையை  காட்டுகிறது .இந்தத் தன்னம்பிக்கையை அமைதியான போராட்ட வழியை இந்த உலகம் கண்டிப்பாக பின்பற்றப் போகிறது.உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள் என்று தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை பாராட்டி காணொளி பதிவை வெளியிட்டுள்ளார்.


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒளிந்திருக்கும் அரசியல்

உலகெங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளுக்கும் மக்களை தங்களுக்கான வாக்குகளாக மட்டுமே பார்க்கும் சில அரசியல் எதிரான எண்ணத்திற்கும் எதிரான ஒரு அமைதிப் போர் என்று தான் கூற வேண்டும்.ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் முறை, மிருகங்களின் வதை, ஜல்லிக்கட்டு என்ற ஒரு விளையாட்டு சரியானதா ? தவறானதா? என்பது போன்ற தேவையற்ற விவாதங்களுக்கு இடம் கொடுக்காமல் தற்பொழுது ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு எந்த அளவு நன்மைகளை உருவாக்கும் அல்லது அதனால் ஏதாவது தீமைகள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளதா என்பதை பற்றி மட்டும் தற்பொழுது விவாதிப்போம்.

இது இளைஞர்களின் எழுச்சி புரட்சி என்று கூறும் நாம் அப்படி கூறுவதற்கு முன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றால் என்ன பயன் என்ற கேள்வியை போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு இளைஞர்களிடமும் தனித்தனியே கேட்கவேண்டும்.முதலில் நான் எனது வாழ்நாளில் இதுவரை கண்டிராத மாணவர் புரட்சியை கண்டுவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் தான் இருந்தேன்.ஆனால் போராட்டத்தில் கூடியிருந்த இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டு ஏன் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை ஊடக நண்பர்  ஒருவர் முன்வைத்தார் அதற்கு ஒரு இளைஞர் இது எங்களின் பாரம்பரிய விளையாட்டு அதனால் எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் என்றார் மறுபடியும் அந்த ஊடக நண்பர் அவரிடம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் என்ன பயன் என்று கேட்டார் அதற்கு சிறிது நேரம் யோசித்த அந்த இளைஞர் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று கூறினார் இது இவர் ஒருவரின் பதிலாக என்னால் பார்க்க முடியவில்லை இவரைப்போல கூடியிருந்த இளைஞர்களில் பலருக்கும் ஜல்லிக்கட்டின் பயன் என்னவென்ற கேள்விக்கு பதில் தெரியாது என்பதே உண்மை .ஒவ்வொரு மாணவரும் நாம் எதற்காக போராடுகிறோம் அதனால் கிடைக்கப்பெறும் நன்மை தீமைகள்  என்னவென்று  தெரிந்து போராடினால் தான் அதை எழுச்சி புரட்சி என்று கூறமுடியும்.மேலும் இந்த போராட்டத்தை வழிநடத்தும் இளைஞருக்கு பின்னால் யாரும் இல்லை என்பதையும்  தமிழக அரசும் காவல்துறையும் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தது என்பதையும் முற்றிலும் ஏற்க முடியாது.டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்தியது என்றும் அந்த போராட்டம் என்ன ஆனது என்றும் உங்களுக்கே தெரியும்.ஊடகங்களின் உதவியில்லாமல் வெறும் சமூக வலைத்தளங்களை கொண்டே இவ்வளவு மக்கள் கூடினார்கள் என்பதையும் என்னால் ஏற்க முடியாது.நான் கூறும் கருத்துக்களால் பல இளைஞர்களுக்கு நான் இன்று ஆகாதவனாக கூட ஆகிவிடலாம் ஆனாலும் என்னால் உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் கிடையாது ஆனால் முதலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்ட பொழுது தமிழ் நாட்டில் நிலவிய சூழ்நிலைகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.அக்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டுதான்  பல ஜாதிய  வன்முறைகள் அரங்கேறி இருக்கின்றன மாட்டை குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த  ஆட்கள் பிடிக்கக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகளே  உண்டு.மாணவர்களின் போராட்டத்தில் இருந்த ஒற்றுமை இனிமேல் நடத்தப்படவிருக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளிலும் தொடர வேண்டும் என்பதே எமது எண்ணம்.

முகநூலில் மாணவர்கள் தொலைக்காட்சி ஊடகங்களை கழுவி கழுவி ஊத்துகிறார்கள் ஆனாலும் இப்பொழுதும் அந்த ஊடகங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த செய்திகள் தான் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன.இதையெல்லாம் பார்க்கும் பொழுது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஸ்வாதி கொலையில் பின்பற்றப்பட்ட யுக்தி தான் நினைவுக்கு வருகிறது.ஆம் அந்த கொலை நடந்த பொழுது தமிழகத்தில் வேறு சில கொலைகளும் அரங்கேறின ஆனால் அதைப்பற்றிய  ஒரு தெளிவான தகவல் யாருக்கும் தெரியாமலயே போய்விட்டது.அதைபோல் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த ஊடகங்களில் தொடர் செய்திகளும் எதோ ஒரு முக்கிய விஷயத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயன்படுத்தப் படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.உதாரணமாக வறட்சி நிவாரணத்தை மறந்தே போய்விட்டோம் காவிரி மேலாண்மை வாரியம் என்ன ஆனது என்றே தெரியவில்லை காவிரி விவகாரத்தில் நம்முடன் போட்டிபோடும் கர்நாடக அரசும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருக்கிறது அது ஒரு கூறிய அரசியல் பார்வையாக கூட இருக்கலாம் இதெல்லாம் வெறும் சாதாரண காரனங்கள் தான் உண்மையில் இதற்கு பின் இருக்கும் மிகப் பெரிய அரசியல் காரனங்கள் என்னவென்று போக போக தான் தெரியும்.

காரைக்கால் ஜல்லிக்கட்டு 20-01-2017

உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும் மத்திய அரசின் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள புதிய சந்தை திடலில் வாடிவாசல் அமைத்து மாலை 5:00 மணியளவில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை காரைக்கால் இளைஞர்கள் துரத்தி பிடித்து ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் புதுச்சேரியில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வாடிவாசல் வழியாக காளைகள் அழைத்து வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.


புதுச்சேரியில் காளை வடிவில் அரங்கேறிய ஜல்லிக்கட்டு போராட்டம்

கடந்த 4 நாட்களாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் இது சம்மந்தமாக தமிழகத்தில் கைதி செய்யப்பட்ட மானவர்களை  விடுதலை செய்து  அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற விஷயத்தை முன்னிறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புதுச்சேரி AFT மைதானத்தில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்  ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காளை மாடு வடிவத்தில் திரண்டு போராடினர்.இந்த புதிய முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் தமிழகத்தை ஒட்டியுள்ள மற்றுமொரு  மாவட்டமான காரைக்காலிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தற்பொழுது காரைக்காலில் லேசாக மழை பெய்து வந்தாலும் போராட்டம் ஓய்ந்த பாடில்லை மன வலிமைமிக்க அந்த இளைஞர்களின் போராட்டம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களை கவர்ந்திருக்கிறது.காரைக்கால் தொலைக்காட்சி சேனலான டைமண்ட டீவியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையிலும் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும் நேரடி நிகழ்ச்சிகள் அந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

தடைகள் உடைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறுமேயானால் அதில் புதுவை மாநில இளைஞர்களின் தியாகத்திற்கும் எழுச்சிக்கும் பெரும்பங்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

பன்னீரால் பயன் என்ன ?

நேற்று மாலை புதுவை முதல்வர் நாராயணசாமி ஸ்ரீரங்கத்தில் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அநீதி அளித்து விட்டதாக வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து இருந்தார்.மத்திய அரசின் உதவியுடன் இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சிறிய யூனியன் பிரதேசத்தின் முதல்வருக்கு இருக்கும் தமிழன் என்ற உணர்வும் தைரியமும் எட்டு கோடி மக்களை ஆளும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது.அவர் இதுவரை ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து எந்த கருத்தையும் வெளிப்படையாக கூறியதில்லை.அதனால் அவரை திட்டி பலர் கருத்து தெரிவித்து வருக்கின்றனர் ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றதாக தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன அதே சமயம் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து மழை பொய்த்ததால் ஏற்பட்டிருக்கும்  வறட்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருப்பதாகவும் செய்தி வெளியான வண்ணம் இருக்கின்றது.இந்த இரு விஷயங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் சத்தமின்றி அவர் செய்ய வேண்டிய காரியங்களை செய்து இருப்பதாகவே என்னத் தோன்றுகிறது.

தமிழக அரசு நினைத்திருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து மஞ்சுவிரட்டு நடைபெறுவதை நிறுத்தி இருக்க முடியும் ஆனால் அப்படி செய்யவில்லை ஆக தமிழக அரசின் நிலைப்பாடு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சரியாகவே  உள்ளது என்று தான் கூற வேண்டும்.இன்று இப்படி ஒன்று கூடி ஒற்றுமையாக  மஞ்சுவிரட்டு நடத்திய மக்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரை நட்சத்திரங்களும் தடையை எதிர்த்து புதிய சட்டம் இயற்ற தொடர்ந்து போராடுவார்களா என்பது தான் கேள்வி.


ஜல்லிக்கட்டு தடை - ஒரு மொழிப்போர்

மிருகங்களுக்கு எதிரான செயல்கள் பல நம் நாட்டில் அன்றாடம் அரங்கேறிக் கொண்டு இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை தடை செய்வதில் மட்டும் ஏன் இத்தனை முனைப்பு காட்டுகிறது இந்த மத்திய அரசு ? காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டம் இயற்றிய மத்திய அரசுக்கு இந்த ஏறு தழுவுதல் விவகாரத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம் ? இவைகள்தான் இன்று ஏறுதழுவுதல் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி அதுமட்டுமின்றி ஊடங்களில் இன்று பரபரப்பான  விவாதங்களுக்கு உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் தலைப்பும் இது தான்.தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்தவரையில் அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட விவாதங்களை பரபரப்பாக்கி தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்திக் கொள்வதிலேயே தான் கவனம் செலுத்தி வருகின்றன அதனால் எந்த விவாதங்களும் தெளிவான ஒரு காரணத்தை முன் வைத்ததாக தெரியவில்லை.

பல பேர் விவாதத்தின் பொழுது இது ஐயாயிரம் வருடமாக நடைபெற்று வருகிறது இதனை தடை செய்யக்கூடாது என்று தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர் அப்பொழுது தான் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது இந்த தடைக்கு காரணமே அதன் தொன்மையாக  என் இருக்கக் கூடாது ?ஆம் உலகின் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்களிலும் படிமங்களில்  ஏறுதழுவுதல் தொடர்புடைய தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.எகிப்து நாட்டு பிரமிடுகளில் கூட காலை மாடுகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.இவைகள் மட்டுமல்லாது உலகின் தொன்மையான சிந்து சமவெளி நாகரிகத்தை உலகுக்கு அடையாளம் காட்ட நடந்த தொல் பொருள் ஆய்வின் பொழுது கிடைக்கப்பெற்ற பொருட்களில்  ஒன்றில் ஒரு மாட்டை சுற்றி மனிதர்கள் நிற்பது போலவும் அதனை பிடிக்க முற்படுவது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன என்பது தகவல் இவைகள் அனைத்தும் உண்மையானால் இன்றளவும் அந்த விளையாட்டை பல தலைமுறைகளை கடந்தும் நடத்திக் கொண்டு வந்துதிருக்கும் தமிழினம் தான் அந்த சிந்து சமவெளி நாகரிகத்துக்கே முன்னோடி என்றாகிவிடும்.தமிழன் பேசிய மொழியான தமிழ் உலகிற்கே தாய் மொழி என்பதும் உறுதியாகிவிடும்.சமஸ்கிரதத்தையே இந்தியாவின் தொன்மையான மொழி என்று சூளுரைக்கும் கூட்டத்திற்கு எல்லாம் இது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் அந்த அதிர்ச்சியே இந்த தடைக்கான காரணமாக கூட இருக்கலாம்.மொத்தத்தில் இது ஒரு மொழிப்போர் என்று தான் கூற  வேண்டும்.

என்னது இது ஒரு மொழிப்போரா ? என யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் இது இன்று புதிதாக உருவான விஷயமல்ல ஒரு காலத்தில் நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்ட பொழுது அதற்கு காரணமாக அந்த மொழி பேசும் நபர்களின் எண்ணிக்கையை கூறினார்கள் அப்பொழுது அதற்கு கடும் போட்டியாக விழங்கியது வங்க மொழிதான் இன்று வங்க மொழியின் நிலை என்ன?  வங்க மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அவர்களிடம் ஏன் இத்தனை பிளவுகள் ? இதனை அனைவரும் ஒருமுறை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஜெர்சி பசு ,சர்க்கரை நோய் மருந்து விற்பனை ,சர்வதேச அரசியல் என பல காரணங்களை முன் வைக்கும் இவர்களுக்கு இந்த தடைக்கு பின்னால் ஒரு மொழிப்போர் இருக்கலாம் என்று ஏனோ தோணவில்லை அது சரி உண்மையை எப்படி நம்மைத் தெரிந்து கொள்ள விடுவார்கள் .

                                                                                                                      - இமானுவேல்.ச


Related Posts Plugin for WordPress, Blogger...