தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்

21-04-2019 நேரம் காலை 11:35 மணி நேற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் பரவலான வெப்சலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #நீலகிரி  , #தேனி ,#கன்னியாகுமரி உட்பட மேற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களிலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் மேற்கு பகுதிகளிலும் #சேலம்  , #நாமக்கல் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது குறிப்பாக நீலகிரி மாவட்டம் #ஊட்டி யில் 98 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #தேனி மாவட்டம் #சோத்துப்பாறை பகுதியிலும் 92 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்று கிருஷ்னகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #துறையூர்  , #மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

21-04-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்

#உதகமண்டலம் - #OOTY (நீலகிரி மாவட்டம் ) - 98 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 92 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 75 மி.மீ
#ஓசூர் - #HOSUR (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 69 மி.மீ
#ஓமலூர் - #OMALUR (சேலம் மாவட்டம் ) - 66 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 66 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 65 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 63 மி.மீ
#சிவலோகம் -#சித்தாறு II   (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 60 மி.மீ
#பரூர் - #BARUR(கிருஷ்னகிரி மாவட்டம் ) - 60 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 57 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ
#தொட்டபெட்டா -#Doddapetta , உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி  (தர்மபுரி மாவட்டம் ) - 40  மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 38 மி.மீ
#திருசெங்கோடு  (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம் ) - 38 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் ) - 36 மி.மீ
புஷ்பாமருத்துவமனை அருகில் , குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 32 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 31 மி.மீ
கெத்தி -#GEDDAI  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
தானிஷ்பேட்டை  - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆணைமடவு அணை  - #ANAIMADAVU DAM (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
மயிலடி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ
#அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 24 மி.மீ
#பல்லடம்  (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#நாகர்க்கோயில்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
மணப்பாறை TOWN (திருச்சி மாவட்டம் ) - 23 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
பூதப்பாண்டி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
உத்தம்பாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#உடுமலைப்பேட்டை  (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
அரண்மனைப்புத்தூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#எட்டையபுரம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம்  (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
ராசிபுரம்  (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ 
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) -9 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ

இவை தவிர்த்து பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது 9 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை நான் மேலே குறிப்பிடவில்லை.இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் உங்களது ஊரின் பெயரை COMMENT செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

நிகழ் நேரத்தில் பதிவாகி வரும் மழை தொடர்பான தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

05-03-2019 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100°F பாரன்ஹீடுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய பகுதிகளின் நிலவரம்

05-03-2019 நேரம் இரவு 7:45 மணி இன்று மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலை அளவுகள் பட்டியலின்படி இன்று தமிழிகத்தில் 100° பாரன்ஹீடுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான சில பகுதிகளின் நிலவரம்.இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக #திருவள்ளூர் மாவட்டம் #திருத்தணி யில் 104.18°F  பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது #திருவண்ணாமலை வடக்கு பகுதியிலும் கிட்டத்தட்ட 104°F  பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது மேலும் #விருதுநகர் பகுதியிலும் கிட்டத்தட்ட 103.3°F  பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 104.18 ° F  (40.1°C )
திருவண்ணாமலை ISRO (திருவண்ணாமலை மாவட்டம் ) - 103.6° F  (39.8°C )
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம் ) - 103.3° F  (39.6°C )
சேலம் (சேலம் மாவட்டம் ) - 102.74° F  (39.3°C )
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) -  102.56° F  (39.2°C )
வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 102.56° F  (39.2°C )
#கரூர் பரமத்தி  - 102° F  (39°C )
#களவை AWS (வேலூர் மாவட்டம் )- 101.8° F  (38.8°C )
#காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம் மாவட்டம் ) -  101.6° F  (38.7°C )
#தர்மபுரி   - 101.48° F  (38.6°C )
திருச்சி - 101.3° F  (38.5°C )
#வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம் ) - 101.3° F  (38.5°C )
#பூந்தமல்லி (திருவள்ளுர் மாவட்டம் ) - 101.12° F  (38.4°C )
#திருநேல்வேலி AWS (நெல்லை மாவட்டம் ) - 99.9° F  (37.7°C )
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 99.5° F  (37.5°C )
#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) -  99° F  (37.3°C )
 


01-03-2019 தமிழகத்தின் கடந்த 24 மணி நேர வானிலை

01-03-2019 நேரம் காலை 10:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #சேலம் மாவட்டம் #எடப்பாடி பகுதியில் கிட்டத்தட்ட 103 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இந்த மாதத்தின் முதல் நாளில் தமிழகத்தின் ஒரு பகுதியில் கிட்டத்தட்ட 100 மி.மீ க்கும் அதிகமான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருப்பது வரவேற்க்கத்தக்கது.அதேபோல #நெல்லை மாவட்டம் #சங்கரன்கோயில் பகுதியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 54 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

01-03-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.
------------------------------------------------------
எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 103 மி.மீ
சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 54 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 37 மி.மீ
#பிளவாக்கால் -வருசநாடு அருகே (விருதுநகர் மாவட்டம் ) - 27.6 மி.மீ
#ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) - 16 மி.மீ
#ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 15.4 மி.மீ
#வேம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம் ) - 8.5 மி.மீ
#ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 8.4 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 8.1 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 7 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 4 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 3.6 மி.மீ
தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 3.4 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 3.2 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 2 மி.மீ

28-02-2019 ஆகிய நேற்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8.6 மி.மீ
கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 5.4 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாவட்டம் ) - 4 மி.மீ
பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3.2 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
என்னூர் துறைமுகம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 3 மி.மீ
மீனம்பாக்கம் (சென்னை மாவட்டம் ) - 2.8 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 1.2 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 1 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ


அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதே சமயம் 06-06-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேற்கு மாநிலங்களில் தீவிரமடைய தொடங்கலாம் இதனால் அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான கேரளா முதல் மஹாராஷ்டிரா வரை உள்ள கடலோர மாவட்டங்களின்  அநேக பகுதிகளும்  பயனடையலாம்.குறிப்பாக 07-06-2018 ஆம் தேதி ஆகிய நாளை மறுநாள் முதல் குமரிக்கடல் ,அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் குறிப்பாக குமரி மாவட்டம் அருகே உள்ள கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் அதே போல தமிழக வட கடலோர மற்றும் தென்கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் அப்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.அடுத்து வரக்கூடிய நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது இது தொடர்பான எச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தால் இன்று அல்லது நாளை பிறப்பிக்கப்படலாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த மீனவர்கள் அதன்படி நடப்பது நல்லது.மேலும் 07-06-2018 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழக உள் மாவட்டங்களிலும் வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்கக்கூடும் இதனால் மேற்கு திசை காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் அதே சமயம் அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 07-06-2018 முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை கீழே வழங்குகிறேன்.

மேலும் நான் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தது போல 08-06-2018 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு கிட்டத்தட்ட 08-06-2018 ஆம் தேதி வாக்கில் இன்று எடுத்துக்கொள்வோம் வட வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு மாதிரிகளின் தகவல்களும் தெரிவிகின்றன மேலும் அது வங்கதேச கரையை ஒட்டி நகரலாம் இதன் காரணமாகவும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து இருக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது இந்த தருணத்தில் நான் கடந்த ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் கடந்த ஆண்டு 01-06-2017 ஆம் தேதி அன்று காரைக்காலில் அதிகபட்சமாக 42.4° செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது பதிவேடுகளில் அடிப்படையில் பார்க்கப்போனால் இது வரை காரைக்கால் வரலாற்றிலேயே ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அது தான் நான் அப்பொழுது சென்னையில் இருந்தேன் இதை எதற்கு நான் இங்கே பதிவிட விரும்பினேன் என்றால் ஜூன் மாதத்தில் காரைக்காலில் அவ்வளவு அதிகமான வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஆகையால் இயற்கையை பொறுத்தவரையில் இவைகளெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று எதுவுமே கிடையாது வாய்ப்பு குறைவு என்று மட்டும் தான் நம்மால் கூற முடியும்.

தற்போதைய இந்த சூழல்களே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரும் பட்சத்தில் 08-06-2018  மற்றும் 09-06-2018 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களின்  அநேக இடங்களிலும் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 2 ° முதல் 3° செல்சியஸ் வரையில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை அடுத்த வரக்கூடிய நாட்களில் உறுதி செய்கிறேன்.

07-06-2018 அல்லது 08-06-2018 ஆம் தேதிகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகிறேன்.இன்றைய மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போதைய வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஓரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

07-04-2018 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?


07-04-2018 நேரம் அதிகாலை 1:55 மணி அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதனை பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 05-04-2018 அன்று  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெரிய அளவிலான அம்சங்கள் குறித்து பார்ப்போம் (Large Scale Factors).

  • தற்பொழுது பசிபிக் கடலின் சமவெளிப்பரப்பில் லா- நினா வுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன. Monsoon Mission Climate Forecast System (MMCFS) மாதிரிகளின் முன்னறிவிப்புகளின் படி அடுத்து வரக்கூடிய வாரத்திலேயும் இதே நிலையே தொடரலாம்.
  • மேடன் - ஜுலியன் அலைவு ஆனது தற்பொழுது அதன் எட்டாவது கட்டத்தில் ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவுடன்  உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இதே அதன் எட்டாவது கட்டித்தேலேயே தொடரலாம் (என்னை பொறுத்தமட்டில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மேடன் - ஜுலியன் அலைவு ஆனது அதன் ஒன்றாவது கட்டத்தை அடையலாம் மேலும் இந்த மாத மத்தியில் அது குறைவான வீச்சு அளவுடன் இரண்டாவது கட்டத்துக்கு வரலாம் ).
  • இந்திய பெருங்கடல் இருமுனையானது (Indian Ocean Dipole) தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.
நான் இதற்கு முந்தைய பதிவுகளில் வெப்பநிலை குறைவு மற்றும் மழை தொடர்பான தகவல்களை பதிவிட்டு இருந்திருந்தேன்.அதாவது நிகழும் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இயல்பான பகல் நேர வெப்பநிலை அளவை காட்டிலும் சராசரியாக 0.5° முதல் 1.0° செல்சியஸ் வரையில் குறைவான வெப்பநிலையே பதிவாக வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்து இருந்தேன்.அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நிகழும் 2018 ஆம் ஆண்டு  கடந்த சில ஆண்டுகளை போல அல்லாமல் ஏப்ரல் மாதத்தில் அவ்வப்பொழுது மழைக்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் ஆண்டாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஆங்காங்கே ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக பகல் நேர வெப்பநிலையானது இதற்கு முன்பு நிலவி வந்ததை விட மெல்ல மெல்ல குறைய தொடங்கலாம் அல்லது இதே பகல் நேர வெப்பநிலையே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம். வெப்பநிலை மாறுபாடுகள் தொடர்பாக நமது பக்கத்தில் தினமும் அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன்.

07-04-2018 (இன்று ) மற்றும் 08-04-2018 (நாளை ) தமிழகத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் / பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம்.தமிழகத்தின் அணைத்து கடலோர மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம் மேலும் இன்று முதல் இந்தியாவின் அஸ்ஸாம் , மேற்குவங்கம் , ஒரிசா , பீஹார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.

நிகழும் 2018 ஏப்ரல் மாதத்தில் அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு. 09-04-2018 அல்லது 10-04-2018 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதன் பிறகு வட கடலோர , உள்  ,தென் , தென் கடலோர , மேற்கு மற்றும் வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் எனது அதிகாலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டுள்ள மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் .இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


2018 ஆம் ஆண்டு வட மாநிலங்களில் வெயில் கொழுத்த போகுது - வெப்பத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பிழைக்குமா தமிழகம் ?

2018 ஆம் ஆண்டு பருவமழைக்கும் முந்தைய காலகட்டமான (Pre-monsoon season ) மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அதிகாரபூர்வ அறிக்கையில் நிகழும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான காலகட்டத்தில் வட  , வட மேற்கு  , வட கிழக்கு மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 1° செல்சியஸ் வரையில் அதிகபட்ச வெப்பநிலையானது உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த காலகட்டத்தில் அவ்வப்பொழுது கடுமையான வெப்ப அலை ( Severe Heat Wave ) ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் கேரளா , தமிழ்நாடு , ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 0.5° செல்சியஸ் வரையில் அதிகபட்ச வெப்பநிலையின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 0.5 ° செல்சியஸ் குறையலாம் என எதிர்பார்க்கப் பட்டாலும் இதனால் தமிழகம் வெப்பத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பிழைக்குமா என்பது சந்தேகம்தான்.

அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான வானிலை தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.23-08-2017 புதுச்சேரியில் டி.டி.வி யா ? அறியாங்குப்பத்தில் திடீர் பரபரப்பு - வீராம்பட்டினம் விண்ட் பிளவர் ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக அதிமுகவின்  ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகளின் இணைப்பை எதிர்த்து தமிழக முதலமைச்சர் இ.பி.எஸ் க்கு இதுநாள் வரையில் அளித்து வந்த தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுனரை சந்தித்து தனித்தனியே கடிதங்களை வழங்கிவிட்டு 19 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரி அரியாங்குப்பத்திற்கு அருகே உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட்டிர்க்கு வருகை தந்து ஓய்வு எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்களை சந்திக்க 23-08-2017 (இன்று ) டி.டி.வி . தினகரன் புதுச்சேரிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

23-08-2017 செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முன்னதாகவே டி.டி.வி.தினகரன் தெரிவித்து இருந்தார் இன்று புதுச்சேரி விண்ட் பிளவர் ரிசார்டுக்கு வருகை தந்து 19 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தபிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என செய்திகள்  வெளியாகி வருகின்றன .இதனால் அப்பகுதியில் இருக்கும் டி.டி.வி யின் ஆதரவாளர்கள் விண்ட் பிளவர் ரிசார்ட் இருக்கும் பாதையில் ஆங்காங்கே கூடி வருகின்றனர் இதனையடுத்து அரியாங்குப்பம் பகுதியில் புதுச்சேரி காவல் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 19 தமிழக எம்.எல்.ஏ க்கள் புதுச்சேரியில் வந்து தங்கியிருப்பதால் அரியாங்குப்பம் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவி வருகிறது.பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடத்தில் இல்லை - தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தன்னிடத்தில் இல்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சற்று முன்பு ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.சென்னை நந்தனத்தில் தமிழக அரசு உதவியுடன் இயங்கும் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரசகுல்லாவை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வினை பார்க்கும் பொழுது தன் கீழ் இயங்கும் ஒரு துறை சார்ந்த நிறுவனத்தின் பொருட்களில் கலப்படம் இருக்கிறது நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இல்லை என்று ஒரு அமைச்சர் கூறுகிறார் என்றால் அப்பொழுது யாருக்கு தான் அதிகாரம் உள்ளது ? என்ற கேள்வியை முன்வைக்க தோன்றுகிறது.மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருட்களில் பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றில் கலப்படம் இல்லை என தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் பாலுடன் சோப்பு நுரை கலந்து விற்பனை  செய்யப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்ததும் அதனையடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் அவை உண்மை என்பது போன்று ஆய்வு முடிவுகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது இப்படி தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்யப்பட்டு விரப்பணி செய்யப்பட்டு வருவது உறுதியாகியுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும்  பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வரும் பாலின் தரம் குறித்து சோதனைகள் மேற்கொள்ள புதுச்சேரி அரசோ அல்லது ஆளுநரோ உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே புதுவை மாநில மக்களின் கோரிக்கையாக உள்ளது.


ஜல்லிக்கட்டு நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே இயற்றப்பட்ட அவசர சட்டத்தை நிரந்திரமாக இயற்றுவதற்கான சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.இதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட திருத்த முன் வடிவினை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து மசோதா குறித்து பேசினார். இந்த சட்ட முன் வரைவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் வரவேற்றுப் பேசினர். உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக புதிய சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேறியதாக தகவல்.இனி இந்த சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் இருக்கிறது அவர் கையெழுத்துக்கு பின் இது நிரந்தர சட்டமாகும்.

மோடியெனும் கழுகு சிதறி ஓடும் மன்னார்குடி கோழிக்குஞ்சிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓரு  ராஜாளி கூட்டம்  போல் தங்களை எண்ணிக்கொண்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற துடித்த மன்னார்குடி குடும்பம் இன்று பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் காரணம் என்ன ? அதிமுகவை அப்படியே சுருட்டி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்   கொண்டுவர எண்ணிய அந்த கூட்டத்தின் கனவு தான்.முதலமைச்சருக்கே கட்டளைகள் விடுத்த அந்த கூட்டத்தின் ஒவ்வொரு நபர்களும் மத்திய அரசால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்களாம்.தலைமை செயலாளர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு பிறகு சற்று கலங்கி போயிருந்தனராம் அந்த மன்னார்குடி குடும்பத்தினர். தற்பொழுது மத்திய அரசு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் முன்னாள் முதல்வரின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில்  ஒரு ராஜாளி கூட்டம் போல விளங்கிய மன்னார்குடி குடும்பத்தினர் இன்று கழுகை கண்டு சிதறி ஓடும் கோழிக்குஞ்சுகள் போல் ஆகிவிட்டனராம்.
கட்டம் கட்டும் பன்னீரு கலங்கியிருக்கும் சசிகலா வட்டாரம்

சில தினங்களுக்கு முன்பு வரை நிலவிய சூழல் அதிமுக வட்டாரத்தில்  தற்பொழுது கிடையாதாம்.நிலைமை அப்படியே தலை கீழாக மாறிவிட்டதாம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு கழக பொதுச் செயலாளர் பதவியை யாரும் ஏற்க முன்வராத நிலையில்  அம்மாவின் உடன் பிறவா சகோதரி என்று அடையாளம் காணப்பட்டு,சசிகலாவை  சின்னம்மா என்று வழங்கி கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் பொதுச் செயலாளர் பதவியை ஏற்கும் படி அழைப்புவிடுத்து வந்தனர்.இந்நிலையில் தான் சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஒரு கூட்டம் வெளிப்படையாக கருத்து கூற ஆரம்பித்தது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகள் அந்த நிகழ்வுகளில் சசிகலா மற்றும் பன்னீரு என இருவரின் பெயர்களும் மாறி மாறி முன்னிலைப்படுத்தப் பட்டது இவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே.

இந்த அடுக்கடுக்கான நிகழ்வுகளை தொடர்ந்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பாரத பிரதமர் மோடியை சந்தித்து வர்தா புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை செய்து திரும்பினார்.அதன் பிறகு தான் அதிமுக கட்சிக்குள் இத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அரங்கேறியனவாம்.அந்த மாற்றங்களுக்கு பின் மூத்த தலைவர்களின் பார்வை பன்னீரின் பக்கம் திருப்பியிருக்கிறதாம்.சசிகலாவை ஆதரிக்கும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து வருகிறதாம்.இப்படியே போனால் பொதுக்குழுக் கூட்டத்தில் நிலைமை என்ன ஆகும் என கலங்கி போயிருக்கிறார்களாம் சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும்.

சசிகலாவுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு ?

சசிகலா ஏன் தமிழக முதல்வர் ஆகக்கூடாது ? இந்த கேள்வியை எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்திடம் கேட்டால் அவர்கள் கூறும் பதில்கள் யாவும் மிகக் குழந்தைத் தனமாக உள்ளன.நாமாக பேசுவது வேறு பிறர் கூறியதை நம் கருத்துப்போல் பேசுவது வேறு .சசிகலாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் எதிர்ப்புகள் எல்லாம் பிறர் கூறியதை நம் கருத்துப்போல் பேசுவது என்கின்ற ரகம் தான்.

இன்றைய சூழலில் ஒரு அரசியல் கட்சி நடத்த என்னென்ன தேவை ? இந்த கேள்வியை ஒருவரிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் அதற்கு கொள்கை,தியாகம்,நேர்மை என பதில் கூறுபவர்கள் மட்டும்தான் சசிகலாவின் தகுதியை பற்றி பேச வேண்டும்.நீங்களே உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நண்பர்களே இன்றைய சூழலில் ஒரு அரசியல் கட்சியை  நடத்தி செல்ல எது முக்கியமான தேவையாக இருக்கிறது பணம் ,அதிகாரம், ஆட்கள் (அடியாட்கள்),ஆளுமை,பேச்சாற்றல்,அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறன் இவைகள் தானே.சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பது போல ஆளுமை ஆட்சி செய்யும் பொழுதும் ,பேச்சாற்றல் மேடையில் பேசம்பொழுதும் அனுபவத்தில் தானே வந்துவிடும்.இதைத்தவிர நாம் மேல்  கூறிய தகுதிகள் அனைத்தும் சசிகலாவிடம் இருக்கிறது என்பது தான் உண்மை.கட்சியை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அம்மா இருந்தவரை கட்சியில் தனக்கு கீழ் இருந்த அமைச்சர்கள் உட்பட யாரையும் கட்சியை கட்டி காக்கும் அளவிற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள விட்டது கிடையாது.தமிழகத்தில் உள்ள அணைத்து தொகுதியிலும் தன்னை  தவிர வேறு யாரையும் முன்னிலை படுத்துக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் அம்மா.அப்படி அவர்கள் கொஞ்சம் அதிகாரம் மிக்கவர்களாக உருவெடுக்க தொடங்கினால் மறுநாளே அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கின்ற அளவில் தான் அனைவரையும் வைத்திருந்தார் ஒருவரை தவிர  அந்த ஒருவர்தான் சசிகலா.அம்மாவுக்கு பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து கட்சிக்கு வரும் நிதி  ,பஞ்சாயத்து என அனைத்திலும் அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையில் இன்று கட்சியில் இருப்பவர் ஒருவர் மட்டுமே அவர் தான் சசிகலா.

சசிகலாவை பதவிக்கு வர விடக்கூடாது என்பது தான் எதிர்க்கட்சிகளின் தலையாய திட்டமாக இருக்கும்.ஏனென்றால் சசிகலாவை தவிர வேறு யார் கட்சியில் இருந்து முன்னிலை படுத்தப்பட்டாலும் பட்டி தொட்டியெங்கும் அவர் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர பல நாட்கள் ஆகும் அந்த கால தாமதம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும்.அவர் மருத்துவமனையில் என்ன செய்தார் அவர் குற்றமற்றவரா இல்லையா என்கின்ற கேள்விகளையெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு அதிமுக என்ற கட்சியின் எதிர்காலத்தை பார்ர்கும் பொழுது சசிகலா தலைமை பொறுப்பை ஏற்பது தான் நல்லது என்று தோன்றுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...