விண்ணை தாண்டி வருவாயா என்ற வெற்றி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இத்திரைப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி விட்டதால் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளி வந்து இருக்கிறது இந்த திரைப்படம்.இது திரை ரசிகர்கள் மற்றும் இசைரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு(STR)வுக்கும் எதிர்பார்ப்புக்குரிய முக்கியமான திரைப்படம் தான்.சரி வாருங்கள் இப்பொழுது இத்திரைப்படத்தின் திரைக்கதையை காண்போம் .
திரைக்கதை :
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிகிறார் சிம்பு,அப்பா அம்மா அன்பான இரு தங்கைகள் என அழகான குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.அவருடைய மூத்த தங்கையின் தோழியாக வருகிறார் கதாநாயகி மஞ்சிமா மோகன் அவரின் வசம் காதல் வயப்படுகிறார் சிம்பு.அதிர்ஷ்டம் சிம்புவின் பக்கம் இருக்க மஞ்சிமா மோகன் சில நாட்கள் சிம்புவின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அப்போழுது இருவரும் பேசி பழகுகிறார்கள் பின் சிம்பு தன நண்பர் சதீஷுடன் ("மானாட மயிலாட "சதீஷ் ) கன்னியாகுமாரி வரை இருசக்கர வாகனத்தில் ரையிடு செல்ல இருப்பதாக மஞ்சிமா மோகனிடம் தெரிவிக்கிறார்.மஞ்சிமா மோகன் அவருடன் கன்னியாகுமரிக்கு இரு சக்கர வாகனத்தில் வர விருப்பம் தெரிவிக்கவே சதீஷை துரத்தி விட்டு மஞ்சிமா மோகனுடன் தனது பயணத்தை தொடங்குகிறார் சிம்பு.கன்னியாகுமரியில் இருக்கும் பொழுது மகாராஷ்டிராவில் உள்ள தன் சொந்த ஊருக்கு செல்ல போவதாக கிளம்புகிறார் மஞ்சிமா மோகன் தானே அங்கே கொண்டு போய் விடுவதாக கூறி மீண்டும் பைக் பயணத்தை தொடர்கிறார் சிம்பு அப்பொழுது எதிர் பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒரு லாரி மீது மோதுகிறது.அடிப்பட்டு கிடந்தபொழுது தன் காதலை சொல்லாமலேயே இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தனது காதலை மஞ்சிமா மோகனிடம் தெரிவிக்கிறார் சிம்பு.பின் சில காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து கண் விழித்த சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் தன் அருகில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.வருத்தத்துடன் இருந்த சிம்புவுக்கு மஞ்சிமா மோகனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அதில் தனது தந்தையையும் தாயையும் வெட்டி விட்டார்கள் என பதற்றத்துடன் தெரிவிக்கிறார் மஞ்சிமா மோகன்.அதனால் தன் நண்பர் சதீஷையும் அழைத்துக் கொண்டு தன காதலியை பார்க்க அவர் ஊருக்கே செல்கிறார் சிம்பு.அங்கே மருத்துவமனையில் சென்று காதலியின் பெற்றோரை பார்த்த சிம்புவுக்கு மேலும் அதிர்ச்சி அழிக்கும் வகையில் மஞ்சிமா மோகனை கொள்ளவும் ஆட்கள் வருகின்றனர் அவர்களை அடித்து தும்சம் செய்கிறார் சிம்பு.போலீசும் கொள்ள வந்தவர்களுக்கே ஆதரவாக இருக்க தன காதலியை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார் சிம்பு.இதனிடையே மஞ்சிமா மோகனை கொள்ள அடுத்தடுத்து முயற்சிகள் நடக்கின்றன அவற்றை பல பேரை துப்பாக்கியின் உதவியுடன் சுட்டு வீழ்த்தி சிம்பு முறியடிக்கிறார் அந்த முயற்சியில் தனது நண்பரையும் இழக்கிறார்.தன் நண்பனை கொன்றவர்களை சிம்பு எப்படி பழிவாங்கினார்.தன் காதலியை கொலை செய்ய துரத்த என்ன காரணம் என சிம்பு எப்படி கண்டுபிடித்தார் இதுவே மீதிக்கதை.
விமர்சனம் :
திரைப்படத்தின் திரைக்கதையை கேட்டீர்கள் கேட்க்கும் பொழுது மிக சாதாரண வழக்கமான கதைப்போல் தான் தோன்றும்.ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் பொழுது ஒரு புதுமையான திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருப்பது போல் தோன்றும் அவ்வளவு அழகான காட்சி அமைப்புகள்.நீங்கள் காதல் காட்சிகளை விரும்பி பார்க்கும் நபர் என்றால் முதல் பாதியில் காலம் நீள்வதை கூட உணர உங்களிடம் நேரமிருக்காது நீங்கள்
ஆக்சன் காட்சிகளை விரும்பி பார்ப்பவர்கள் என்றால் மேற்குறிய நிலை உங்களுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்படும்.இதுவரை இயக்கப்பட்ட தமிழ் சினிமாவில் இது ஒரு தனி பாணி என்று தான் சொல்ல வேண்டும்.இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கியதற்கு இயக்குனர் கெளதம் மேனனுக்கு பாராட்டுக்கள் மட்டுமல்ல நன்றியே சொல்லலாம்.சிம்பு ஒரு வெற்றி படம் வழங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.முதல் பாதியில் சிறிது ஒல்லியாகவும் குண்டாகவும் மாறி மாறி தோன்றுகிறார் படப்பிடிப்பினை விட்டு விட்டு எடுத்தார்கள் போல ஆனால் நடிப்பில் காதல் காட்சிகளிலும் சரி ,ஆக்சன் காட்சிகளிலும் சரி வெளுத்து வாங்கியிருக்கிறார் தொடர்ந்து இதைப்போன்ற திரைப்படங்களை சரியாக தேர்வு செய்து நடித்தால் எங்கேயோ போய்விடுவார்.படத்தின் முக்கிய ஹீரோ இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் பின்னணியிலும் சரி பாடல்களிலும் சரி நம்மை மெய்மறக்க வைத்து விடுகிறார்.தள்ளிப்போகாதே பாடலும் அது இடம்பெறும் காட்சியும் நம்மை உறைந்து போக செய்கிறது அந்த பாடலின் ஆரம்ப இசையை கேட்டதும் ரசிகர்கள் கைத்தட்டலில் திரையரங்கே அதிர்கிறது.சிம்பு எல்லா வாகனத்தையும் சாவியே இல்லாமல் எப்படி இயக்குகிறார் என்பது போன்ற கேள்விகள் ஒரு சில காட்சிகளில் எழத்தான் செய்கின்றன. ஒரு சில லாஜிக்கான விஷயங்கள் சிறிது உறுத்தலை ஏற்படுத்தினாலும் அவைகள் எல்லாம் ஒட்டு மொத்த திரைப்படத்தின் தரத்துடன் ஒப்பிடும் பொழுது தவிடு போடியாகி விடுகிறது.மஞ்சிமா மோகன் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை பெரும்பாலான காட்சிகளில் இடம்பெற்று இருக்கிறார் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அணைத்து நாயகிகளுக்கும் இப்படி அமைவது அரிது தான் அதனை உணர்ந்து நடித்துள்ளார்.
பலம்
ரகுமானின் இசை
இயக்கம்
சிம்பு
பலவீனம்
சில லாஜிக் தவறுகள்
சிம்பு எப்படி புல்லட் ,டாக்சி என அணைத்து வாகனங்களையும் எடுத்த எடுப்பிலேயே ஸ்டார்ட் செய்துவிடுகிறார் என்று புரியவில்லை.
துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டே இருக்கிறார் அதில் எப்பொழுது தான் தோட்டாக்கள் தீரும் என்று நாமே கேள்வி கேட்க்கும் அளவு அதை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்.
கருத்து : வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் பிரச்சனைகள் வரும்.அப்படி எந்த பிரச்சனை வந்தாலும் அதை முறியடிக்கும் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.
பன்ச் : அச்சம் என்பது மடமையடா -இது தமிழ் சினிமாவுக்கு புதுமையடா.