தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
பருவமழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருவமழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02-11-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

02-11-2018 நேரம் மாலை 4:35 மணி தற்பொழுது மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றளுத்த தாழ்வு நிலையின் அகடு (Trough Of Low) காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் 04-11-2018 ஆகிய நாளை மறுநாள் அது வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக அந்த குறைந்த காற்றளுத்த தாழ்வு நிலையின் அகடு மேற்கு நோக்கி நகரும் பொழுது தூத்துக்குடி ,கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரளவு நல்ல மழை பதிவாகாலாம் நாளை தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.04-11-2018 அல்லது அதற்கு பிறகு தமிழகத்தில் பதிவாகிவரும் மழையின் அளவு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் உட்பட வட தமிழகத்தில் மழையின் அளவு முற்றிலும் குறைய தொடங்கலாம் அவ்வபொழுது ஒரு சில இடங்களில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து மழை பதிவாகலாம்.அதன் நகர்வுகள் தொடர்பாகவும் அன்றன்றைக்கு  மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாகவும் நமது பக்கத்தில் தினமும் பதிவிடுகிறேன்.

தற்பொழுது இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவுகளுக்கு மேற்கே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கலாம் மேலும் 04-11-2018 அல்லது 05-11-2018 தேதிகளின்  வாக்கில் அது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு இலங்கைக்கு கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளலாம் இதன் காரணமாக 06-11-2018 அல்லது 07-11-2018 ஆம் தேதி வாக்கில் தென் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து 08-11-2018 அல்லது 09-11-2018 ஆம் தேதி வாக்கில் இலங்கையின் தெற்கு பகுதிகளை அடைய முற்படலாம் அதன் பின் அது மன்னார்வளைகுடா பகுதிகளை அடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.ஒரு சில மாதிரிகள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து அது வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வரலாம் என்பது போன்ற தகவல்களை வழங்கி வருகின்றன என்னை பொறுத்தமட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்லத் தோன்றுகிறது எதுவாயினும் அடுத்த 2 அல்லது 3 மூன்று நாட்களில் அதன் நகர்வுகள் தொடர்பான உறுதியான தகவல்கள் தெரியவந்துவிடும் .அதன் பின் நமது பக்கத்தில் அது தொடர்பான  என்னுடைய இந்த கருத்தையே  உறுதிப்படுத்துகிறேன்.

மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 1வது கட்டத்தில் வலுவாக உள்ளது நான் கடந்த 25-10-2018 ஆம் தேதியன்று எழுதிய பதிவில் நவம்பர் மாத முதல் வாரத்துக்கு பிறகு மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வரலாம் என குறிப்பிட்டு இருந்தேன் அதன்படி 10-11-2018 (நவம்பர் 10) ஆம் தேதி வாக்கில் மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வலுவுடன் வர வாய்ப்புகள் உள்ளது 10-11-2018 முதல் 16-11-2018 ஆம் தேதி வரையில் அது அதனுடைய 2 வது கட்டத்திலேயே தொடரலாம் 17-11-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3 வது கட்டத்தை 1க்கு குறைவான வீச்சு அளவுடன் அடைய முற்படலாம்  அதுவும் வங்கக்கடல் பகுதியில் மழைக்கு சாதகமான சூழல்களை உருவாக்க வல்லது தான்.அதேசமயம் 09-11-2018 ஆம் தேதி வாக்கில் சுமத்ரா தீவுகளுக்கு கிழக்கே மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி 10-11-2018 அல்லது 11-11-2018 ஆம் தேதிகளின் வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைய வாய்ப்புகள் உள்ளது அதனுடைய அடுத்தகட்ட நகர்வுகளே இந்த பருவமழையின் போக்கை தீர்மானிக்கும் அம்சமாக அமையலாம்.நவம்பர் 14 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை உள்ள நாட்களில் பதிவாகும் மழையே இந்த ஆண்டின் பருவமழை சாதகமா ? பாதகமா ? என்பதனை எடுத்துரைக்கும் விதமாக அமையும்.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

2018 வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தான் தொடங்கும் - வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் சிக்கல்

24-10-2018 நேரம் பிற்பகல் 1:45 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படம் இன்று பிற்பகல் 1:20 மணி வாக்கில் பதிவானவ.அதன்படி நான் காலை எனது பதிவில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது நாகை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது குறிப்பாக நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்பொளுது இலங்கையில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக இன்று இலங்கையின் தெற்கு , மத்திய மற்றும் மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த இடியுடன் கூடிய வலுவான மழைக்கும் வாய்ப்புகள் உண்டு குறிப்பாக #Balangoda மற்றும் அதன்  சுற்றுவட்டப் பகுதிகளிலும் பிற தென் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வலுவான மழை பதிவாகலாம்.

24-10-2018  தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று அந்த மேலடுக்கு சுழற்சியின் நகர்வின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் இருந்து சற்று மழை மேகங்கள் உட் புகவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது இதன் காரணமாக இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி ,நெல்லை ,சிவகங்கை ,மதுரை ,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் தற்பொழுது #நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல திருவாரூர் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகாலாம் மேலும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

01-11-2018 அல்லது 02-11-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் நவம்பர் மாதத்தில் தமிழிகக்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று அடுத்து வரக்கூடிய வாரத்திரகான வானிலை தகவல்களை பதிவிடுகையில் இணைத்து பதிவிடுகிறேன்.26-10-2018 அல்லது 27-10-2018 ஆம் தேதிகளில் வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது இம்முறையும் அது தமிழகத்தை விட்ட விலகி  வடக்கு ஆந்திரம் அல்லது தெற்கு ஒடிசா மாநில பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் ?

30-05-2017 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் 03-06-2017 முதல் மழை பெய்ய தொடங்கலாம்.கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் தான் மழை இருக்கும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரே  நாளில் 10 செ.மீ க்கும் அதிகமான அளவு மழை என்பது மிகவும் அரிதான ஒன்றாக தான் இருக்கும் அதாவது தற்பொழுது வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் கன மழைக்கு வாய்ப்பில்லை.அடுத்து வரக்கூடிய வாரத்தில் அதாவது 08-06-2017 அல்லது 09-06-2017 ல் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது அது எந்த திசையில் நகர்கிறது என்பதை பொறுத்தே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகளும் இருக்கும்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் அது ஒரிசா அல்லது வட ஆந்திர மாநிலங்களுக்கு அருகே நிலைகொள்ள வாய்ப்புள்ளது அவ்வாறு நிகழும் பட்சத்தில் தமிழக வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறையும்.
மேலே நீங்கள் காண்பது தற்போது நிலவும் வானிலையைக் கொண்டு அடுத்து வரக்கூடிய 4 வாரங்களுக்கான கணினியால் கணிக்கப்பட்ட மழை அளவை விளக்கும் படம் அதில் ஜூன் 9 ஆம் தேதிக்கு பிறகு தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கான சுவடு இருப்பதாக தெரியவில்லை.ஆனால் இப்படி தான் நிகழும் என்று உறுதியாக கூறமுடியாது.வானிலையில் ஏதேனும் மாற்றம் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


30-05-2017 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

30-05-2017 அன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த 27-05-2017 முதல் கேரள தென் அரபிக்கடல் பகுதியில் மழை மேகங்கள் தொடர்ந்து சூழ்ந்து வந்ததை செயற்கைக்கோல் புகைப்படங்களின் மூலம் காணமுடிகிறது எனவும் கடந்த இரண்டு நாட்களாக அதாவது 48 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் உள்ள 78% பகுதிகளில் மழை பதிவாகியிருப்பதாகவும்  மேலும் இதைப்போன்ற சில காரணங்களால் வழக்கத்தை விட முன்பாகவே 30-05-2017 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் இரண்டு வாரங்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இனி தமிழகத்தில் நல்ல மழை பெய்யுமா ? என்று கேட்டால் அதற்கு பதில் வரக்கூடிய வாரத்தில் தமிழகத்தை விட அதிகமாக வட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பது தான்.வரும் வாரத்தில் தமிழகத்தின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மதியம் அல்லது மாலை நேரத்தில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் ஆனால் பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை அடுத்து வரக்கூடிய வாரத்தில் அதாவது 08-06-2017 அல்லது 09-06-2017 தேதிதிகளில் வங்கக்கடலில் அந்தமானுக்கு வட மேற்கு திசையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் அது வலு அடைந்து இந்திய வட கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு அருகே நிலைக்கொள்ளலாம் அது எந்த திசையில் நகர்கிறது என்பதை பொறுத்தே அந்த வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகளும் இருக்கும்.









இருதினங்களில் பருவமழைக்கு வாய்ப்பே இல்லை - தமிழ்நாடு வெதர்மேன்

இன்று பெரும்பாலான செய்தித்தாள்களில் வட கிழக்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டு  வருகின்றன.இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தின் பொழுது மழை வருவது குறித்து செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைக்கு வாய்ப்பே இல்லை  என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பதாக கூறப்படும் ஒரு செய்தியை மறுத்து இவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

யார் இந்த பிரதீப் ஜான் ? 
இவர் முகநூலில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பக்கத்தை நடத்தி வருவபவர்.சமீப காலத்தில் மழை வருவது குறித்து செய்தி வெளியிடுவதில் முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணனுக்கு அடுத்து மிகவும் பிரபலமானவர்.இதுவரையில் திட்ட திட்ட ஒரு லட்சம் முகநூல் பயனீட்டாளர்களுக்கு மேல் இவருடைய பக்கத்துக்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருந்த பொழுது வெளியான புயல் வதந்திகளுக்கு எதிராக செய்தி வெளியிட்டு ஊடகங்களையும்,மக்களையும் ஏன் சில அரசியல் பிரபலங்களை கூட தன்னை திரும்பி பார்க்கும்படி செய்தவர்.அதை தொடர்ந்து மழை வருவது குறித்து சரியான செய்திகளையும்,தகவல்களையும் வெளியிட்டு இணைய பயனீட்டாளர்களிடம்  நர்பெயரை சம்பாரித்தவர்.

யாருடைய கணிப்பு சரி என்று இன்னும் இரு தினங்களில் தானே தெரிந்து விடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...