தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
பருவமழை .01-11-2018 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருவமழை .01-11-2018 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மண் நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது வட கிழக்கு பருவமழை

31-10-2018 நேரம் காலை 10:05 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் மற்றும் ராடார் படங்கள் இன்று காலை 9:50 மணி வாக்கில் பதிவானவை அதன்படி நான் நேற்றைய எனது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு முதல் #சென்னை  மற்றும் #திருவள்ளூர் ,#காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்பொழுது சிறு சிறு மழை மேகங்கள் நுழைந்து தொடர்ந்து அவ்வப்பொழுது மழை பொழிவை ஏற்படுத்தி வருகின்றன இன்றும் இதன் பிறகு இதே நிலையே தொடரும் அவ்வப்பொழுது சில இடங்களில் விட்டு விட்டு அல்லது மழையின் அளவு குறைந்து பின்னர் மீண்டும் அதிகரித்து மழை தொடர்ந்து பதிவாகலாம.இன்றும் நள்ளிரவு மற்றும் 01-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரங்களில் #சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இன்னும் சற்று நேரத்தி #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை மாநகரின் வடக்கு புறநகர் கடலோர பகுதிக உட்பட அநேக கடலோர பகுதிகளிலும் சற்று உவலுவான மழை பதிவாக தொடங்கலாம் மேலும் தற்பொழுது #காரைக்கால் மாவட்டம் அருகிலும் மழை மேகங்கள் குவிய தொடங்கியுள்ளன அடுத்த சில நிமிடங்களில் காரைக்கால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக தொடங்கலாம்.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று வட கடலோர மாவட்டங்களின் அநேக கடலோர பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் தென் கடலோர , தென் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இன்றும் #நெல்லை மற்றும் #குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் நேற்று நள்ளிரவு வாக்கில் #மதுரை மாவட்டம் #மேலூர் மற்றும் #சிவகங்கை மாவட்டம் #திருபுவனம் சுற்றுவட்டப் பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பதிவாகியுள்ளது இன்றும் சிவகங்கை ,விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

முன்பு வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது அடுத்த சில மணி நேரங்களில் முற்றிலும் வலுவிழந்து போக முற்பட்டு வருகிறது இது வலுவிழந்து வருவதன் காரணமாகவும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர முற்பட்டு வருவதன் காரணமாகவும் தற்பொழுது தமிழக கடலோர மாவட்டங்களில் காற்று சாதகமாக விழ தொடங்கியுள்ளது இது வட கிழக்கு பருவமழை தொடங்கியதற்கான அறிகுறி தான் .நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 01-11-2018 ஆகிய நாளை வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம்.01-11-2018 ஆகிய நாளை தற்பொழுது இலங்கைக்கு கிழங்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு இலங்கையில் நிலைகொள்ளலாம் இதன் காரணமாக  கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகலாம் அது மேலும் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலைகொள்ள முற்படும் பட்சத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது 02-11-2018 அன்று அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.அதன் நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகளுடன் இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

31-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவுகளின் நிலவரம்.

#எண்ணூர் AWS (திருவள்ளூர் மாவட்டம் ) - 49 மி.மீ
#DGP அலுவலகம் (சென்னை மாநகர் ) - 48 மி.மீ
#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 47 மி.மீ
#பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 46 மி.மீ
#மேலூர் ARG (மதுரை மாவட்டம் ) - 37 மி.மீ
#சுரலகொடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 35 மி.மீ
#பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி மாவட்டம் ) - 32 மி.மீ 
#புழல் ஏரி  - #செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 31 மி.மீ
#கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 28 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 28 மி.மீ
#அண்ணாபல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 27
#திருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 25 மி.மீ
#சத்தியபாமா பல்கலைக்கழகம்  - #சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 22 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 22 மி.மீ
#மாதவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#பேசிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 17 மி.மீ 
#சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 11 மி.மீ
#தரமணி  (சென்னை மாநகர் ) - 10 மி.மீ
#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ 
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ

மழைக்கான வாய்ப்புகளுடன் இன்று மீண்டும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



01-11-2018 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கலாம் - #யூடு (#YUTU) புயலின் வீரியம்

29-10-2018 நேரம் பிற்பகல் 2:15 மணி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது தற்பொழுது பதிவாகி வரும் நிகழ் நேர செயற்கைகோள் படங்களின் உதவியுடன் அதனை தெளிவாக அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகலாம் தற்பொழுது ஒடிசாவின் #பிரமாப்பூர் (#Brahmapur) க்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று மேலும் வட -வட மேற்கு திசையில் நகர்ந்து 30-10-2018 ஆகிய நாளை காலை ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip) நகரின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் பின்னர் அது மேலும் வடக்கு  திசையில் நகர தொடங்கி ராஜ்நகர் உட்பட ஒடிசா மாநிலத்தின் பல கடலோர பகுதிகளிலும் நல்ல வலுவான மழை பொழிவை ஏற்படுத்தி ஒடிசா மாநிலம் #பாலசோர் அருகே உள்ள கடலோர பகுதிகளில் 31-10-2018 ஆகிய நாளை மறுநாள் கரையை கடக்க முற்படலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் நான் முன்பு பதிவிட்டு  இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது இலங்கைக்கு அருகே கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை வட கடலோர மாவட்டங்களில் அங்கங்கே ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 ஆகிய நாளை மறுநாள் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 முதல் 02-11-2018 வரை உள்ள 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளை வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வானிலை ஆய்வு மையத்திடன் இருந்து வெளியாகலாம்.

29-10-2018 நேற்று ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த #யூடு (#YUTU) சூறாவளியானது தற்பொழுது ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலு குறைந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதிகளை நெருங்க முற்பட்டு வருகிறது.மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை அந்த #யூடு (#YUTU) சூறாவளியின் மையப்பகுதியானது #பலானன் (#Palanan)  நகரின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம் மேலும் #Tuguegaroa ,#ilagan , #Santiago , #Baggao , #Appari , #Santaana, #Dilasag , #Kabugao,#Baguio , #candon , #vigan , #Laoag மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #லூசன் (#LUZON) மாகாணத்தின் அநேக வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் மிக மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இந்த 2018 ஆம் ஆண்டில் இதுவரையில் நிகழ்ந்தேறிய இயற்கை பேரிடர்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய பட்டியல்கள் வரிசையில் இந்த #யூடு (#YUTU) வுக்கும்  கண்டிப்பாக இடம் இருக்கும்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...