தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

25-10-2018 நேரம் காலை 10:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்கள் இன்று காலை 10:00 மணி வாக்கில் பதிவானவை நேற்று இலங்கையில் நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இதென்ன மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் தாக்கத்தால் தென்மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள அந்த மேலடுக்கு சுழற்சியானது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுதும் நாகை மாவட்டம் #கோடியக்கரை பகுதிக்கு தெற்கே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வருகின்றன மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.25-10-2018 ஆகிய இன்றும் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்கள் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,விருதுநகர்,மதுரை  மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் வலுவான மழையை எதிர்பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.


25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 98 மி.மீ
#திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 87 மி.மீ 
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 84 மி.மீ
#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ 
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -63 மி.மீ
#தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 58 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ
#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 40 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் )- 35 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 33 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் )- 31 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 30 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ 
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 16 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#விளாத்திகுளம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் )  - 9 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் )  - 8 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


07-04-2018 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?


07-04-2018 நேரம் அதிகாலை 1:55 மணி அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதனை பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 05-04-2018 அன்று  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெரிய அளவிலான அம்சங்கள் குறித்து பார்ப்போம் (Large Scale Factors).

  • தற்பொழுது பசிபிக் கடலின் சமவெளிப்பரப்பில் லா- நினா வுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன. Monsoon Mission Climate Forecast System (MMCFS) மாதிரிகளின் முன்னறிவிப்புகளின் படி அடுத்து வரக்கூடிய வாரத்திலேயும் இதே நிலையே தொடரலாம்.
  • மேடன் - ஜுலியன் அலைவு ஆனது தற்பொழுது அதன் எட்டாவது கட்டத்தில் ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவுடன்  உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இதே அதன் எட்டாவது கட்டித்தேலேயே தொடரலாம் (என்னை பொறுத்தமட்டில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மேடன் - ஜுலியன் அலைவு ஆனது அதன் ஒன்றாவது கட்டத்தை அடையலாம் மேலும் இந்த மாத மத்தியில் அது குறைவான வீச்சு அளவுடன் இரண்டாவது கட்டத்துக்கு வரலாம் ).
  • இந்திய பெருங்கடல் இருமுனையானது (Indian Ocean Dipole) தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.
நான் இதற்கு முந்தைய பதிவுகளில் வெப்பநிலை குறைவு மற்றும் மழை தொடர்பான தகவல்களை பதிவிட்டு இருந்திருந்தேன்.அதாவது நிகழும் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இயல்பான பகல் நேர வெப்பநிலை அளவை காட்டிலும் சராசரியாக 0.5° முதல் 1.0° செல்சியஸ் வரையில் குறைவான வெப்பநிலையே பதிவாக வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்து இருந்தேன்.அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நிகழும் 2018 ஆம் ஆண்டு  கடந்த சில ஆண்டுகளை போல அல்லாமல் ஏப்ரல் மாதத்தில் அவ்வப்பொழுது மழைக்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் ஆண்டாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஆங்காங்கே ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக பகல் நேர வெப்பநிலையானது இதற்கு முன்பு நிலவி வந்ததை விட மெல்ல மெல்ல குறைய தொடங்கலாம் அல்லது இதே பகல் நேர வெப்பநிலையே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம். வெப்பநிலை மாறுபாடுகள் தொடர்பாக நமது பக்கத்தில் தினமும் அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன்.

07-04-2018 (இன்று ) மற்றும் 08-04-2018 (நாளை ) தமிழகத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் / பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம்.தமிழகத்தின் அணைத்து கடலோர மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம் மேலும் இன்று முதல் இந்தியாவின் அஸ்ஸாம் , மேற்குவங்கம் , ஒரிசா , பீஹார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.

நிகழும் 2018 ஏப்ரல் மாதத்தில் அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு. 09-04-2018 அல்லது 10-04-2018 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதன் பிறகு வட கடலோர , உள்  ,தென் , தென் கடலோர , மேற்கு மற்றும் வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் எனது அதிகாலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டுள்ள மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் .இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 2017 ஆகஸ்ட் மாதத்தில் 160 மி.மீ அளவை தாண்டி பதிவாகிய மழை

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்துக்கு சிறந்த மழையை வழங்கியுள்ளது.இந்த மாதத்தில் மட்டும் சுமார் 161.8 மி.மீ அளவு மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது திட்டத்திட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் ஆகஸ்ட் மாதத்தில் 160 மி.மீ அளவை தாண்டி மழை பதிவாகியுள்ளது இதற்கு முன்பு 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 167.8 மி.மீ மழை பதிவாகியிருந்தது அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக ஒரு முறை கூட ஆகஸ்ட் மாதத்தில் 160 மி.மீ அளவு மழை தமிழகத்தில் பதிவாகவில்லை.

இருபது மற்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிக பட்ச மழையே 249.1 மி.மீ தான் அதுவும் 108 வருடங்களுக்கு முன்பு 1909ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.


16-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

16-08-2017 இன்று வேலூர் ,ஈரோடு ,சேலம் ,கோயம்பத்தூர் ,திண்டுக்கல் ,திருச்சி ,திருப்பூர் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி,தேனி ,திருவண்ணாமலை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,கடலூர் ,புதுக்கோட்டை,நாமக்கல்,காஞ்சிபுரம் ,திருவள்ளூர்   மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

16-08-2017 இன்று சேலம் ,ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு ராசிபுரம் ,மல்லசமுத்ரம் ,திருச்சங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு மேலும் கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு நாகை மாவட்டம் திருக்கடையூர் பகுதிகளிலும் இன்று குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.கிருஷ்ணகிரியிலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ,ஊத்தங்கரை பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.


16-08-2017 இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு ஓசூர் ,தளி,கீழமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல  மழையை எதிர்பார்க்கலாம்.

16-08-2017 இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு சென்னையிலும் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.

16-08-2017 இன்று நாகபட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு காரைக்காலிலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


27-07-2017(நேற்று ) இரவு காரைக்காலில் 10.1 மி.மீ மற்றும் நாகப்பட்டினத்தில் 37.4 மி.மீ அளவு மழை பதிவானது - கடந்த 10 ஆண்டுகளில் நாகப்பட்டினத்தில் ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பதிவான மழையின் அளவில் இதுவே அதிகம்.

27-07-2017 (வியாழக்கிழமை ) இரவு திட்டத்திட்ட 10 நாட்களுக்கு பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவானது நேற்று மாலை அரியலூர் அருகே தொடங்கிய மழையானது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளை கடந்து சுமார் இரவு 7:30 மணி வாக்கில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது இதைத்தொடர்ந்து இரவு 8:30 மணியளவில் காரைக்கால் மாவட்டத்திலும் மழை தொடங்கியது இரவு 8:50 மணி வாக்கில் காரைக்கால் நகரப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது பின்னர் இரவு 9:50 வாக்கில் நாகப்பட்டினத்தில் கன மழை பெய்ய தொடங்கியது.

27-07-2017 நேற்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் பெய்த மழையின் அளவுகள்.

காரைக்கால் -----------------> 10.1 மி.மீ

நாகப்பட்டினம் ----------------->37.4 மி.மீ  ( திட்டத்திட்ட 4 செ.மீ )

கடந்த 10 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் நாகப்பட்டினத்தில் பதிவான மழையின் அளவில் இதுவே அதிகம் இது குறித்த தகவல்கள் பின் வருமாறு.

தேதி மற்றும்                     மழையின் அளவு
ஆண்டு

13-07-2007 --------------------> 22 மி.மீ
02-07-2008 --------------------> 6.9 மி.மீ
17-07-2010 --------------------> 13 மி.மீ    
27-07-2011 -------------------->27.2 மி.மீ
16-07-2012 -------------------->31.1 மி.மீ
08-07-2013 --------------------> 26.9 மி.மீ
07-07-2014 --------------------> 29 மி.மீ
22-07-2015 --------------------> 5.2 மி.மீ
21-07-2016 -------------------->16.2 மி.மீ
27-07-2017 --------------------> 37.4 மி.மீ

28-07-2017 இன்றும்  தமிழகத்தின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு இனி வரக்கூடிய நாட்களிலும் இது தொடரும்.


18-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

18-07-2017 இன்று கோயம்புத்துர் ,தேனி ,நீலகிரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு ,தர்மபுரி ,சேலம் ,நாமக்கல் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.

18-07-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம் மேட்டுப்பாளையம் ,சத்தியமங்கலம் ,சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம்.

18-07-2017 இன்று திருவாரூர் ,தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

18-07-2017 காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புண்டு.




11-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

11-07-2017 இன்று வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கடலூர் ,அரியலூர் மற்றும் புதுச்சேரி என தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது  அதேபோல நீலகிரி ,கோயம்பத்தூர் ,மதுரை ,சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

11-07-2017 இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கல்பாக்கம் ,உளுந்தூர்பேட்டை ,கள்ளக்குறிச்சி ,போளூர் ,ராணிப்பேட்டை ,குடியாத்தம்,ஆரணி,வடலூர்   உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது இதில் ஆரணி,திருவேந்திபுரம் ,வந்தவாசி பகுதிகளில் மிக கன மழை பதிவாகலாம்.

11-07-2017 (இன்றும்) மற்றும்  12-07-2017 (நாளையும் ) காஞ்சிபுரம் மற்றும் சென்னையிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.மேலும் வழக்கம் போல தென் தமிழகத்தில் மதுரை ,சிவகங்கை ,புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை இருக்கும் கடந்த சில நாட்களாக சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் மழை பதிவாகி வருகிறது.

11-07-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மாலை அலல்து இரவு நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கண்டிப்பாக மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்திலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

11-07-2017 இன்று புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புண்டு.


12-07-2017 நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.


04-07-2017 நேற்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் மிதமான மழை - காரைக்காலில் 16.8 மி.மீ -நாகப்பட்டினத்தில் - 15.7 மி.மீ அளவு மழை பதிவானது.

04-07-2017 (செவ்வாய்கிழமை) நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது.2017 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வாரத்தில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் கணிசமாக குறைந்து காணப்பட்ட நிலையில் புதிதாக பிறந்த ஜூலை மாதத்தில் பகல் நேரத்தில் திடீரெனெ வெப்பம் அதிகரிக்க தொடங்கியது நாகப்பட்டினத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது அதே போல காரைக்காலில் கடந்த 2 நாட்களாக 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகி இருந்தது  இந்நிலையில் நேற்று மாலை திருவாரூரில் மழை பெய்ய தொடங்கியது பின்னர் இரவு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் மழை பெய்ய தொடங்கியது உடனே முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை அரியலூர் மாவட்டத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் நகர்ந்து வந்த மழை மேகங்களால் வலு பெற்றது திட்ட திட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது.

04-07-2017 நேற்று காரைக்காலில் 16.8 மி.மீ அளவும் நாகப்பட்டினத்தில் 15.7 மி.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது கடந்த சில நாட்களாக பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை சார்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இனி வரக்கூடிய நாட்களில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதைப்போன்ற மழை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டி தீர்க்கும் மழை - 3 நாட்களில் திட்ட திட்ட 350 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது

27-06-2017 நேற்று காலை 8:30 மணியளவில் பதிவான மழை அளவின் படி அதவாது 26-06-2017 காலை 8:30 மணி முதல் 27-06-2017 காலை 8:30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின் படி தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 174 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது இந்நிலையில் 28-06-2017 இன்று காலை 8:30 மணிக்கும் பதிவான மழை அளவின் படி அதாவது 27-06-2017 காலை 8:30 மணி முதல் 28-06-2017 காலை 8:30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின் படி வால்பாறையில் திட்ட திட்ட 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது அதனையடுத்து கடந்த 3 நாட்களில் மட்டும் வால்பாறையில் திட்ட திட்ட 350 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஊட்டி ,கொடைக்கானல் ,வால்பாறை ,ஏற்காடு போன்ற இடங்களுக்கு படையெடுத்தனர்.கடந்த ஒரு மாத காலமாக இயற்கை வளம் குறையாத வால்பாறையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் வால்பாறையில் சுற்றுலா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர் மழையின் காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறையும்  அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் கடும் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த வால்பாறை வனப்பகுதியை சார்ந்த விலங்குகளுக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

10-06-2017 வங்கக்கடலில் ஒரிசா மேற்குவங்கம் அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை எப்படி இருக்கும் ?

09-06-2017 நேற்று காலை வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது 10-06-2017 தற்பொழுது ஒரிசா ,மேற்குவங்கம் ,வங்கதேசம் ,மியன்மார் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டுள்ளது.இது மேலும் வலு பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் 11-06-2017 அன்று இரவு அல்லது 12-06-2017 அன்று காலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் மேற்கு வங்கம் அல்லது வங்கதேசத்தில் கரையை கடக்கலாம்.அதனால் ஒரிசா ,வங்கதேசம் ,மேற்குவங்கம் ,வட ஆந்திரா மற்றும் தெலுங்கானா ,அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 4 - 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மணடலத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மழை எப்படி இருக்கும் ? 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு நேரடியாக மழை கிடைக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்லாமல் வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அருகே புதிதாக உருவாகும் மழை மேகங்கள் அனைத்தும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விசையால் வட கிழக்கு திசையில் இழுக்கப்படும் அதனால் அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  வட கடலோர மாவட்டங்களுக்கு இருக்கும் மழைக்கான வாய்ப்பை இது குறைக்கும்.இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உள் மற்றும் வட கடலோர பகுதிகள்  அனைத்தும் வெப்ப சலனத்தினால் ஏற்பட கூடிய மழையை தான் முழுதாக நம்பி இருக்க வேண்டும்.அவ்வாறு வெப்ப சலனத்தினால் தமிழக உள் பகுதிகளில் மழை மேகங்கள்  உருவாகும் பொழுது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விசையால் வட கடலோர மாவட்டங்கள் பலன் அடையும்.மற்றபடி தென்மேற்கு பருவமழையாலோ புதிதாக வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையாலோ தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர  மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

10-06-2017 க்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த மாதத்தில் மழைக்கு வாய்ப்பே இல்லையா ? 
ஏன் இல்லை தற்பொழுது தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகள் மற்றும் தமிழக தென் கடலோர மாவட்டங்கள் பலன் பெரும் அதைப்போன்று வெப்ப சலனம் காரணமாக உருவாகும் மழையால் தமிழகத்தின் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்கள் பலன் பெரும்.ஆனால் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு .

05-06-2017 நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பதிவான பகுதிகள்

05-06-2017 நேற்று இரவு தஞ்சாவூர் ,திருவாரூர் ,காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 140 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

05-06-2017 (நேற்று) காலை 8:30 மணி முதல் 06-06-2017 (இன்று) காலை 8:30 மணிவரையில் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பதிவான பகுதிகள்.

பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 140 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) ------------------->80 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) -------------------> 70 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) ------------------->70 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம் ) -------------------> 50 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 50 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம் ) -------------------> 50 மி.மீ
திருப்பதூர் (சிவகங்கை மாவட்டம் ) -------------------> 50 மி.மீ
மேட்டுப்பட்டி(மதுரை மாவட்டம் )  -------------------> 40 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) ------------------->30 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) ------------------->30 மி.மீ
திருமானுர் (அரியலூர் மாவட்டம் ) ------------------->30 மி.மீ
திருவிடைமருதூர் (திருவாரூர் மாவட்டம் ) ------------------->30 மி.மீ
ஜெயம்கொண்டாம் (அறியலூர் மாவட்டம் ) ------------------->30 மி.மீ
சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
பாண்டவையர் (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
காட்டுமன்னார் கோயில் (கடலூர் மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
காரைக்குடி (சிங்கங்கை மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
R.S.மங்களம் (ராமநாதபுரம் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
அணைக்கரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
கொள்ளிடம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோயம்பத்தூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
சின்னக்கல்லார் (கோயம்பத்தூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்  ) -------------------> 10 மி.மீ
வால்பாறை (கோயம்பத்தூர்  மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி ) -------------------> 10 மி.மீ
பாபநாசம் (திருநெல்வேலி ) -------------------> 10 மி.மீ

குறிப்பு : (மழையின் அளவு மி.மீ ல் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது உதாரணமாக 15 மற்றும் அதற்கு மேல் என்றால் -20 மி.மீ ,15க்கு கீழ் என்றால் 10 மி.மீ )

 

18-05-2017 காலை 8:30 மணி முதல் 19-05-2017 காலை 8:30 மணிவரை 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பதிவான பகுதிகள்

18-05-2017 நேற்று மாலை முதல் வேலூர் ,திருச்சி ,நாமக்கல் ,கிருஷ்ணகிரி ,கன்னியாகுமரி ,சேலம் ,திருப்பூர் ,நீலகிரி ,திருவண்ணாமலை ,கரூர் ,தருமபுரி ,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல பெய்துள்ளது.

18-05-2017 காலை 8:30 மணி முதல் 19-05-2017 காலை 8:30 மணிவரை 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பதிவான பகுதிகள்

தக்கலை (கன்னியாகுமரி ) --------------------------> 60 மி.மீ
தளவாடி(ஈரோடு ) --------------------------> 60 மி.மீ
துவாக்குடி (திருச்சி ) --------------------------> 60 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி ) --------------------------> 60 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி ) -------------------------->50 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி ) -------------------------->50 மி.மீ
பெனுகொண்டபுரம்(கிருஷ்ணகிரி )  -------------------------->50 மி.மீ
ஈரோடு (ஈரோடு ) --------------------------> 40 மி.மீ
குடியாத்தம் (வேலூர் ) --------------------------> 40 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் ) --------------------------> 40 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி ) --------------------------> 40 மி.மீ
புள்ளமபாடி (திருச்சி ) --------------------------> 40 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் ) --------------------------> 40 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் ) --------------------------> 40 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் ) --------------------------> 40 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி ) --------------------------> 40 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி ) --------------------------> 30 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி ) --------------------------> 30 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி) --------------------------> 30 மி.மீ
திருவையாறு (தஞ்சாவூர் ) --------------------------> 30 மி.மீ
திருப்பத்தூர் ( வேலூர் ) --------------------------> 30 மி.மீ
களவா (வேலூர் ) --------------------------> 30 மி.மீ
வாத்ராப் (விருதுநகர் ) --------------------------> 30 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் ) --------------------------> 30 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை ) --------------------------> 30 மி.மீ
கள்ளக்குறிச்சி (விழுப்புரம் ) --------------------------> 30 மி.மீ
லால்குடி (திருச்சி ) --------------------------> 30 மி.மீ
மெளலத்தூர் (வேலூர் ) --------------------------> 30 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி ) --------------------------> 30 மி.மீ
பொள்ளாச்சி (கோயம்பத்தூர் ) --------------------------> 30 மி.மீ
பாலக்கோடு (தருமபுரி ) --------------------------> 30 மி.மீ
பெருந்துறை (ஈரோடு ) --------------------------> 30 மி.மீ
திருச்சிராப்பள்ளி (திருச்சி ) --------------------------> 30 மி.மீ
பவானி (ஈரோடு ) --------------------------> 30 மி.மீ
திருப்பத்தூர் (வேலூர் ) --------------------------> 30 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் )  --------------------------> 30 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு ) -------------------------->20 மி.மீ
இராணியில் (கன்னியாகுமரி ) -------------------------->20 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி ) -------------------------->20 மி.மீ
கோயம்பத்தூர் (கோயம்பத்தூர் ) -------------------------->20 மி.மீ
ஓக்கேனக்கல் (தருமபுரி ) -------------------------->20 மி.மீ
மேட்டூர் (சேலம் ) -------------------------->20 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை ) -------------------------->20 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி )-------------------------->20 மி.மீ
கடவூர் (கரூர் ) -------------------------->20 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) -------------------------->20 மி.மீ
மணப்பாறை (திருச்சி ) -------------------------->20 மி.மீ
முசிறி (திருச்சி ) -------------------------->20 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) -------------------------->20 மி.மீ
மூலனூர் (திருப்பூர் ) -------------------------->20 மி.மீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி ) -------------------------->20 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை ) -------------------------->20 மி.மீ
கரூர் (கரூர் ) -------------------------->20 மி.மீ
பென்னாகரம் (தருமபுரி ) -------------------------->20 மி.மீ
தருமபுரி (தருமபுரி ) -------------------------->20 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் ) -------------------------->20 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் )  -------------------------->20 மி.மீ
மருங்காபுரி (திருச்சி ) --------------------------> 10 மி.மீ
ஜி பஜார் (நீலகிரி) --------------------------> 10 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் ) --------------------------> 10 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை ) --------------------------> 10 மி.மீ
கெட்டி (நீலகிரி ) --------------------------> 10 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை ) --------------------------> 10 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் ) --------------------------> 10 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் ) --------------------------> 10 மி.மீ
வேலூர் (வேலூர் ) --------------------------> 10 மி.மீ
பீளமேடு (கோயம்பத்தூர் ) --------------------------> 10 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை ) --------------------------> 10 மி.மீ
பாப்பீரெட்டிபட்டி (தருமபுரி ) --------------------------> 10 மி.மீ
பையூர் (கிருஷ்ணகிரி ) --------------------------> 10 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை ) --------------------------> 10 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் ) --------------------------> 10 மி.மீ
வாணியம்பாடி (வேலூர் ) --------------------------> 10 மி.மீ
பழனி (திண்டுக்கல் ) --------------------------> 10 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை ) --------------------------> 10 மி.மீ
கோவிலன்குளம் (விருதுநகர் ) --------------------------> 10 மி.மீ
குன்னூர் (நீலகிரி) --------------------------> 10 மி.மீ
அவிநாசி (திருப்பூர் ) --------------------------> 10 மி.மீ
உத்தமபாளையம் (தேனி ) --------------------------> 10 மி.மீ
கொடுமுடி (ஈரோடு ) --------------------------> 10 மி.மீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர் ) --------------------------> 10 மி.மீ
மாயனுர் (கரூர் ) --------------------------> 10 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) --------------------------> 10 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் ) --------------------------> 10 மி.மீ
கோயம்பத்தூர் தெற்கு (கோயம்பத்தூர் ) --------------------------> 10 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி ) --------------------------> 10 மி.மீ
ஹரூர் (தருமபுரி ) --------------------------> 10 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் ) --------------------------> 10 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் ) --------------------------> 10 மி.மீ
பெரியகுளம் (தேனி ) --------------------------> 10 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் ) --------------------------> 10 மி.மீ 

19-05-2017 இன்றும்  மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புண்டு.

19-05-2017 இன்று 12:30 மணிக்கு பதிவான அளவின்படி தமிழக தலைநகரான சென்னையில் அதிகபட்சமாக 39.6° செல்ஸியஸ் பதிவாகியுள்ளது.

19-05-2017 இன்று நன்பகல் 12:30 மணிக்கு பதிவான அளவுகளின் படி புதுச்சேரியில் அதிகபட்சமாக 105° பாரன்ஹீட்டும் சென்னை விமான நிலையத்தில் 106.5° சென்னை நுங்கம்பாக்கத்தில் 103.28° காரைக்காலில் அதிகபட்சமாக 99.5° பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2017 ஜனவரியில் அதிக மழை பெய்த இடங்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் என்றுமே இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மழை வெளுத்து வாங்கியிருக்கிறது.புதுச்சேரியில் திட்ட திட்ட இருவது ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழை ஜனவரியில் பதிவாகியுள்ளது இதைப்போன்று தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் மழையே இருக்காது என்று சொல்லும் இடங்களில் கூட இந்த ஆண்டு மழை பொழிந்திருக்கிறது அதைப்பற்றி விரிவாக வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஜனவரி 2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பொழிந்த மாவட்டங்கள் (01-01-2017 -  31-01-2017)

காரைக்கால்       -----------------------------> 180.1 மி.மீ
நாகப்பட்டினம்   -----------------------------> 139.4 மி.மீ
திருவாரூர்           -----------------------------> 123.1 மி.மீ
கடலூர்                -----------------------------> 114.0 மி.மீ 
அரியலூர்           -----------------------------> 108.3 மி.மீ
புதுச்சேரி            -----------------------------> 105.9 மி.மீ
தஞ்சாவூர்           ----------------------------->   99.5 மி.மீ
சிவகங்கை         ----------------------------->   73.5 மி.மீ
திருநெல்வேலி   ----------------------------->   65.9 மி.மீ
ராமநாதபுரம்      ----------------------------->   59.9 மி.மீ
நீலகிரி                ----------------------------->   59.6 மி.மீ
புதுக்கோட்டை  ----------------------------->   53.9 மி.மீ
திருவண்ணாமலை ----------------------------->  47 மி.மீ 
விழுப்புரம்          ----------------------------->   40.2  மி.மீ
திண்டுக்கல்        ----------------------------->    38.2 மி.மீ
மதுரை                ----------------------------->    32.7 மி.மீ
திருச்சி                ----------------------------->    24.7 மி.மீ
பெரம்பலூர்       ----------------------------->    24.3 மி.மீ
விருதுநகர்         ----------------------------->     23.2 மி.மீ 
வேலூர்              ----------------------------->    23.1 மி.மீ
தேனி                 ----------------------------->    22.2 மி.மீ      
 தூத்துக்குடி      ----------------------------->    18.5 மி.மீ
கரூர்                  ----------------------------->     17.2 மி.மீ
காஞ்சிபுரம்       ----------------------------->     16.4 மி.மீ  
சேலம்               ----------------------------->     12.2 மி.மீ
திண்டுக்கல்      ----------------------------->    10.8 மி.மீ
கோயம்புத்துர்  ----------------------------->     10.4 மி.மீ
தருமபுரி            ----------------------------->       8.4 மி.மீ
திருப்பூர்            ----------------------------->       7.6 மி.மீ
சென்னை         ----------------------------->        4.5 மி.மீ 
நாமக்கல்          ----------------------------->        6.3 மி.மீ
திருவள்ளூர்      ----------------------------->        6.0 மி.மீ 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு ஆபத்து கிடையாது

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்தது.வர்தா புயல் ஏற்படுத்தி சென்ற பாதிப்பினால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.அது இலங்கையை நோக்கி தான் செல்லும் அது இலங்கையை நெருங்கும் பொழுது வரும் 19,20 மற்றும் 21ஆம்  தேதிகளில் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்த வரை 20/12/2016 மற்றும் 21/12/2016 ஆகிய நாட்களில் மிக குறைந்த அளவு மழையே பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் விண்டிடீவி இணையதளத்தின் உத்தேச காட்சிகள் அமைந்துள்ளன.ஆகையால் புதிய காற்றழுத்த பகுதியை பொறுத்த மட்டில் இப்பொழுது இருக்கும் நிலையே தொடருமானால் தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கான வாய்ப்பு கிடையாது.

மேலும் வருகின்ற டிசம்பர்  23 -24ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சுமத்ராவுக்கு அருகே மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


காரைக்காலில் கண மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிதாக நிலைக் கொண்டு இருக்கும் 'நாடா ' புயலால் காரைக்காலில் கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.புதுச்சேரிக்கு 730 கி.மீ தென்கிழக்கே நிலைக்கொண்டு உள்ள இந்த புயல் படிப்படியாக நகர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 2 ஆம் தேதி புதுச்சேரிக்கும் வேதாரிணியத்துக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனை அடுத்து புதுச்சேரி ,நாகை ,காரைக்கால் மற்றும் கடலூர் துறைமுகங்களில் 2ஆம் என் புயல் எச்சரிக்கை கோடி ஏற்றப்பட்டு உள்ளது.


Related Posts Plugin for WordPress, Blogger...