தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
ரியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் கோடி இல்லையென்றால் ....

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்ஸ் 2016இல் இந்தியாவின் சார்பில் பதக்கம் பெற்ற இரு வீராங்கனைகளுக்கும் பரிசுகளும்  பாராட்டுகளும்  வந்து குவிந்த வண்ணம் உள்ளன.இன்று  இவர்கள் பதக்கம் பெற்ற பிறகு அளிக்கும் பரிசு பொருட்களின் மதிப்பில் ஒரு சிறிதளவை சில திறமை மிக்க வீரர்களின் அத்தியாவசிய தேவைகளை சரி செய்ய  ஒதுக்கி இருந்தால் இன்னும் பல பதக்கங்கள் நம் நாட்டிற்கு கிடைத்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.வேறு எந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இல்லாத வகையில் இந்த முறை நமது இந்திய வீரர்கள் பல போட்டிகளில் நான்றாவது இடத்தை பிடித்து மிக குறுகிய நொடிகள் அல்லது புள்ளிகள் வித்தியாசத்தில் தான் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து இருந்தால் அவர்களும் கண்டிப்பாக பதக்கப்பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள். ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட தீபிகா இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும்  வரையில் அவருடைய பிஸியோதெரபியை அவருடன் அனுப்பி வைக்க வில்லையாம்.

ரியோ ஒலிம்பிக் முடிந்த பிறகு நாடு திரும்பிய வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருவராக தாங்கள் பட்ட கஷ்டத்தை கூறி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது ஓபி ஜெய்ஷா என்ற ஓட்டப்பந்தய வீராங்கனை களத்தில் செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் என  கூறியுள்ளார்.இவர் ஓடியது  42 கி.மீ மாரத்தான் போட்டியில்,இலக்கை சுமார் 2 மணி நேரம் 47 நிமிடங்களில் கடந்திருக்கிறார் பின்னர் முடிவுக் கோட்டில் மயங்கி விழுந்த அவர்  மூன்று மணி நேரம் கழித்து ஏழு பாட்டில்கள் குளுகோஸ் இறக்கிய பிறகு தான் எழுந்திருக்கிறார்.இதற்கு முக்கிய காரணம் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் பொழுது நடுவே நீர் மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் போன்றவைகளை வழங்க ஒவ்வொரு 2.5 கி.மீ க்கு ஒருமுறை நிலையங்கள் அமைத்து இருப்பார்களாம்.ஆனால் எந்த நிலையங்களிலும் இந்தியாவின் சார்பில் யாரும் நிற்கவில்லையாம்.இப்படி விளையாடிய பல வீரர்களுக்கு அவர்கள் போட்டியில் வெற்றிபெற எந்த வித உதவியும் நம் நாட்டின் சார்பாக செய்யப்பட வில்லையாம்.

பதக்கம் பெற்றவர்களுக்கு கோடியில் பரிசுகள் வழங்கும் இவர்கள் போராடி வெற்றியை கடுகளவில் அடையமுடியாமல் போனவர்களை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பல வீரர்கள் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே பல சிக்கல்களை சந்தித்து உள்ளனர்.ஜாதி ,மதம் ,பணம் என்ற பல விஷயங்களில் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...