தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.12.2020 Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | இன்றைய வானிலை

30.12.2020 நேரம் இரவு 8:30 மணி நான் இதற்கு முந்தைய நாட்களில் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது.இது தொடர்பாக இன்றைய அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களிலும் சில மணி நேரங்களுக்கு முன்பு குறிப்பிட்டு இருந்தேன் - https://youtu.be/BJCWjnufhew

#வேதாரண்யம் , #மதுராந்தகம் உட்பட பல்வேறு இடங்களிலும் அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #புதுச்சேரி - #சென்னை இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடல் பகுதிகளிலும் மழை மேகங்கள் திரண்டு காணப்படுகின்றன நாளை உள் மற்றும் தென் மாவட்டங்களிலும் மழை பதிவாகும் இது தொடர்பான விரிவான விளக்கங்களை முந்தைய குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறேன் அதனை கேட்டுக்கொள்ளுங்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் பகுதியில் கிட்டத்தட்ட 28 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேர தமிழக மழை நிலவரம்
=========================

தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 25மிமீ


நன்னிலம் (திருவாரூர்) 19.4மிமீ


வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 18.2மிமீ


திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 16.6மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 16.5மிமீ


லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 14மிமீ


குடவாசல் (திருவாரூர்) 13மிமீ


கொத்தவச்சேரி (கடலூர்) 12மிமீ


மனல்மேடு (மயிலாடுதுறை) 11மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 10.2மிமீ


ஜெயங்கொண்டம் (அரியலூர்), திருவையாறு (தஞ்சாவூர்) 9மிமீ


லால்பேட்டை (கடலூர்) 8.4மிமீ


அகரம் சிகூர் (பெரம்பலூர்) 8மிமீ


ராமநாதபுரம் (ராமநாதபுரம்) 7.5மிமீ


காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 7.1மிமீ


மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 6மிமீ


திருவாரூர் (திருவாரூர்) 5.8மிமீ


வலங்கைமான் (திருவாரூர்) 5.2மிமீ


மன்னார்குடி (திருவாரூர்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), நீடாமங்கலம் (திருவாரூர்) 5மிமீ


மஞ்சலாறு (தஞ்சாவூர்) 4.4மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) 4மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 3.8மிமீ


தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 3.2மிமீ


அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),அரூர் (தர்மபுரி), பாபநாசம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 3மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 2.9மிமீ


பரமக்குடி (இராமநாதபுரம்) 2.8மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்), கடலூர் IMD (கடலூர்) 2.6மிமீ


ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 2.1மிமீ


சேத்தியாத்தோப்பு (கடலூர்),செந்துறை (அரியலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), குன்னூர் (நீலகிரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சிதம்பரம் (கடலூர்) 2மிமீ


விருத்தாசலம் (கடலூர்) 1.4மிமீ


கீழ் பழூர் (அரியலூர்) 1.3மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்) 1.2மிமீ


கீழ் அரசடி (தூத்துக்குடி), பேராவூரணி (தஞ்சாவூர்), மேலூர் (மதுரை),பொழந்துறை (கடலூர்), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), தர்மபுரி PTO (தர்மபுரி), தூத்துக்குடி New PORT (தூத்துக்குடி) 1மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை) 0.6மிமீ

Rainfall data collected and arranged by Krishnakumar


#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com


17.12.2020 இன்றைய வானிலை | புதுச்சேரியில் கனமழை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

17.12.2020 நேரம் காலை 9:30 மணி நான் நேற்றைய குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #புதுச்சேரி நகர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 149 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #கடலூர் , #கள்ளக்குறிச்சி  , #விழுப்புரம் மாவட்ட பகுதிகளிலும் பல சிறப்பான தரமான சம்பவங்கள் அரங்கேறி இருப்பதை அறிய முடிகிறது இன்றும் அடுத்த சில மணி நேரங்களில் #டெல்டா மாவட்டங்களுக்கான மழை வாய்ப்புகள் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளது இவைத்தவிர்த்து தென் உள் ,மேற்கு உள் ,வடகடலோர  மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக பதிவிடப்படும்.


தற்போதைய நிகழ் நேர தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகளை சில நிமிடங்களுக்கு முன்பு குரல் பதிவு செய்திருக்கிறேன் - https://youtu.be/SW1LWc7HUYk அதில் கேட்டுக்கொள்ளுங்கள் எழுத்துபூர்வமாக நிகழ் நேர தகவல்களை விரிவாக பதிவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி நகர பகுதியில் 149 மி.மீ அளவு மழையும் #காரைக்கால்  பகுதியில் 27 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.


கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

=======================

மனம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 174 மி.மீ

அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் - 164 மி.மீ

திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 164 மி.மீ

முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 160 மி.மீ

கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 156 மி.மீ

திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 133 மி.மீ

மயிலம் (விழுப்புரம் மாவட்டம்) - 130 மி.மீ

வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 129 மி.மீ

குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 129 மி.மீ

மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 128 மி.மீ

மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 127 மி.மீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 122 மி.மீ

தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 120 மி.மீ

வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 115 மி.மீ

சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 114 மி.மீ

கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 110 மி.மீ

விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 110 மி.மீ

ரிசிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 107 மி.மீ

கீழ்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 107 மி.மீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 106 மி.மீ

கடலூர் IMD (கடலூர் மாவட்டம்) - 103 மி.மீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 100 மி.மீ

கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 99 மி.மீ

அரியலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 95 மி.மீ

காளையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 95 மி.மீ

எரையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  95 மி.மீ

சூரபட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 92 மி.மீ

நீமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 90 மி.மீ

வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  89 மி.மீ 

கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 88 மி.மீ

விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) -  84 மி.மீ

முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) -  82 மி.மீ

மே.மாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 80 மி.மீ

கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  79 மி.மீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 78 மி.மீ 

சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) -  78 மி.மீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  76 மி.மீ

வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 75 மி.மீ

கட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 74 மி.மீ

மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 72 மி.மீ

திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) -  72 மி.மீ

புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 71 மி.மீ


#Emmanuel_Paul_Antony

#Puducherry_Weather

#tamilnaduweather.com


70 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே பதிவிட்டுருக்கிறேன் இன்னும் சற்று நேரத்தில் அனைத்து பகுதிகளின் நிலவரம் அடங்கிய முழுமையான மழை அளவுகள் பட்டியல் நமது www.tamilnaduweather.com இணையத்தளத்தில் விரிவாக பதிவேற்றம் செய்யப்படும்.

16.12.2020 அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகள் | மழை பதிவாகி வரும் பகுதிகள்

16.12.2020 நேரம் இரவு 10:00 மணி நான் கடந்த குரல் பதிவில் மாலை நேரத்தில் குறிப்பிட்டு இருந்தது போல #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களை மழை மேகங்கள் பதம் பார்த்து வருகின்றன தற்சமயம் #பண்ருட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான தரமான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #கடலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் இரவு 8:30 மணி வரையில் 47 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது மேலும் மேலும் #புதுச்சேரி மாவட்டம் #திருபுவனை  மற்றும் கடலூர் மாவட்டம் #மாளிகைமேடு , #மணப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இவைத்தவிர்த்து தற்பொழுது #விருத்தாசலம் , #பலையபட்டினம் , #அரியலூர் , #பழுவூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #செங்கல்பட்டு - #திண்டிவனம் இடைப்பட்டு இருக்கும் அநேக இடங்களிலும் #விழுப்புரம் - #திண்டிவனம் இடைப்பட்ட பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகும் இது தொடர்பான தகவல்களை சில மணி நேரங்களுக்கு முன்பு குரல் -   https://youtu.be/QAsS0ZRe_ek விரிவாக குரல் பதிவு செய்திருக்கிறேன்.மேலும் #புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் மழை பதிவாக இருக்கிறது.

மேலும் தற்பொழுது #அடையாறு , #சோழிங்கநல்லூர் , #பாலவாக்கம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #சென்னை  மாநகரின் தெற்கு புறநகர் மற்றும் தெற்கு பகுதிகளிலும் மழை பதிவாகும்.அதே #டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் மழை பதிவாகும்.

அதேபோல #விழுப்புரம் , #பெரம்பலூர் மற்றும் #ராமநாதபுரம் மாவட்ட வடக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாகும்.

எழுத்துப்பூர்வமாக அனைத்து தகவல்களையும் பதிவிடுவது சிரமமாக உள்ளது ஆகையால் குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே..

இரவு 8:30 மணி வரையில் பதிவாகி இருக்கும் மழை அளவுகளின் படி
==========
கடலூர் - 47 மி.மீ
புதுச்சேரி - 33 மி.மீ

மீண்டும் நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேரத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

05-12-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் | 2019 december 5 upcoming week weather overlook

05-12-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

05-12-2019 நேரம் மாலை 4:00 மணி தற்சமயம் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல #கூடங்குளம் உட்பட நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளிலும்  #கன்னியாகுமரி உட்பட #கன்னியாகுமரி மாவட்டடத்திலும் ஆங்காங்கே மழை பதிவாகி கொண்டு வருவதை அறிய முடிகிறது.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல மாலத்தீவுகள் கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த அகடு நிலைகொண்டுள்ளது மேலும் அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் #கோடியக்கரை உட்பட  #நாகை மாவட்ட தெற்கு பகுதிகளிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் #தென்காசி , விருதுநகர் ,சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட தென் உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.

06-12-2019 ஆகிய நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட ராமநாதபுரம் ,தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம்.வாய்ப்புகள் கூடிவந்தால் திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

07-12-2019 ஆகிய நாளை மறுநாள் வட கடலோர மாவட்டங்களின் சில பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அது மட்டுமல்லாது தென் உள் ,உள் மற்றும் வட உள் மாவட்டங்களிலும் அன்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.

08-12-2019 ஆம் தேதியை பொறுத்தவரையில் 07-12-2019 ஆம் தேதி நிலவும் சுழல்களே தொடரும்.

09-12-2019 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழையின் அளவு மேலும் குறைய தொடங்கலாம்.பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 09-12-2019 ஆம் தேதிக்கு பிறகு  உதகை உட்பட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் நில உறைப்பனி (Ground Frost) ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.அதேபோல கொடைக்கானல் ,மூணாறு ,வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் அதற்கு இடையே உள்ள பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக பணிபொழிவு உணரப்படலாம் கிட்டத்திட்ட 10°C மற்றும் அதற்கு குறைவான அளவு வெப்பமே அதிகாலை நேரங்களில் அப்பகுதிகளில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நிலவ தொடங்கலாம்.#தர்மபுரி ,#ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் ,#சேலம் ,#கிருஷ்ணகிரி ,#திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு கடுமையான பணிபொழிவு உணரப்படலாம்.09-12-2019 ஆம் அன்று மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலேயே பணிப்பொழிவு மென் மேலும் அதிகரிப்பதை அம்மாவட்ட மக்கள் உணரலாம்.மற்றபடி தமிழகத்தின் அநேக இடங்களிலும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பணிப்பொழிவு அதிகரிக்கலாம்.

11-12-2019 அல்லது 12-12-2019 ஆம் தேதி முதல் தென் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் மாவட்டங்களில் மீண்டும் அங்கும் இங்குமாக மழை பதிவாக தொடங்கலாம்.அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களிலும் தென் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக மழை பதிவாகும்.

11-07-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்?

11-07-2019 பிற்பகல் 2:35 மணி 13-07-2019 அல்லது 14-07-2019 ஆம் தேதிகளில் வாக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலன மழையின் அளவு மீண்டும் அதிகரிக்கலாம்.11-07-2019 ஆகிய இன்றும் 12-07-2019 ஆகிய நாளையும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்றும் நாளையும் வெப்பசலன மழையின் அளவு சற்று குறைந்து இருக்க வாய்ப்புகள் உள்ளது.மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அன்றைன்றைக்கு நிகழ் நேரத்தில் பதிவிடுகிறேன்.14-07-2019 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் கேரளாவிலும் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அவ்வப்பொழுது சற்று வலுவான மழை பதிவாகலாம்.நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல தமிழகம் , கேரளம் , கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் இமயமலை அடிவார பகுதிகளை தவிர நாட்டின் பிற மாநிலங்களின் அநேக இடங்களிலும் 14-07-2019 ஆம் தேதிக்கு பிறகு அடுத்து வரக்கூடிய நாட்களில் மழையின் அளவு குறைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.பருவமழை முறிவு (#Break_Monsoon) தொடர்பாக நான் கடந்த பதிவுகளிலேயே அதாவது கடந்த வாரத்திற்கான மழை வாய்ப்புகள் தொடர்பாக 03-07-2019 ஆம் தேதி அன்று எழுதிய பதிவிலேயே விளக்கியுள்ளேன்.உங்களுக்கு இந்த பருவமழை முறிவு (#Break_Monsoon) தொடர்பாக எதாவது சந்தேகம் இருப்பின் அந்த பதிவினை ஒரு முறை பாருங்கள்.13-07-2019 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு புதுச்சேரி , சென்னை ,திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களின் பல இடங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

அடுத்து வரக்கூடிய வாரங்களில் குறிப்பாக 20-07-2019 அல்லது 21-07-2019 ஆம் தேதிகளின் வாக்கில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக இந்த மாத இறுதி வாரத்தில் 24-07-2019 அல்லது 25-07-2019 ஆம் தேதிகளின் வாக்கில் தென்மேற்கு பருவமழை கேரளாவிலும் அதனை ஒட்டியிருக்கும் தெற்கு கர்நாடகாவிலும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.

நான் மேலே பதிவிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட கணிப்புகள் தான்.இதை மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

https://www.youtube.com/watch?v=DEYf72r9FjQ


26-04-2019 வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்போதைய நிலை என்ன ? தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடந்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்கள்.

26-04-2019 நேரம் காலை 10:55 மணி நேற்று இரவில் நேரலையில் நான் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மட்டும் மழை மேகங்கள் பதிவாகி வருவதாக தெரிவித்து இருந்தேன் இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #கோவை மாவட்டம் #வால்பாறை பகுதியை அடுத்த #சோலையாறு அணை பகுதியில் 16 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல #குமரி மாவட்டம் #பெருஞ்சாணி அணை பகுதியிலும் கிட்ட தட்ட 8 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் ஓரிரு இடங்களை தவிர்த்து கடந்த 24 மணி நேரத்தில் அநேக பிற பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி உள்ளது.இன்றும் இதே சுழல்களே தொடரும்.

26-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சோலையாறு  - #Solaiyar dam (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#பெருஞ்சாணி - #PERUNCHANI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சுரளக்கோடு  - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ 
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ

அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை (Well Marked Low Pressure Area) பொறுத்தவரையில் தற்பொழுது அதாவது இன்று காலை 9:00 மணி வாக்கில் பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.தற்பொழுது பல்வேறு மாதிரிகளும் அது வலு பெற்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே வளைந்து (Re-Curve) செல்ல தொடங்கும் என்பதைப் போன்ற தகவல்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் நேரலையில் தெரிவித்து இருந்தது போல அதனுடைய திசையை தீர்மானிப்பதில் அந்த உயர் அழுத்தத்தின்  (High Pressure) சுழற்சி முக்கிய பங்காற்றுகிறது.

அது எந்த அளவுக்கு அது தமிழகத்துக்கு  நெருக்கமாக வருகிறதோ அந்த அளவுக்கான மழை தமிழகத்தில் பதிவாகலாம்.இன்னமும் எதுவும் முடிந்து விட வில்லை.எதையும் உறுதி செய்வதற்கு முன் நாளை வரை காத்திருக்கவும்.

கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகளை குறிப்பிட தான் இந்த பதிவை பதிவிட்டேன்.அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழகத்திற்கான மழை சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


25-04-2019 வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி - அதன் நகர்வுகள் எப்படி இருக்கலாம் ?

25-04-2019 நேரம் பிற்பகல் 1:40 மணி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டு இறந்தது போல தற்பொழுது தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) நிலவி வருகிறது.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல மேடன்-ஜூலியன் அலைவு (MJO) ஆனது தற்பொழுது சாதகமான கட்டத்தில் இருப்பதால் அடுத்து வரக்கூடிய நாட்களில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அதன் அடுத்தடுத்த நிலையை எட்ட மிக சாதகமான சூழல் நிலவி வருகிறது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களில் மேலும் வட மேற்கு திசையில் நகர முற்பட்டு 26-04-2019 ஆகிய நாளை அல்லது 27-04-2019 ஆகிய நாளை மறுநாள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression)உருவெடுக்கலாம் மேலும் தற்போதைய சூழல்களே தொடரும் பட்சத்தில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு புயலாக உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.அவ்வாறு அது ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு #வங்கதேச நாட்டின் தேர்வு சொல்லான #FANI என்ற பெயர் சூட்டப்படும்.

நான் முன்பு நேற்று இரவு நமது பக்கத்தில் நேரலையில் தெரிவித்து இருந்தது போல கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் அதிகமான அழுத்தத்தின் காரணமாக அது மேற்கு நோக்கி தள்ளப்படும்.இதன் காரணமாக 29-04-2019 அல்லது 30-04-2019 ஆம் தேதிகளின் வாக்கில் அது தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள கடல் பகுதிகளை நெருங்க வாய்ப்புகள் அதிக வாய்ப்புகள்  உள்ளதுஅதே தற்போதைய சூழல்களில் அது பெரும்பாலும் தமிழகம் அல்லது ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அது வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோரத்தை ஒட்டியே பயணிக்கலாம் என்பதைப் போன்ற தகவலை மாதிரிகளும்  வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் முன்பே குறிப்பிட்டு இருந்தது போல அது தமிழகம் மற்றும் ஆந்திராவில் எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பதை இப்பொழுதே உறுதிப்படுத்த முடியாது.தமிழக பகுதிகளின் மழைக்கான வாய்ப்புகளும் அந்த புயல் தமிழகம் அருகே உள்ள கடல் பகுதியை நெருங்குகையில் தான் தெரியவரும் அதற்கு குறைந்தது 28-04-2019 ஆம் தேதி வரையிலாவது காத்திருக்க வேண்டும்.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.


அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



21-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்

21-04-2019 நேரம் காலை 11:35 மணி நேற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் பரவலான வெப்சலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #நீலகிரி  , #தேனி ,#கன்னியாகுமரி உட்பட மேற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களிலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் மேற்கு பகுதிகளிலும் #சேலம்  , #நாமக்கல் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது குறிப்பாக நீலகிரி மாவட்டம் #ஊட்டி யில் 98 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #தேனி மாவட்டம் #சோத்துப்பாறை பகுதியிலும் 92 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்று கிருஷ்னகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #துறையூர்  , #மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

21-04-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்

#உதகமண்டலம் - #OOTY (நீலகிரி மாவட்டம் ) - 98 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 92 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 75 மி.மீ
#ஓசூர் - #HOSUR (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 69 மி.மீ
#ஓமலூர் - #OMALUR (சேலம் மாவட்டம் ) - 66 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 66 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 65 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 63 மி.மீ
#சிவலோகம் -#சித்தாறு II   (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 60 மி.மீ
#பரூர் - #BARUR(கிருஷ்னகிரி மாவட்டம் ) - 60 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 57 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ
#தொட்டபெட்டா -#Doddapetta , உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி  (தர்மபுரி மாவட்டம் ) - 40  மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 38 மி.மீ
#திருசெங்கோடு  (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம் ) - 38 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் ) - 36 மி.மீ
புஷ்பாமருத்துவமனை அருகில் , குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 32 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 31 மி.மீ
கெத்தி -#GEDDAI  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
தானிஷ்பேட்டை  - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆணைமடவு அணை  - #ANAIMADAVU DAM (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
மயிலடி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ
#அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 24 மி.மீ
#பல்லடம்  (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#நாகர்க்கோயில்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
மணப்பாறை TOWN (திருச்சி மாவட்டம் ) - 23 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
பூதப்பாண்டி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
உத்தம்பாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#உடுமலைப்பேட்டை  (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
அரண்மனைப்புத்தூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#எட்டையபுரம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம்  (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
ராசிபுரம்  (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ 
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) -9 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ

இவை தவிர்த்து பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது 9 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை நான் மேலே குறிப்பிடவில்லை.இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் உங்களது ஊரின் பெயரை COMMENT செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

நிகழ் நேரத்தில் பதிவாகி வரும் மழை தொடர்பான தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

20-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவுகளின் தகவல்கள்

20-04-2019 நேரம் நண்பகல் 12:15 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தமிழகத்தில் நேற்று மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் ,தென் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழை தீவிரமடைந்து உள்ளது நேற்று நாமக்கல் பகுதியில் நல்ல மழை பதிவாகியுள்ளது.20-04-2019 ஆகிய இன்றும் தமிழகத்தின் மேற்கு ,மேற்கு உள் ,வட உள்  , உள் ,தென் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது .இது தொடர்பாகவும் நிகழ் நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடனும் இன்று இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.

மேலும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது.இதன் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழக மழைக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அடுத்தடுத்த பதிவுகளில் விவாதிப்போம்.

20-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கீழ்-கோதையார்  - #LOWER-KOTHAIYAR ARG (கன்னியாகுமரி மாவட்டம் ) - 93 மி.மீ
நாமக்கல் AWS - #NAMAKKAL (நாமக்கல் மாவட்டம் ) - 88 மி.மீ
#கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 78 மி.மீ
#கொடைக்கானல்  - #KODAIKANAL (திண்டுக்கல் மாவட்டம் ) - 66 மி.மீ
#மஞ்சளாறு அணை (திண்டுக்கல் மாவட்டம் ) - 58 மி.மீ
#வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம் ) - 56 மி.மீ
#பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#குந்தாபாலம் ARG (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#மேல்பவானி (#UPPER-BHAVANI)  - 36 மி.மீ 
#மேலூர் ARG (மதுரை மாவட்டம் ) - 35 மி.மீ
#எருமப்பட்டி - #ERUMAPPATI (நாமக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ
#சுரளக்கோடு - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 29 மி.மீ
#கின்னக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 28 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 28 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
#பிக்கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#கெத்தி -#GEDDAI (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
RDO அலுவலகம் - நாமக்கல்  (நாமக்கல் மாவட்டம் ) - 24 மி.மீ
#காமாட்சிபுரம் - திண்டுக்கல் மேற்கு (திண்டுக்கல் மாவட்டம் ) - 23 மி.மீ
#சேலம்  - #SALEM (சேலம் மாவட்டம் ) - 23 மி.மீ
#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#ஏற்காடு - அண்ணாப்பூங்கா அருகில் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 17 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 17 மி.மீ
#பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#புத்தன்அணை - #PUTHANDAM (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 13 மி.மீ
#திருவாரூர் - #TIRUVARUR (திருவாரூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
மேலூர்  - பர்மாகாலனி அருகில் (மதுரை மாவட்டம் ) - 12 மி.மீ
கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம் ) - 12 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 10 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#மோகனூர் (நாமக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 5 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 4 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 4 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 3 மி.மீ

அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


19-04-2019 கடந்த 24 மணி நேரத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை தொடர்பான தகவல்கள்

19-04-2019 நேரம் பிற்பகல் 00:30 மணி இணைய சேவையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக நேற்று பிற்பகல் என்னால் நமது பக்கத்தில் பதிவிட முடியவில்லை ஆனபொழுதும் நேற்று திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் - புள்ளம்பாடி அருகிலும் #மண்ணச்சநல்லூர் அருகிலும் பிற்பகலுக்கு பிறகு மழை மேகங்கள் ஆங்காங்கே பதிவாகி வந்ததை ராடார் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது மேலும் நேற்று #சேலம் மாநகருக்கும் வடக்கு பகுதிகளிலும் மழை மேகங்கள் நேற்று ராடாரில் பதிவாகி வந்தன அதே போல #சேலம் மாநகரின் மேற்கு பகுதிகளிலும் குறிப்பாக #ஏற்காடு - #சேலம் இடையே உள்ள பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகிவந்தன அப்பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடனான மழை ஒரு சில இடங்களில் பதிவாகியிருக்கலாம் #ஏற்காடு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 18 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளதுஅதேபோல நேற்று #நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிந்தது தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் #உதகமண்டலத்தில் 42 மி.மீ அளவு மழை பதிவானது மேலும் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகள் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்தன.இவைதவிர்த்து நேற்று மதுரை மாவட்டம் #ஆண்டிபட்டி  , #வாடிப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் தொடர்பாக கேழே குறிப்பிட்டு உள்ளேன்.இன்றும் தமிழகம் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன் மேலும் இன்று நிகழ் நேரத்திலும் ஓரிரு முறை மழை வாய்ப்புகளை பதிவிட முயர்சிக்கிறேன்.


19-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

தஞ்சாவூர் மாவட்டம்
-------------------------------------
#பட்டுக்கோட்டை ( #PATTUKOTTAI ) - 11 மி.மீ
#அதிராம்பட்டினம்  - 11 மி.மீ
#வெட்டிக்குளம் (அதிராம்பட்டினம் ) - 7 மி.மீ

திருச்சி மாவட்டம்
-----------------------------
#புள்ளம்பாடி (#PULLAMBADI )  - 15 மி.மீ
#கல்லக்குடி (#KALLAKUDI )  - 12 மி.மீ

சேலம் மாவட்டம்
----------------------------
#ஏற்காடு  (#YERCAUD) - 18 மி.மீ
#சங்கரிதுர்க் (#SANKARIDURG) -10 மி.மீ

மதுரை மாவட்டம்
------------------------------
#ஆண்டிபட்டி (#ANDIPATTI)  - 31 மி.மீ
#வாடிப்பட்டி  (#VADIPATTI) - 30 மி.மீ
#சோழவந்தான் (#SOLAVANDAN)  - 18 மி.மீ

தேனி மாவட்டம்
---------------------------
#வீரப்பாண்டி  - 11 மி.மீ

திருநெல்வேலி மாவட்டம்
-------------------------------------

#சிவகிரி  (#SIVAGIRI) - 18 மி.மீ
#பாளையம்கோட்டை  - 6 மி.மீ
#சங்கரன்கோயில்  - 4 மி.மீ
#பாபநாசம்  - 2 மி.மீ

கன்னியாகுமரி மாவட்டம்
---------------------------------------
#சித்தாரல்  (#CHITHARAL) - 20 மி.மீ
#புதன்அணை (#PUTHANDAM) - 17 மி.மீ
#பெருஞ்சாணி  - 17 மி.மீ
#பேச்சிப்பாறை  - 12 மி.மீ

கிருஷ்னகிரி மாவட்டம்
-------------------------------------
 #சூளகிரி - 21 மி.மீ
#ஓசூர்  (#HOSUR) - 18 மி.மீ
தளி  - 10 மி.மீ
#ராயக்கோட்டை -  7 மி.மீ
கிருஷ்னகிரி  - 2 மி.மீ

நீலகிரி மாவட்டம்
-------------------------------

#உதகமண்டலம் (#OOTY ) - 43 மி.மீ
#தொட்டபெட்டா  - 32 மி.மீ
#கெட்டி (#KETTI ) - 21 மி.மீ
#அவலாஞ்சி (#AVALANCHE) - 20 மி.மீ
#கோத்தகிரி -  15 மி.மீ
#எமரால்டு (#EMERALD ) - 14 மி.மீ
#கிளன்மோர்கன் (#GLENMORGAN) - 13 மி.மீ
தேவாலா  - 7 மி.மீ
#குன்னூர் - 6 மி.மீ
கூடலூர் பஜார்  - 5 மி.மீ
#கெத்தி (#GEDDAI) - 4 மி.மீ
நடுவட்டம்  - 3 மி.மீ
கிண்ணக்கோரை  - 2 மி.மீ
#கோடநாடு  - 2 மி.மீ

அரியலூர் மாவட்டம் 
---------------------------------
#திருமானூர்  - 4 மி.மீ

திண்டுக்கல் மாவட்டம்
----------------------------------
#கொடைக்கானல்  - 10 மி.மீ

கோவை மாவட்டம்
-------------------------------
 #வால்பாறை  - 6 மி.மீ

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.





வட கடலோர மாவட்டங்களில் வெயில் குறைந்து இருந்தாலும் அதிகமான உடல் வியர்வைக்கு எது காரணம் என்று உங்களுக்கு தெரியுமா ?

25-04-2017 இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் "புதுச்சேரியில் மேகமூட்டத்தால் வெயில் குறைந்து இருந்தாலும் வெப்பம் குறையவில்லை " என்று அதில் எழுதியிருந்தார்கள்.ஆம் உண்மை தான் தற்பொழுது வெயிலின் அளவு குறைந்து இருந்தாலும் உடலில் முன்பை விட வியர்வை அதிகமாகியுள்ளது.உட்கார்ந்து இருக்கும் பொழுதே வியர்வை அதிகமான அளவில் வெளியேறுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெப்பம் அல்ல தற்பொழுது முன்பை விட வெப்பம் குறைந்தே உள்ளது இதெற்கு காரணம் காற்றில் அதிகரித்திருக்கும் ஒப்பு ஈரப்பதமாக (Relative Humidity ) இருக்கலாம்.

உதாரணமாக இப்பொழுது காற்றில் வெப்பநிலையானது 24° செல்ஸியசாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் ஒப்பு ஈரப்பதம் 0% சதவிகிதம் என்றால் நீங்கள் 21° செல்சியசை போல உணர்வீர்கள் அதே ஒப்பு ஈரப்பதம் 100% சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது என்றால் நீங்கள் 27° செல்சியஸ் போல உணர்வீர்கள்.தற்பொழுது அது தான் நடந்துள்ளது வழக்கமாக பகல் நேரத்தில் 40 முதல் 50 சதவிகிதம் வரை இருந்த ஒப்பு ஈரப்பதமானது கடந்த சில நாட்களாக 75% சதவிகிதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.அதைப்போல இரவு நேரங்களில் 90% சதவிகிதம் வரை பதிவாகிறது.நீங்கள் கீழே காணும் படத்தில் சென்னையில் நேற்றும் இன்றும் பதிவான ஒப்பு ஈரப்பதத்தின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.சிகப்பு நிறத்தில் இருப்பது நேற்றைய அளவு நீல நிறத்தில் இருப்பது இன்றைய அளவு.இயல்புடன் ஒப்பிடுகையில் நேற்றைய அளவே அதிகம் என்று எடுத்துக்கொண்டால் இன்று அதை விட அதிகமாக பகல் நேரத்தில் பதிவாகியிருப்பதை நீங்களே காணலாம்.அப்பொழுது உடலில் வியர்வை அதிகமாக வெளியேற தானே செய்யும்.

2017 பிப்ரவரி மாதம் இறுதிவரை குளிர் நீடிக்கும்

2017 பிப்ரவரி மாதம் இறுதிவரையில் குளிர் நீடிக்கும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்து வரக்கூடிய வாரத்தில் 13-02-2017 மற்றும் 14-02-2017 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதால் 12-02-2017 முதல் 16-02-2017 வரையில் குளிர் கொஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளது அதாவது இந்த வாரத்தில் நிலவும் வெப்பநிலையை காட்டிலும் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது அதனால் கொஞ்சம் குளிர் குறைந்து காணப்படும்.16-02-2017க்கு பிறகு மீண்டும் குளிர் அதிகரிக்க தொடங்கும் அது பிப்ரவரி மாத இறுதிவரை நீடிக்கலாம்.
 

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 07-02-2017 காலை 8 :30 மணிக்கு பதிவான அளவின் படி குறைந்த பட்ச வெப்பநிலையாக 19.9 மற்றும் 19.0 டிகிரி செல்சியஸ் முறையே பதிவாகியுள்ளது.

காரைக்கால் நாகப்பட்டினத்தில் மாவட்டங்களில் 08-02-2017 நாளை காலை 4 மணி முதல் 6 மணியிலான வெப்பநிலை எப்படி இருக்கும்.

தேதி  : 08-02-2017 (காலை 4 மணி முதல் 6 மணிவரை )

காரைக்கால்                         ------------------------>  23 முதல் 21 °C
திருநள்ளாறு                        ------------------------>  21 முதல் 19 °C
திருமலைராயன் பட்டினம் ------------------------>  23 முதல் 22 °C
நாகூர்                                   ------------------------>  23 முதல் 22 °C
நாகப்பட்டினம்                    ------------------------>  22 முதல் 20 °C
வேதாரணியம்                     ------------------------>  23 முதல் 21 °C
மயிலாடுதுறை                    ------------------------>  20 முதல் 18 °C
சீர்காழி                                 ------------------------>  22 முதல் 20 °C

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பிற உள் பகுதிகளில் காலை 4 மணி முதல் 6 மணி வரையில் 20 முதல் 18 °C வரையில் வெப்பம் நிலவும்.


2017 ஜனவரியில் தமிழகத்தில் மழை உண்டு

2016ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் வாங்கக்கடலில் சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தோன்றி மறைந்தாலும் அதனால் தமிழகத்துக்கு கிடைத்த மழை போதிய அளவில் இல்லை என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாக உள்ளது.

ஜனவரி 2017 இல் மேலும் சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அவ்வாறு உருவாகும் பட்சத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதே உண்மை.தற்பொழுது இருக்கும் தகவல்களைக் கொண்டு பார்க்கையில் ஜனவரி 10ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது எதையும் இப்பொழுது உறுதியாக கூறமுடியாது இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்தால் தான் சரியாக கூற முடியும்.



தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது இலங்கைக்கு மேற்கே கன்னியாகுமரிக்கு தெற்கே நிலைக் கொண்டு உள்ளது.அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று 28-12-2016 அன்று மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்த வரையில் இன்று 28-12-2016 அன்று மாலை 5 மணிக்கு மேல் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தமிழகத்தை பொறுத்தவரையில் 28-12-2016 அன்று காலை முதல் மாலை வரை நாகை மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.மதியத்திற்கு பிறகு மன்னார்குடி,கும்பகோணம் ,தஞ்சாவூர் போன்ற உள் மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

28-12-2016 இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மதியம் முதல் கண மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.மேலும் மாலை முதல் உள் கடலோர மாவட்டங்களான மதுரை,திருநெல்வேலி,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.கொடைக்கானலில் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.




வங்கக்கடலில் உருவானது அடுத்த புயல் சின்னம்

வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு தெற்கே சுமத்ரா தீவுக்கு அருகே மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம் 23-12-2016 அன்று உருவாகியிருக்கிறது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு தமிழகம் மற்றும் இலங்கையை நெருங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது அதனால் வருகின்ற டிசம்பர் 26ஆம் (26-12-2016) தேதியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Related Posts Plugin for WordPress, Blogger...