தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
வானிலை அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானிலை அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.12.2020 இன்றைய வானிலை | புதுச்சேரியில் கனமழை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

17.12.2020 நேரம் காலை 9:30 மணி நான் நேற்றைய குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #புதுச்சேரி நகர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 149 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #கடலூர் , #கள்ளக்குறிச்சி  , #விழுப்புரம் மாவட்ட பகுதிகளிலும் பல சிறப்பான தரமான சம்பவங்கள் அரங்கேறி இருப்பதை அறிய முடிகிறது இன்றும் அடுத்த சில மணி நேரங்களில் #டெல்டா மாவட்டங்களுக்கான மழை வாய்ப்புகள் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளது இவைத்தவிர்த்து தென் உள் ,மேற்கு உள் ,வடகடலோர  மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக பதிவிடப்படும்.


தற்போதைய நிகழ் நேர தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகளை சில நிமிடங்களுக்கு முன்பு குரல் பதிவு செய்திருக்கிறேன் - https://youtu.be/SW1LWc7HUYk அதில் கேட்டுக்கொள்ளுங்கள் எழுத்துபூர்வமாக நிகழ் நேர தகவல்களை விரிவாக பதிவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி நகர பகுதியில் 149 மி.மீ அளவு மழையும் #காரைக்கால்  பகுதியில் 27 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.


கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

=======================

மனம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 174 மி.மீ

அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் - 164 மி.மீ

திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 164 மி.மீ

முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 160 மி.மீ

கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 156 மி.மீ

திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 133 மி.மீ

மயிலம் (விழுப்புரம் மாவட்டம்) - 130 மி.மீ

வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 129 மி.மீ

குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 129 மி.மீ

மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 128 மி.மீ

மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 127 மி.மீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 122 மி.மீ

தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 120 மி.மீ

வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 115 மி.மீ

சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 114 மி.மீ

கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 110 மி.மீ

விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 110 மி.மீ

ரிசிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 107 மி.மீ

கீழ்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 107 மி.மீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 106 மி.மீ

கடலூர் IMD (கடலூர் மாவட்டம்) - 103 மி.மீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 100 மி.மீ

கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 99 மி.மீ

அரியலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 95 மி.மீ

காளையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 95 மி.மீ

எரையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  95 மி.மீ

சூரபட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 92 மி.மீ

நீமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 90 மி.மீ

வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  89 மி.மீ 

கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 88 மி.மீ

விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) -  84 மி.மீ

முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) -  82 மி.மீ

மே.மாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 80 மி.மீ

கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  79 மி.மீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 78 மி.மீ 

சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) -  78 மி.மீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  76 மி.மீ

வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 75 மி.மீ

கட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 74 மி.மீ

மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 72 மி.மீ

திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) -  72 மி.மீ

புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 71 மி.மீ


#Emmanuel_Paul_Antony

#Puducherry_Weather

#tamilnaduweather.com


70 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே பதிவிட்டுருக்கிறேன் இன்னும் சற்று நேரத்தில் அனைத்து பகுதிகளின் நிலவரம் அடங்கிய முழுமையான மழை அளவுகள் பட்டியல் நமது www.tamilnaduweather.com இணையத்தளத்தில் விரிவாக பதிவேற்றம் செய்யப்படும்.

16.12.2020 அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகள் | மழை பதிவாகி வரும் பகுதிகள்

16.12.2020 நேரம் இரவு 10:00 மணி நான் கடந்த குரல் பதிவில் மாலை நேரத்தில் குறிப்பிட்டு இருந்தது போல #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களை மழை மேகங்கள் பதம் பார்த்து வருகின்றன தற்சமயம் #பண்ருட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான தரமான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #கடலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் இரவு 8:30 மணி வரையில் 47 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது மேலும் மேலும் #புதுச்சேரி மாவட்டம் #திருபுவனை  மற்றும் கடலூர் மாவட்டம் #மாளிகைமேடு , #மணப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இவைத்தவிர்த்து தற்பொழுது #விருத்தாசலம் , #பலையபட்டினம் , #அரியலூர் , #பழுவூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #செங்கல்பட்டு - #திண்டிவனம் இடைப்பட்டு இருக்கும் அநேக இடங்களிலும் #விழுப்புரம் - #திண்டிவனம் இடைப்பட்ட பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகும் இது தொடர்பான தகவல்களை சில மணி நேரங்களுக்கு முன்பு குரல் -   https://youtu.be/QAsS0ZRe_ek விரிவாக குரல் பதிவு செய்திருக்கிறேன்.மேலும் #புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் மழை பதிவாக இருக்கிறது.

மேலும் தற்பொழுது #அடையாறு , #சோழிங்கநல்லூர் , #பாலவாக்கம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #சென்னை  மாநகரின் தெற்கு புறநகர் மற்றும் தெற்கு பகுதிகளிலும் மழை பதிவாகும்.அதே #டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் மழை பதிவாகும்.

அதேபோல #விழுப்புரம் , #பெரம்பலூர் மற்றும் #ராமநாதபுரம் மாவட்ட வடக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாகும்.

எழுத்துப்பூர்வமாக அனைத்து தகவல்களையும் பதிவிடுவது சிரமமாக உள்ளது ஆகையால் குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே..

இரவு 8:30 மணி வரையில் பதிவாகி இருக்கும் மழை அளவுகளின் படி
==========
கடலூர் - 47 மி.மீ
புதுச்சேரி - 33 மி.மீ

மீண்டும் நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேரத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

14-04-2019 இன்று முதல் தொடங்கிய வாரத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?

14-04-2019 நேரம் காலை 10:45 மணி  எனது கடந்த பதிவில்  நான் குறிப்பிட்டு இருந்தது போல  நிகழும் வாரத்தின் மத்திய வார நாட்களில் தமிழகத்தின் மேற்கு உள் ,மேற்கு மற்றும் தென் உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 17-04-2019 அல்லது 18-04-2019 ஆம் தேதிகள் முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சில மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மழை பதிவாக தொடங்கியதும் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தற்போது மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கத்தால் #ஈரான் அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தம் நிலவி வருகிறது இம்முறை இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகளை அடைய முற்பட்டு வலுவிழக்கும் இதன் காரணமாக இமய மலை பகுதிகளில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கம் வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் 18-04-2019 ஆம் தேதி முதல் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

பகல் நேர வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பம் அதிகரித்து இருக்கவே வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #வேலூர் , #திருச்சி  , #ஈரோடு  , #சேலம் ,#நாமக்கல் ,#தர்மபுரி ,#மதுரை , #விருதுநகர் ,#பெரம்பலூர் ,#அரியலூர் ,#தஞ்சை ,#கரூர் ,திருப்பூர் மாவட்டங்களிலும் #காஞ்சிபுரம் ,#விழுப்புரம் மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம்.#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேரத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் 101 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமான அளவு வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வெப்பநிலை தொடர்பாக இனி வரக்கூடிய நாட்களில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.


மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) தற்போது அதன் இரண்டாவது  கட்டத்தில் 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலு குறைந்து உள்ளது அடுத்து வரக்கூடிய 2 அல்லது 3 நாட்களில் இதன் வலு மேலும் குறைய தொடங்கலாம் 20-04-2019 ஆம் தேதி வாக்கில் அதன் வலு சற்று அதிகரிக்க தொடங்கி 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் அதன் இரண்டாவது கட்டத்திலேயே (Phase 2) நிகழும் வாரத்தில் அது தொடரலாம்.

எல்-நினோ தெற்கு அலைவு
------------------------------------------
தற்போது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.9 °C வெப்பமும் மேற்கு பகுதியான நினோ 4 பகுதியில் 0.8 °C வெப்பமும் கடந்த வாரம் பதிவாகி யுள்ளது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பசிபிக் கடல் பரப்பின் மத்திய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளது அதே சமயம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தோனேசியா அருகே உள்ள பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாக உள்ளது.தற்போது பசிபிக் கடல் பரப்பில் எல் நினோவுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன இதன் வலு குறைந்து ஒரு பலவீனமான எல்நினோ வுக்கான சூழல்கள் இந்த ஆண்டின் நிகழும் இளவேனிற்கலாம் முழுவதும் தொடர 80% வாய்ப்புகள் உள்ளதாக NCEP இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை அருகே உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட Indian Ocean Dipole தற்போது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


அனைவருக்கும் எனது சித்திரைத் திருநாள் / தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


05-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-08-2018 நேரம் நண்பகல் 12:00 மணி தற்பொழுது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 06-08-2018 அல்லது 07-08-2018 ஆம் தேதிகளில் அது வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவெடுக்கலாம் அவ்வாறு வலுவடைந்து மேற்கு -வட மேற்கு திசையில் அது நகரத் தொடங்கும் பட்சத்தில் கர்நாடகா ,கோவா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதிகளில் குறிப்பாக இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் மேலும் இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு .ஒருவேளை அந்த காற்றளுத்த தாழ்வு நிலையானது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து வலு குறைந்த நிலையில் வட மத்தியபிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளை நெருங்க முற்படும் பட்சத்தில் தமிழகத்துக்கு சாதகமான சூழலாக அமையலாம் இதன் காரணமாக 08-08-2018 அல்லது 09-08-2018 ஆம் தேதிகளில் தமிழக வட கடலோர ,வட மற்றும் உள் ,தென் உள் மாவட்டங்களில் நல்ல வலுவான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய வாரத்தின் பிற வர நாட்களிலும் தமிழகத்தில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வட இந்திய மாநிலங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க கூடும் எந்தெந்த மாநிலங்களில் எப்பொழுது மழையின் அளவு அதிகரிக்கலாம் எனபது தொடர்பான தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.அதே சமயம் 10-08-2018 பிறகு மீண்டும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வங்கதேசம் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் 13-08-2018  - 14-08-2018 அல்லது அதற்கு பிறகு வட வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக இந்த மாதத்தின் மத்திய நாட்கள்களில் அதாவாகிது 15-08-2018 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழையானது மீண்டும் தீவிரமடைய தொடங்கலாம். மும்பை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள அநேக கடலோர பகுதிகளிலும் அதன் பின் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.

மேடன் -ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation) ஆனது தற்பொழுது அதன் 7வது கட்டத்தில் உள்ளது ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அதாவது 15-08-2018க்கு பிறகு 17-08-2018 அல்லது 18-08-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய இரண்டாவது கட்டத்துக்கு சற்று வலு குறைந்த வீச்சு அளவுடன் வரலாம்.இது தென்மேற்கு பருவமழைக்கு சாதகமாக அமையலாம்.மேலும் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எல்நினோ தெற்கு அலைவு மற்றும் இந்திய பெருங்கடல் இருமுனை ஆகிய இரண்டுமே அதனுடைய நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவது இல்லை.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது நிலவி வரும் வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


Related Posts Plugin for WordPress, Blogger...