தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
வானிலை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானிலை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை அளவுகளின் பட்டியல்

23-04-2019 நேரம் காலை 11:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேரு இடங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #சேலம் மாவட்டம் #ஆத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 99 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #திருவண்ணாமலை மாவட்டம் #பூண்டி அருகே உள்ள #கலசப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 74 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று திருவண்ணாமலை நகர பகுதியிலும் 51 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது 23-04-2019 ஆகிய இன்று தமிழக மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் இது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.

23-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

ஆத்தூர்  (சேலம் மாவட்டம் ) - 99 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 74 மி.மீ
#மஞ்சளாறு (திண்டுக்கல் மாவட்டம் ) - 73 மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 63 மி.மீ
#தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 58 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 56 மி.மீ
#ஹொக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 55 மி.மீ
#கனங்கவல்லி (சேலம் மாவட்டம் ) - 52 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 51 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 51 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 50 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#தானியமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 45 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 44 மி.மீ
#தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 42 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம் ) - 42 மி .மீ
#இடையப்பட்டி  (மதுரை மாவட்டம் ) - 41 மி.மீ
செங்கோட்டை  (திருநெல்வேலி மாவட்டம் ) - 41 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 40 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 40  மி.மீ
ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 39 மி.மீ
#போளூர்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 37 மி.மீ
#கொடைக்கானல்  (திண்டுக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம் ) - 34 மி.மீ
#தண்டராம்பட்டு  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 34 மி.மீ
#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் )  - 33 மி.மீ
#ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
சத்ரபதி - #ஓட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 33 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 32 மி.மீ
தென்பறநாடு (திருச்சி மாவட்டம் ) - 32 மி .மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 31 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#மேலூர் (மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
RS மங்களம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 24 மி.மீ
#ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 23  மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 22 மி.மீ
#காட்டுக்குப்பம்  - #காட்டாங்குளத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் )  - 21 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 20 மி.மீ
#பென்னாகரம்  (தர்மபுரி மாவட்டம் ) - 20 மி.மீ
#கடவானூர்  - #தடினதம் (விழுப்புரம் மாவட்டம் ) - 19 மி.மீ
பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
தொட்டபெட்டா , உதகை  (நீலகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
கரியாக்கோயில் அணை  - #பாப்பநாயக்கன்பட்டி (சேலம் மாவட்டம் ) - 19 மி.மீ
#திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 18 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆணைமடவுஅணை (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
தர்மபுரி  (தர்மபுரி மாவட்டம் ) - 17 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
வால்பாறை (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
ஏறுடையம்பட்டு  (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
தென்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
போடிநாயக்கனுர் (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம் ) - 15 மி .மீ
திருப்பத்தூர்  (சிவகங்கை மாவட்டம் ) - 14 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
தட்ஐங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 14 மி .மீ
கிண்ணக்கொரை (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
புர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#திருக்கோயிலூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம் ) - 11 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
டேனிஷ்பேட் - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
பாலக்கோடு  (தர்மபுரி மாவட்டம் ) - 10 மி.மீ
பெருந்துறை  (ஈரோடு மாவட்டம் ) - 10 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
கெத்தி - #GEDDAI (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
சங்கராபுரம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 8 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
திண்டுக்கல்  (திண்டுக்கல் மாவட்டம் ) - 8 மி.மீ
அணைப்பாளையம்  (கரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
கொடுமுடி  (ஈரோடு மாவட்டம் ) - 8 மி.மீ

நான் கடந்த 24 மணி நேரத்தில் 8 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளை மேலே பதிவிட்டு உள்ளேன்.இவைதவிர்த்து உங்களது பகுதியின் மழை ளவை அறிய விரும்பினால் உங்களது ஊர்களின் பெயரை Comment செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


24-12-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகள்

24-12-2018 நேரம் பிற்பகல் 1:40 மணி அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தற்பொழுது மாலத்தீவுகள் அருகே நிலைக் கொண்டுள்ளது அதேபோல வடக்கு கேரளம் அருகே உள்ள கடல் பகுதியில் அழுத்தக் குறைவு ஏற்பட்டு ஒரு வளி மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அந்த  மாலத்தீவுகள் கடல் பகுதியில் தற்பொழுது நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது நேற்று மேற்கு நோக்கி நகர்ந்து வந்ததால் #கோடியக்கரை உட்பட #நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு கடலோர பகுதிகளில் நேற்று இரவு முதல் சிறு சிறு மழை மேகங்கள் தொடர்ந்து குவிந்து வந்தன தற்பொழுதும் சற்று முன்பு #நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் அருகே சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வந்தன அதேபோல தென் கடலோர மாவட்டங்களின் அருகே உள்ள கடல் பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து தென் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தியது மேலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் ஓரளவு நல்ல மழை பதிவாகியுள்ளது.தற்பொழுதும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் நுழைந்து ஆங்காங்கே கடலோர பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது.

24-12-2018 ஆகிய இன்று தென் உள் ,தென் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை ,குமரி ,விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#நீலகிரி மாவட்டத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.பொதுவாக இன்று சிவகங்கை ,மதுரை ,புதுக்கோட்டை ,விருதுநகர் ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,நெல்லை ,தூத்துக்குடி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.திருப்பூர் ,ஈரோடு ,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று ஆங்காங்கே  சில இடங்களில் இன்று ஓரளவு நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று கேரள மாநிலத்திலும் பல மிதமான இடங்களில் மழை பதிவாகலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று முதல் வறண்ட வானிலையே நிலவ தொடங்கலாம் அவ்வப்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.


24-12-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 58 மி.மீ
#தலைநாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம் ) -34 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 33 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 32 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ
#செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 25 மி.மீ
#திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#புல்வாய்க்கால் (விருதுநகர் மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 16 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 15 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 13 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மானாமதுரை (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) - 12 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#கொள்ளிடம் -#அனைகாரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 10 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ
#கும்பகோணம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ 
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 9.9 மி.மீ
#அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


10-12-2018 வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அது எங்கு கரையை கடக்கலாம் ?

10-12-2018 நேரம் பிற்பகல் 1:55 மணி நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது தெற்கு வங்கக்கடல் பகுதியின் மத்திய பகுதியிலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) உருவாகியுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் கிழக்கு -வட கிழக்கு திசை நோக்கி சற்று நகர முற்பட்டு தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-12-2018 அல்லது 12-12-2018 ஆகிய தேதிகளில் ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Well marked Low Pressure Area) என்கிற நிலையை அடையலாம் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது 12-12-2018 அல்லது 13-12-2018 ஆம் தேதிகளில் வாக்கில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (#Depression) உருவெடுக்கலாம்.மேலும் அதன் பின்னர் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர முற்படலாம்.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல தற்போது மேடன்-ஜூலியன் அலைவு (#MJO) ஆனது அதன் 3வது (3rd Phase ) கட்டத்தில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் (Amplitude Greater Than 1) மிக வலுவாக உள்ளது அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மேடன்-ஜூலியன் அலைவு ஆனது வலுவுடன் 3 வது கட்டத்திலேயே தொடரலாம் இது தற்பொழுது உருவாகியிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மென்மேலும் வலுவடைய சாதகமாக உள்ளது.அது அடுத்து வரக்கூடிய நாட்களில் வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவெடுத்ததும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான அதன் நகர்வுகள் தொடர்பாக ஒரு தெளிவு கிடைக்கும்.மேலும் 13-12-2018  அல்லது 14-12-2018 ஆம் தேதிகளின் வாக்கில் மேடன் ஜூலியன் அலைவு (#MJO) ஆனது அதன் 4 வது கட்டத்துக்கு (Phase 4)  1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக நகர்ந்து செல்லலாம் மேலும் அதற்கு அடுத்த 7 முதல் 8 நாட்கள் அது அதனுடைய 4வது கட்டத்திலயே தொடரலாம்.என்னை பொறுத்தமட்டில் தற்பொழுது உருவாகியிருக்கும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒரு புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே கருதுகிறேன்.

தற்பொழுதே புயல் எங்கு கரையை கடக்கும் என்று உறுதியாக யாராவது பதிவிட்டு இருந்தால் அதில் நம்பகத்தன்மை 10% சதவிகிதம் கூட இல்லை என்று தான் கூறுவேன்.அவை வானிலை ஆராய்வுகளாகவோ அல்லது அதனை தெரிவிப்பவர்கள் ஒரு வானிலை ஆராய்ச்சியாளர்களாகவோ இருக்க முடியாது அவை வெறும் வானிலை அனுமானங்களாக மட்டுமே இருக்க முடியும்.இன்று அனைவரிடம் வானிலை தொடர்பான தகவல்களை அறிய கைக்கு அடக்கமான செயலிகள் உண்ட.தற்பொழுது நிலவி வரும் வானிலை தகவல்களை கொண்டு அடுத்த சில மாதங்களுக்கான வானிலை எப்படி இருக்கலாம் என்பதை கணிக்கக்கூடிய அளவிலான செயலிகளும் உள்ளன.ஆனால் அவை அனைத்தும் நிகழ் நேர தகவல்களுக்கு தகுந்தாற் போல சில மணி நேர இடைவெளியில் தங்களை புதுப்பித்துக் கொள்பவை.நாட்கள் நெருங்க நெருங்க தான் ஒரு நிகழவு குறித்த தெளிவான தக்வலைகள் தெரியவரும்.ஆகவே தேவையற்ற வதந்திகளை நம்பி யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை.இதைப்போன்ற தருணங்களில் மாதிரிகளின் தகவல்கள் நிலையற்றவை என்பதை நாம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.தற்போதே புயல் எங்கே கரையை கடக்கும் என்பவை போன்ற அனுமானங்களை பரப்பி வருபவர்கள் மக்கள் மனதில் எழும் தேவையற்ற பயத்தையும் / பதட்டத்தையும் தவிர வேறு எதையும் அறுவடை செய்ய இயலாது.அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த பிறகே அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து உறுதியாக பதிவிடுவது முறையானதாக இருக்கும்.

காற்றலுத்த தாழ்வு மண்டலமோ அல்லது புயலோ எங்கு கரையை கடக்க வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் ? என்று நமது பக்கத்தில் இணைந்திருக்கும் நண்பர்கள் சிலர் என்னிடம் நேற்று கேள்வி எழுப்பினார்கள் அவர்களுக்கான என்னுடைய பதிலை அப்பொழுதே நான் அவர்களிடம் தெரிவித்து விட்டேன்.இந்த கேள்வியை உங்களிலும் பலர் என்னிடம் கேட்க நினைத்திருக்கலாம்.அப்படி உங்கள் மனதிலும் இந்த கேள்வி எழுந்திருத்தல் எனது பதிலை பொதுவாகவே இங்கு தெரிவித்து விடுகிறேன்.

எனது பதில்  : இந்த முறை அது வட தமிழகத்துக்கு முற்றிலும் பலன் வழங்காமல் போய்விட வாய்ப்புகள் குறைவு .நாட்கள் நெருங்க நெருங்க வட தமிழகத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.அதன் வலிமை மற்றும் அது எந்த பகுதியில் கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை போன்ற தகவல்களுடன் அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவெடுத்ததும் அதாவது 12-12-2018 அல்லது 13-12-2019 ஆம் தேதி வாக்கில் உறுதியாக பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


05-12-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-12-2018 நேரம் இரவு 10:05 மணி தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.மேலும் கடந்த 25-11-2018 அன்று நான் எழுதிய அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான வானிலை தகவல்கள் அடங்கிய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது 04-12-2018 ஆகிய நேற்று முதல் அதன் இரண்டாவது கட்டத்தை வலுவான வீச்சு அளவுடன் எட்டியுள்ளது.இது அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலு பெற்று அதற்கு அடுத்த நிலையை அடைய உதவி  புரிகிறது.ஆனால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பான தகவல்களை ஓரளவு துல்லியமாக அறிய குறைந்தது ஒரு வாரமாவது (7 நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் புயல் உருவாகும் என்பதை போன்ற தகவல்களை உறுதியாக கூறுவது என்பது பிறக்காத பிள்ளைக்கு பேர் வைப்பது போன்றதாகும்.அடிப்படை ஆதரமற்ற வீண் வதந்திகளை பகிர்ந்து மக்களிடம் பீதியை பரவ செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.நான் உங்களிடம் கேட்டு கொள்வது ஒன்று தான் ஆதரமற்ற தகவல்களை நம்பவும் செய்யாதீர்கள் அதை பகிர்ந்து மக்களிடம் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தவும் முற்படாதீர்கள்.05-12-2018 ஆகிய இன்று #சென்னை மாநகர் உட்பட வட மற்றும் வட-உள் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.நாளை முதல் வட தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.05-12-2018 ஆகிய இன்று இதன் பிறகு நல்லிறவு மற்றும் 06-12-2018 ஆகிய நாளை அதிகாலை நேரங்களில் #ராமநாதபுரம் , #புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் அதிகாலை நேரத்தில் வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.நாளை தென் தமிழகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மற்றபடி 06-12-2018 ஆகிய நாளை முதல் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மீண்டும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் காற்றின் திசையில் ஏற்படும் சிறு மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.மேலும் நான் கடந்த மாதம் முதல் வட கிழக்கு பருவமழையானது டிசம்பர் 13 (13-12-2018) ஆம் தேதிக்கு பிறகு வரும் ஏதேனும் நாட்களில் மீண்டும் ஒரு முறை தீவிரமடைய வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருந்தேன் அதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் அதற்கான வாய்ப்புகளை இன்னும் 10 நாட்களில் பிரகாசமாக்கும் என நம்புவோம்.

மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation)
-----------------------------------------------------------------------------
மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) -MJO ஆனது தற்பொழுது அதன் 2வது கட்டத்தில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக உள்ளது அடுத்த 4 அல்லது 5 நாட்களில் அதாவது 09-12-2018 அல்லது 10-12-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3வது கட்டத்தை 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக அடையலாம் அதன் பின் அதற்கு அடுத்த 7 நாட்களுக்கு அது 3வது கட்டத்தில் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளது அது மேலும் கிழக்கு நோக்கி பயணித்து அதன் பின் 16-12-2018 அல்லது அதற்கு பிறகு அது அதனுடைய 4வது கட்டத்தை அடைய முற்படலாம்.ஒரு சில மாதிரிகள் 7 நாட்களுக்கு பின்னர் அது 3வது கட்டத்திலேயே 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலுகுறைந்த நிலையில் தொடரலாம் என்பதை போன்று தெரிவிக்கின்றன எதுவாயினும் என்னை பொறுத்தவரையில் 18-12-2018 அல்லது 19-12-2018 ஆம் தேதிவரையில் MJO வின் தாக்கம் வங்கக்கடல் பகுதிகளுக்கு சாதகமானதாக இருக்கும் என கருதுகிறேன்.இந்த காலகட்டத்துக்குள் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தகட்ட நகர்வுகள் வட கிழக்கு பருவமழை தீவிரமடைய சாதகமானதாக இருக்கும் பட்சத்தில்.இதுநாள் வரையில் நிகழும் 2018 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பதிவான ஒட்டுமொத்த மழை அளவில் இருக்கும் வேறுபாடு நீங்கும் என நம்பலாம்.அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation)
--------------------------------------------------------------------------------
.தற்போது வலுகுறைந்த எல்-நினோவுக்கான சூழல்கள் பசிபிக் கடல் பரப்பில் நிலவி வருகிறது.இதன் காரணமாக கடந்த முறை அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்த எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation) தொடர்பான தகல்வல்களையே இந்த பதிவுடனும் இணைக்கிறேன்.அடுத்து வாரத்தில் பசிபிக் கடல் பரப்பில் நிலவும் சூழல்கள் தொடர்பாக விரிவாக பதிவிடுகிறேன்.தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரபரப்பில் வலுகுறைந்த எல்-நினோ வுக்கான சூழல்கள் நிலவ தொடங்கியிருக்கின்றன இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பரப்பில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக நமது பக்கத்தின் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பரப்பு பகுதியான நினோ 4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.9°C அளவிலும் அதேபோல இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.7°C அளவிலும் மேலும் நினோ 3 இல் 0.8°C மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் கிழக்கு பகுதியான நினோ 1+2 பகுதியில் 0.6°C அளவிலும் இயல்பை விட அதிகரித்துள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பசிபிக் கடல் பரப்பு வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அடுத்த பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் மத்தியில் வலுவான எல்நினோ வுக்கான சூழல்கள் உருவாகலாம்.

பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாகவும் ஏற்கனவே நமது பக்கத்தில் இதற்கு முந்தைய பதிவுகளில் ஒரு முறை பதிவிட்டு உள்ளேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

27-11-2018 தமிழகத்தில் அடுத்து மழைக்கான வாய்ப்பு எப்பொழுது ?

27-11-2018 நேரம் பிற்பகல் 2:20 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தமிழகத்தின் அநேக இடத்திலும் பனிப்பொழிவு அதிகரித்திருக்கலாம்.

27-11-2018 ஆகிய இன்று இரவு மற்றும் 28-11-2018 ஆகிய நாளை அதிகாலை பனிப்பொழிவு அதிகரித்திருக்க வாய்ப்புள்ள பகுதிகள்
-------------------------------------------------
27-11-2018 ஆகிய இன்று இரவு ,நள்ளிரவு மற்றும் 28-11-2018 ஆகிய நாளை அதிகாலை #ஊட்டி ,#குன்னூர் ,கோத்தகிரி உட்பட நீலகிரி மாவட்டத்தின் அநேக பகுதிகளிலும் அதிகமான பனிப்பொழிவு உணரப்படலாம் மேலும் #வால்பாறை  - #மூணாறு - #கொடைக்காணல் உட்பட அதன் இடையே உள்ள #மன்னவனூர் ,#பூம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திண்டுக்கல் மாவட்டத்தின் அநேக மேற்கு பகுதிகளிலும் #கிருஷ்னகிரி மாவட்டம் #ஓசூர் ,#தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மிக அதிகமான அளவு பனிப்பொழிவு உணரப்படலாம் நான் மேற்குறிப்பிட்ட இருக்கும் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குறைந்த பட்சமாக 12°C முதல் 7°C வரையில் வெப்பநிலை நிலவளாம்.மேலும் #தேனி மாவட்டம் #மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #சேலம் உட்பட #சேலம் மாவட்டம் #ஆத்தூர் - #ஏற்காடு சுற்றுவட்டப் பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் #ஆம்பூர் ,#வாணியம்பாடி ,#ஏலகிரி ,#ஆலங்காயம் மற்றும் அதனை ஒட்டியுள்ள #ஜவ்வாது மலை பகுதிகளிலும் #நெல்லை மாவட்டம் #பாபநாசம் உட்பட #நெல்லை மற்றும் #குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் #ஈரோடு மாவட்டம் #ஆசனுர் ,#கெட்டியூர் ,குடியூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதிகமான பனிப்பொழிவு உணரப்படலாம் நான் மேற்குறிப்பிட்ட இருக்கும் பகுதிகளில் இதற்கு முந்தைய நாட்களில் நிலவி வந்த வெப்பநிலையை விட நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பல பகுதிகளிலும் 1° முதல் 2° செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைவு ஏற்படலாம்.

மேலும் #கோவை ,#திருப்பூர் ,#ஈரோடு ,#வேலூர் ,#நாமக்கல் மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களின் அநேக இடங்களிலும் #பெரம்பலூர் ,#மதுரை ,#புதுக்கோட்டை ,#திருவண்ணாமலை ,#தஞ்சை ,#காஞ்சிபுரம், #அரியலூர் ,#திருச்சி ,#கரூர் ,#சிவகங்கை மற்றும் #விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகரித்திருக்கலாம் சில பகுதிகளில் 1° C வரையிலும் வெப்பநிலை குறைவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

இவற்றை தவிர்த்து தமிழகத்தின் அநேக கடலோர மாவட்டங்களிலும் இதர பிற மாவட்டங்களிலும் பல இடங்களில்  0.5° வரையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில்  முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் வெப்பநிலை குறைவு உணரப்படலாம்.

தமிழகத்தில் அடுத்து மழைக்கான வாய்ப்பு எப்பொழுது ?
----------------------------------------------------------------------------
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு அடுத்து வரக்கூடிய வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல 28-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 29-11-2018 ஆகிய நாளை மறுநாள் அதிகாலை முதல் தமிழக கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு 29-11-2018 ஆகிய நாளை மறுநாள் தமிழக தென் ,தென்உள் ,வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலான மழை பதிவாகலாம் அதற்கு அடுத்த சில நாட்களுக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது 04-12-2018 ஆம் தேதி அல்லது அதற்கு அடுத்த நாட்களில் வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றி தமிழகத்தில் மழையின் அதிகரிக்க தொடங்கலாம் 13-12-2018 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையலாம்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



25-11-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-11-2018 நேரம் மாலை 5:00 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் வறண்ட வானிலையே தொடரும் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.  இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.தற்பொழுது #வியட்நாம் நாட்டின் #VungTau அருகே உள்ள தெற்கு கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் #உசாகி (#USAGI) புயலானது கரையை கடந்து வட -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு  அல்லது நாளை மறுநாள் #கம்போடியா நாட்டில் முற்றிலும் வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது இதன் தாக்கத்தால் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் அலைவுகளின் காரணமாகவும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடலின் இருமுனைகளிலும் நிலவி வரும் தற்காலிக நேர்மறையான சூழல்களின் காரணமாகவும் 28-11-2018 ஆம் தேதி அன்று நள்ளிரவு அல்லது 29-11-2018 தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதற்கு அடுத்த ஓரிரு நாட்களிலும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் அதன் பின் மீண்டும் மழையின் அளவு குறைய தொடங்கலாம் பிறக்க இருக்கும் டிசம்பர் மாத முதல் வார மத்தியில் அதாவது 04-12-2018 அல்லது 05-12-2018 ஆம் தேதி வாக்கில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 13-12-2018 வாக்கில் அல்லது அதற்கு பிறகு வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.

மேடன் ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation)
-----------------------------------------------------------------------------
மேடன் ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation) - MJO ஆனது இரண்டு நாட்களுக்கும் முன்பு அதன் 6 வது கட்டத்தில் 1க்கு குறைவான வீச்சு அளவுடன் இருந்தது தற்பொழுது 25-11-2018 ஆகிய இன்று அதன் 7வது கட்டத்தில் 1க்கும் சற்று அதிகமான வீச்சு அளவை கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது அதனுடைய 8வது  மற்றும் 1வது கட்டங்களை கடந்து 10 முதல் 14 நாட்களில் அதவாது டிசம்பர் முதல் வார மத்திய நாட்கள் அல்லது அதற்கு பிறகு அது அதனுடைய 2வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளது அதாவது 04-12-2018 முதல் 08-12-2018 வரை உள்ள நாட்களில் அதன் பின் அதற்கு அடுத்த 4 முதல் 5 நாட்களில் அது அதனுடைய 3 வது கட்டத்துக்கு 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவான நிலையில் பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கையில் மேடன் ஜூலியன் அலைவின் உதவியுடன் டிசம்பர் முதல் வார மத்தியில் அல்லது அதற்கு பிறகு வங்கக்கடல் பகுதிகளில் பருவமழை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது இரண்டாவது வாரத்தில் அதாவது 13-12-2018 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கலாம் அதன் பின் மீண்டும் ஒருமுறை வட கிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.

எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation)
--------------------------------------------------------------------------------
தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரபரப்பில் மிதமான எல்-நினோ வுக்கான சூழல்கள் நிலவ தொடங்கியிருக்கின்றன இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பரப்பில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக நமது பக்கத்தின் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பரப்பு பகுதியான நினோ 4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.9°C அளவிலும் அதேபோல இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.7°C அளவிலும் மேலும் நினோ 3 இல் 0.8°C மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் கிழக்கு பகுதியான நினோ 1+2 பகுதியில் 0.6°C அளவிலும் இயல்பை விட அதிகரித்துள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பசிபிக் கடல் பரப்பு வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அடுத்த பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் மத்தியில் வலுவான எல்நினோ வுக்கான சூழல்கள் உருவாகலாம்.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

20-11-2018 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் - புதுச்சேரியில் கனமழை பதிவாக வாய்ப்பு

20-11-2018 நேரம் பிற்பகல் 1:55 மணி தற்பொழுது அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதன் மையப்பகுதி சற்று விரிவடைந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை பகுதிகளில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது அநேக வடகடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் மழை பதிவாக தொடங்கியுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த சில மணிநேரங்களில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் அது ஒரு புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் குறைவு.

மேலும் அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று இரவு #நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் இதன் காரணமாக #புதுச்சேரி அருகே காற்று மிக சாதகமாக குவிய வாய்ப்புகள் உள்ளது 20-11-2018 ஆகிய இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#பரங்கிப்பேட்டை ,#மரக்காணம் உட்பட #புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் இவைதவிர்த்து இன்று #திருவள்ளூர் ,#சென்னை ,#காஞ்சிபுரம் ,#விழுப்புரம் ,#கடலூர் ,#நாகப்பட்டினம் ,#காரைக்கால் ,#திருவாரூர் உட்பட  வட கடலோர மாவட்டங்களின் அநேக பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #திருவண்ணாமலை ,#தஞ்சை ,#திருச்சி ,அரியலூர் ,பெரம்பலூர் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,அரியலூர் ,பெரம்பலூர் ,வேலூர் மாவட்டங்களில் அங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு வட உள் மாவட்டங்களில் இது பரவலான மிதமான மழையாகவும் பதிவாகலாம் மேலும் தூத்துக்குடி ,விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

நான் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் நமது பக்கத்தில் பலமுறை #Geographical Advantage என்ற ஒரு பகுதி அமைந்திருக்கும் இடம் சார்ந்து அந்த இடத்தில் மழை மேகங்கள் அதிகம் குவிய சாதகமான சூழல்கள் அமையும் என்று குறிப்பிட்டு இருப்பேன் அதன்படி 20-11-2018 ஆகிய இன்று அந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடலோர பகுதிகளை நெருங்க முற்படுகையில் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் #சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் #நாகை மாவட்டம் #பழையாறு - #சீர்காழி -#திருமுல்லைவாசல் ,#கொள்ளிடம் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல பழையாறு  - #திருமுல்லைவாசல் பகுதிகள் வழியாக உட்புகுந்து வரும் காற்றும் #பரங்கிப்பேட்டை அருகே உட்புகுந்து வட க்கு திசையில் இருந்து கீழ்நோக்கி வரும் காற்றும் #மயிலாடுதுறை  - #ஜெயம்கொண்டாம் -#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளில் குவிய வாய்ப்புகள் உள்ளதால் அப்பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை இன்று பதிவாகலாம் மேலும் இன்று இரவு கடலோர மாவட்டடங்களை ஒட்டியுள்ள வேலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களிலும் #காஞ்சிபுரம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலோர பகுதிகளை கடந்து உட் பகுதிகளில் நகர்ந்து செல்கையில் 21-11-2018 ஆகிய நாளை வட உள் மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் பரவலான மழை பதிவாகலாம் ஒரு சில பகுதிகளில் கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உளள்து இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று இரவு மீண்டும் பதிவிடுகிறேன்.

நிகழ் நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் இன்றும் ஓரிரு முறை பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


15-11-2018 காரைக்கால் நகர பகுதிக்கு 200 கி.மீ தொலைவில் கஜா (GAJA) புயல் - எங்கு கரையை கடக்கலாம் ?

15-11-2018 நேரம் பிற்பகல் 2:25 மணி தற்பொழுது அந்த தீவிர புயலான #கஜா (#GAJA) கிட்டத்தட்ட #காரைக்கால் நகரப்பகுதிக்கு 200 கி.மீ கிழக்கே நிலைக் கொண்டுள்ளது.அதனை காரைக்கால் வானிலை ஆய்வு மைய ராடார் படங்களின் வாயிலாக தெளிவாக அறியமுடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பதிவாக தொடங்கலாம் குறிப்பாக அந்த புயல் #நாகை மாவட்டத்தின் கடலோர  பகுதிகளை நெருங்குகையில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் நகர பகுதிகள்  உட்பட அம்மாவட்டங்களின் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகலாம் மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அந்த தீவிர புயலானது மேலும் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று 15-11-2018 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 16-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரத்தில் #காரைக்கால் - #கோடியக்கரை இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் மேலும் நான் முன்பு தெரிவித்து இருந்தது போல அந்த தீவிர புயலானது #வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அதாவது இன்று இரவு அல்லது நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#அரியலூர் ,#பெரம்பலூர் ,#திருச்சி ,#தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் #புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஆங்காங்கே வலுவான காற்றுடன் கூடிய மழை பதிவாகலாம்.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதாவது #தலைஞானியறு உட்பட #வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சமயங்களில் 120 கி.மீ வரையிலும் காற்று வேகம் எடுக்கலாம் #காரைக்கால் ,#நாகபட்டினம் ,#திருவாரூர் நகர பகுதிகளில் உட்பட அம்மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட ஆங்காங்கே இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.



#புதுச்சேரி மற்றும் #கடலூர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசலாம்.மேலும் #சீர்காழி ,#பரங்கிப்பேட்டை ,#பிச்சாவரம் ,#சிதம்பரம் ,#கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரையில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.

மேலும் அந்த புயல் கரையை கடந்து வலுகுறைந்து #முத்துப்பேட்டை உட்பட #திருவாரூர் ,#புதுக்கோட்டை ,#திண்டுக்கல் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் வழியாக கேரளாவை அடைந்து பின்னர் 16-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 17-11-2018 ஆகிய நாளை மறுநாள் அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் இதன் காரணமாக முன்பு நான் முன்பு பதிவிட்டு இருந்தை போன்று 16-11-2018 ஆகிய நாளை #திருச்சி ,#மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவகங்கை ,#கரூர் ,#வால்பாறை உட்பட #திருப்பூர் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.சில பகுதிகளில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கூட பதிவாகலாம்.இவை தவிர்த்து தமிழக்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் பரவலான மழை நாளை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் அது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து காற்றை தம்வசம் இழுப்பதாலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் இருப்பதாலும் 18-11-2018 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் 20-11-2018 மற்றும் 21-11-2018 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.



அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களை நெருங்குகையில் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்





கஜா புயல் காரைக்கால் அருகே கரையை கடக்க வாய்ப்பு - 15-11-2018 அன்று இரவு அது கரையை கடக்கலாம்

14-11-2018 நேரம் பிற்பகல் 1:50 மணி இன்று காலை முதல் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர தொடங்கி தொடர்ந்து தமிழக வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது இன்னும் சற்று நேரத்தில் அது தீவிரமடைய தொடங்கி அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது தற்பொழுது மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது நிலைகொண்டுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைய தொடங்கி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொள்ளலாம்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அது வட கடலோர பகுதிகளை நெருங்க முற்படுகையில் அதன் வலு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆகிய நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் அது #காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மாவட்ட பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது கரையை கடக்க முற்படுகையில் மணிக்கு 70 கி.மீ  - 80 கி.மீ வரை #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கற்று வீசக்கூடும் சில சமயங்களில் 90 கி.மீ வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

15-11-2018 அன்றைய மழைக்கான வாய்ப்புகள்
-------------------------------------------------------------------------
14-11-2018 அன்று நள்ளிரவு அல்லது 15-11-2018 ஆம் தேதி அதிகாலை முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் #சென்னை மாநகரில் ஆங்காகே மழை பதிவாக தொடங்கலாம் மெல்ல மெல்ல மழை #காஞ்சிபுரம் , #விழுப்புரம் ,#புதுச்சேரி ,#கடலூர் என அன்று நண்பகுலுக்குள் பிற வட கடலோர மாவட்டங்களுக்கும் பரவ தொடங்கலாம்.15-11-2018 அன்று வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

15-11-2018 நள்ளிரவு முதல் 16-11-2018 நள்ளிரவு வரை உள்ள 24 மணி நேரத்தின் மழைகான வாய்ப்புகள்
--------------------------------------------------------------------------

#காரைக்கால் ,#நாகப்பட்டினம் ,#திருவாரூர் ,#தஞ்சை ,#புதுக்கோட்டை ,#திருச்சி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது  கரையை கடந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து பின்னர் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் கேரளாவை கடந்து அரபிக்கடல் பகுதியை எட்ட முற்படலாம் இதன் காரணமாக இவை தவிர்த்து கரூர் ,திருப்பூர் ,கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக கோவை ,திருப்பூர் மாவட்டங்களின் தெற்கு பகுதிகளில் ஓரளவு வலுவான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள #நீலகிரி ,#தேனி ,#விருதுநகர் உட்பட தமிழக மேற்கு மாவட்டங்களிலும் #மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவங்கங்கை ,திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #நெல்லை ,#தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.பொதுவாக தென் உள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #அரியலூர் ,#பெரம்பலூர் ,#விழுப்புரம் ,#திருவண்ணாமலை மற்றும் #வேலூர் ,#ஈரோடு ,#சேலம் ,#நாமக்கல் ,#விழுப்புரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் இவைகள் உட்பட தர்மபுரி ,கிருஷ்னகிரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் 16-11-2018 அன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மொத்தத்தில் 16-11-2018 அன்று தமிழிகக்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

15-11-2018 மற்றும் 16-11-2018 ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கலாம் ?
------------------------------------------------------------------------------------
15-11-2018 ஆகிய நாளை காலை அல்லது நன்பகல் வாக்கில் #புதுச்சேரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் 15-11-2018 ஆம் தேதி நண்பகல் முதல் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கலாம் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் மேலும் அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படுகையில் அதாவது 15-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் 16-11-2018 அன்று அதிகாலை நேரத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் மணிக்கு 60 கி.மீ  - 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் 15-11-2018 ஆகிய நாளை நண்பகல் அல்லது பிற்பகல் வாக்கில் மழை பதிவாக தொடங்கலாம் அந்த கப்புயல் கரையை கடக்கையில் அதாவது 16-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சில சமயங்களில் மணிக்கு 90 கி.மீ என்கிற அளவிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.#காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மற்றும் #திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்

அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது தீவிர புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதன் நகர்வுகள் தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

11-11-2018 மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவானது #காஜா (#GAJA) புயல்

11-11-2018 நேரம் காலை 9:10 மணி நேற்று அதிகாலை வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு மேற்கே நிலைக் கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று வலு பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) உருவெடுத்தது அது மேலும் தீவிரமடைந்து 10-11-2018 ஆகிய நேற்று இரவு தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அந்தமானுக்கு கிழக்கே ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையை அடைந்தது (Deep Depression) .மேலும் அது தொடர்ந்து தீவிரமடைந்து 11-11-2018 ஆகிய இன்று அதிகாலை ஒரு புயலாக (Cyclone) உருவெடுத்தது ,நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல அது ஒரு புயலாக உருவெடுத்தாததால் அதற்கு இலங்கை  நாட்டின் தேர்வு சொல்லான #காஜா (#GAJA) என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.அது மேலும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த இல் மணி நேரங்களில் இன்று 11-11-2018 ஆகிய இன்று இரவு அல்லது 12-11-2018 ஆகிய நாளை அதிகாலை அது ஒரு தீவிர புயல் (Severe Cyclone) என்கிற நிலையை எட்டிவிட  வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் கடந்த 02-11-2018 அன்று எழுதிய அடுத்து வரக்கூடிய வரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் அந்த #காஜா (#GAJA) புயலானது தமிழகத்துக்கு பலன் வழங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் நகர தொடங்கி அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்களின் காரணமாக அது தனது திசையை மாற்றி கிழக்கு - தென் கிழக்கு திசையில் நகர தொடங்கலாம் 14-11-2018 ஆம் தேதி வாக்கில் அது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் முன்பை போல அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்களை கணக்கில் கொண்டு அது  மேலும் தென் கிழக்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆம் தேதி வாக்கில் #மகாபலிபுரம்  - #காரைக்கால் இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம்.

நான் இதற்கு முந்தைய பதிவுகளில் பதிவிட்டு இருந்தது போல அந்த புரியலானது தெற்கு ஆந்திரம் மற்றும் சென்னை ,திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடகோடி கடலோர மாவட்டங்களை நெருங்க முற்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் நிலவிவரும் வறட்சியான சூழல்களின் காரணமாக அடு சற்று வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது பெரும்பாலும் தற்பொழுது நிலவி வரும் சூழல்களின் அடிப்படையில் அது வலுவுடன் கரையை கடக்க #மகாபலிபுரம்  - #காரைக்கால் இடையே உள்ள கடலோர பகுதிகளை தேர்நதெடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை மீண்டும் விரிவாக நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.


அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொல்கிறேன்.


09-11-2018 கடந்த 24 மணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை அளவுகள்

09-11-2018 நேரம் காலை 10:45 மணி தற்பொழுது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தெற்கு இலங்கைக்கு தென் கிழக்கே குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது அது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதிகளை அடைய முற்பட்டு பின்னர் கிழக்கில் நகர் தொடங்கி வலுவிழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள மன்னார்வளைகுடா கடல் பகுதிகளில் மழை மேகங்கள் திரண்டு வருகின்றன அது அடுத்த வரக்கூடிய சில மணி நேரங்களில் மேலும் தெற்கு நோக்கி நகர முற்படும் என்பதால் நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல இனி மழையின் அளவு குறையலாம் வட மாற்று வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் இனி வரக்கூடிய நாட்களில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மட்டும் மழை பதிவாகலாம்.மேலும் இன்று நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்களில் பனிப்பொழிவு மேலும்  அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 11-11-2018 அல்லது 12-11-2018 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் தற்பொழுது நிலவிவரும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேர வெப்பநிலையை விட 2° முதல் 3° செல்ஸியஸ் வரையில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னொரு புதிய பதிவில் பதிவிடுகிறேன்.

மேலும் தற்பொழுது நாம் எதிர்பார்த்தை போலவே கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம்.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல இம்முறை இதனால் தமிழகத்துக்கு குறைந்த பட்ச பலனாவது கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.அதன் நகர்வுகள் தொடர்பான தகவல்களை நாளை அல்லது நாளை மறுநாள் உறுதி செய்கிறேன்.

09-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்.

#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 24 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 15 மி.மீ

09-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.

#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 67 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 45 மி.மீ
#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 32 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ
#சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம் ) - 30 மி.மீ
#சுரங்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 27 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#ரமேஷ்வ்ரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 26 மி.மீ
#அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 22 மி.மீ
#மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 21 மி.மீ
#பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 20 மி.மீ
#கொள்ளிடம் - #அனைகாரச்சத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -20 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 20 மி.மீ
#அணைக்கரை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 19 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 19 மி.மீ
#ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 17 மி.மீ 
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15மி.மீ
#தஞ்சாவூர் - #பெரியகோயில்  - 15 மி.மீ
#வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) -14 மி.மீ
#ஆடுதுறை AWS (தஞ்சாவூர் மாவட்டம் )  -14 மி.மீ
#திருசெந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 13 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ 
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#குலசேகரபட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
#செந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

03-11-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக மழை பதிவாகிய பகுதிகள் - மணிமுத்தாறு 286 மி.மீ - சாத்தான்குளம் 219 மி.மீ

03-11-2018 நேரம் காலை 9:50 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் படம் இன்று காலை 9:30 மணி வாக்கில் பதிவானது அதன்படி #அகஸ்தியர்மலை - #மணிமுத்தாறு சுற்றுவட்டப் பகுதிகளில் தற்போழுதும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #பாபநாசம் ,#அம்பாசமுத்திரம் பகுதிகளிலும் மழை மேகங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன நெல்லை ,குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக #மணிமுத்தாறு அணை பகுதியில் கிட்டத்தட்ட 286 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சிறு சிறு மழை மேகங்கள் நுழைந்து அவ்வப்பொழுது அப்பகுதிகளில் சில நிமிட மழைபொழைவை ஏற்படுத்தி வருகின்றன சற்று முன்பு #சென்னை மாநகரின் வடக்கு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் புறநகர் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது #தண்டையார்பேட்டை ,#புழல்ஏறி மற்றும் #பேரம்பாக்கம் அருகே உள்ள பகுதிகளிலும் சிறு சிறு மழை மேகங்கள் முன்பு பதிவாகி வந்ததன இன்றும் தமிழக உள் ,மேற்கு ,மேற்கு உள் ,கடலோர ,தென் மற்றும் தென் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.தற்பொழுது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குமரிக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது இன்று அது வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.குறிப்பாக மதுரை ,சிவகங்கை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரளவு வலுவான மழை பதிவாகலாம்.

03-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில்

#புதுச்சேரி மாநிலம்

#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 62 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 20 மி.மீ

#திருநெல்வேலி மாவட்டம்  :

#மணிமுத்தாறு (நெல்லை மாவட்டம் ) - 286 மி.மீ
#பாபநாசம் (நெல்லை மாவட்டம் ) -160 மி.மீ
#சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம் ) -60 மி.மீ 
#நாங்குநேரி (நெல்லை மாவட்டம் ) -57 மி.மீ
#ராதாபுரம் (நெல்லை மாவட்டம் ) -40 மி.மீ
#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) -40 மி.மீ
#சங்கரன்கோயில் (நெல்லை மாவட்டம் ) -32 மி.மீ 
#அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம் ) -31 மி.மீ
#தென்காசி (நெல்லை மாவட்டம் ) -22 மி.மீ
#பாளையம்கோட்டை (நெல்லை மாவட்டம் ) -11 மி.மீ
#ஆயிக்குடி (நெல்லை மாவட்டம் ) -10 மி.மீ
#திருநெல்வேலி (நெல்லை மாவட்டம் ) -10 மி.மீ 

#தூத்துக்குடி மாவட்டம் :

#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 219 மி.மீ
#குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 195 மி.மீ
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 112 மி.மீ
#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 78 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 70 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 70 மி.மீ
#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 62 மி.மீ
#தூத்துக்குடி துறைமுகம் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ 
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 45 மி.மீ
#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 19 மி.மீ
#கடலக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
#கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ 


#கன்னியாகுமரி மாவட்டம்

#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 61 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 51 மி.மீ
#சுரலகோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 51 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 49 மி.மீ
#புதன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 46 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 45 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 44 மி.மீ
#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 32 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 31 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 29 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 28 மி.மீ
#மயிலாடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 21 மி.மீ

#திருவாரூர் மாவட்டம்

#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 75 மி.மீ
#நன்னிலம்  (திருவாரூர் மாவட்டம் ) - 65 மி.மீ
#வலங்கைமான்  (திருவாரூர் மாவட்டம் ) - 62 மி.மீ
#கொரடாச்சேரி  (திருவாரூர் மாவட்டம் ) - 47 மி.மீ
#திருவாரூர்  (திருவாரூர் மாவட்டம் ) - 45 மி.மீ
#குடவாசல்  (திருவாரூர் மாவட்டம் ) - 44 மி.மீ
#மன்னார்குடி  (திருவாரூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#முத்துப்பேட்டை  (திருவாரூர் மாவட்டம் ) - 20 மி.மீ

#தஞ்சாவூர் மாவட்டம்
------------------------------------------------

#அணைக்கரை (தஞ்சாவூர் மாவட்டம்) - 78 மி.மீ
#மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம்) - 56 மி.மீ
#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 51 மி.மீ
#மடுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 44 மி.மீ
#வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 40 மி.மீ
#குருங்குளம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 40 மி.மீ
#பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 38 மி.மீ
#வெட்டிகாடு (தஞ்சாவூர் மாவட்டம்) - 31 மி.மீ
#பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 30 மி.மீ
#திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர் மாவட்டம்) - 29 மி.மீ
#திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம்) - 27 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) - 23 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 10 மி.மீ

தஞ்சாவூர் ,திருவாரூர் ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,நெல்லை மாவட்டங்களை தவிர்த்து தமிழகாதில் 60 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.

#வடக்குத்து (கடலூர் மாவட்டம் ) - 99 மி.மீ
#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 94 மி.மீ
#குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம் ) - 67 மி.மீ
#ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) - 64 மி.மீ

மழை பதிவாகிய அணைத்து பகுதிகளின் நிலவரத்தையம் இங்கு ஒரு சேர பதிவிடுவது சிரமம்.

அடுத்த 24 நேரத்திற்கான மழை வாய்ப்புகளை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


02-11-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

02-11-2018 நேரம் மாலை 4:35 மணி தற்பொழுது மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றளுத்த தாழ்வு நிலையின் அகடு (Trough Of Low) காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் 04-11-2018 ஆகிய நாளை மறுநாள் அது வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக அந்த குறைந்த காற்றளுத்த தாழ்வு நிலையின் அகடு மேற்கு நோக்கி நகரும் பொழுது தூத்துக்குடி ,கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரளவு நல்ல மழை பதிவாகாலாம் நாளை தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.04-11-2018 அல்லது அதற்கு பிறகு தமிழகத்தில் பதிவாகிவரும் மழையின் அளவு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் உட்பட வட தமிழகத்தில் மழையின் அளவு முற்றிலும் குறைய தொடங்கலாம் அவ்வபொழுது ஒரு சில இடங்களில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து மழை பதிவாகலாம்.அதன் நகர்வுகள் தொடர்பாகவும் அன்றன்றைக்கு  மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாகவும் நமது பக்கத்தில் தினமும் பதிவிடுகிறேன்.

தற்பொழுது இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவுகளுக்கு மேற்கே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கலாம் மேலும் 04-11-2018 அல்லது 05-11-2018 தேதிகளின்  வாக்கில் அது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு இலங்கைக்கு கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளலாம் இதன் காரணமாக 06-11-2018 அல்லது 07-11-2018 ஆம் தேதி வாக்கில் தென் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து 08-11-2018 அல்லது 09-11-2018 ஆம் தேதி வாக்கில் இலங்கையின் தெற்கு பகுதிகளை அடைய முற்படலாம் அதன் பின் அது மன்னார்வளைகுடா பகுதிகளை அடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.ஒரு சில மாதிரிகள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து அது வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வரலாம் என்பது போன்ற தகவல்களை வழங்கி வருகின்றன என்னை பொறுத்தமட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்லத் தோன்றுகிறது எதுவாயினும் அடுத்த 2 அல்லது 3 மூன்று நாட்களில் அதன் நகர்வுகள் தொடர்பான உறுதியான தகவல்கள் தெரியவந்துவிடும் .அதன் பின் நமது பக்கத்தில் அது தொடர்பான  என்னுடைய இந்த கருத்தையே  உறுதிப்படுத்துகிறேன்.

மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 1வது கட்டத்தில் வலுவாக உள்ளது நான் கடந்த 25-10-2018 ஆம் தேதியன்று எழுதிய பதிவில் நவம்பர் மாத முதல் வாரத்துக்கு பிறகு மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வரலாம் என குறிப்பிட்டு இருந்தேன் அதன்படி 10-11-2018 (நவம்பர் 10) ஆம் தேதி வாக்கில் மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வலுவுடன் வர வாய்ப்புகள் உள்ளது 10-11-2018 முதல் 16-11-2018 ஆம் தேதி வரையில் அது அதனுடைய 2 வது கட்டத்திலேயே தொடரலாம் 17-11-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3 வது கட்டத்தை 1க்கு குறைவான வீச்சு அளவுடன் அடைய முற்படலாம்  அதுவும் வங்கக்கடல் பகுதியில் மழைக்கு சாதகமான சூழல்களை உருவாக்க வல்லது தான்.அதேசமயம் 09-11-2018 ஆம் தேதி வாக்கில் சுமத்ரா தீவுகளுக்கு கிழக்கே மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி 10-11-2018 அல்லது 11-11-2018 ஆம் தேதிகளின் வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைய வாய்ப்புகள் உள்ளது அதனுடைய அடுத்தகட்ட நகர்வுகளே இந்த பருவமழையின் போக்கை தீர்மானிக்கும் அம்சமாக அமையலாம்.நவம்பர் 14 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை உள்ள நாட்களில் பதிவாகும் மழையே இந்த ஆண்டின் பருவமழை சாதகமா ? பாதகமா ? என்பதனை எடுத்துரைக்கும் விதமாக அமையும்.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

31-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மண் நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது வட கிழக்கு பருவமழை

31-10-2018 நேரம் காலை 10:05 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் மற்றும் ராடார் படங்கள் இன்று காலை 9:50 மணி வாக்கில் பதிவானவை அதன்படி நான் நேற்றைய எனது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு முதல் #சென்னை  மற்றும் #திருவள்ளூர் ,#காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்பொழுது சிறு சிறு மழை மேகங்கள் நுழைந்து தொடர்ந்து அவ்வப்பொழுது மழை பொழிவை ஏற்படுத்தி வருகின்றன இன்றும் இதன் பிறகு இதே நிலையே தொடரும் அவ்வப்பொழுது சில இடங்களில் விட்டு விட்டு அல்லது மழையின் அளவு குறைந்து பின்னர் மீண்டும் அதிகரித்து மழை தொடர்ந்து பதிவாகலாம.இன்றும் நள்ளிரவு மற்றும் 01-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரங்களில் #சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இன்னும் சற்று நேரத்தி #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை மாநகரின் வடக்கு புறநகர் கடலோர பகுதிக உட்பட அநேக கடலோர பகுதிகளிலும் சற்று உவலுவான மழை பதிவாக தொடங்கலாம் மேலும் தற்பொழுது #காரைக்கால் மாவட்டம் அருகிலும் மழை மேகங்கள் குவிய தொடங்கியுள்ளன அடுத்த சில நிமிடங்களில் காரைக்கால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக தொடங்கலாம்.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று வட கடலோர மாவட்டங்களின் அநேக கடலோர பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் தென் கடலோர , தென் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இன்றும் #நெல்லை மற்றும் #குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் நேற்று நள்ளிரவு வாக்கில் #மதுரை மாவட்டம் #மேலூர் மற்றும் #சிவகங்கை மாவட்டம் #திருபுவனம் சுற்றுவட்டப் பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பதிவாகியுள்ளது இன்றும் சிவகங்கை ,விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

முன்பு வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது அடுத்த சில மணி நேரங்களில் முற்றிலும் வலுவிழந்து போக முற்பட்டு வருகிறது இது வலுவிழந்து வருவதன் காரணமாகவும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர முற்பட்டு வருவதன் காரணமாகவும் தற்பொழுது தமிழக கடலோர மாவட்டங்களில் காற்று சாதகமாக விழ தொடங்கியுள்ளது இது வட கிழக்கு பருவமழை தொடங்கியதற்கான அறிகுறி தான் .நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 01-11-2018 ஆகிய நாளை வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம்.01-11-2018 ஆகிய நாளை தற்பொழுது இலங்கைக்கு கிழங்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு இலங்கையில் நிலைகொள்ளலாம் இதன் காரணமாக  கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகலாம் அது மேலும் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலைகொள்ள முற்படும் பட்சத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது 02-11-2018 அன்று அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.அதன் நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகளுடன் இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

31-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவுகளின் நிலவரம்.

#எண்ணூர் AWS (திருவள்ளூர் மாவட்டம் ) - 49 மி.மீ
#DGP அலுவலகம் (சென்னை மாநகர் ) - 48 மி.மீ
#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 47 மி.மீ
#பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 46 மி.மீ
#மேலூர் ARG (மதுரை மாவட்டம் ) - 37 மி.மீ
#சுரலகொடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 35 மி.மீ
#பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி மாவட்டம் ) - 32 மி.மீ 
#புழல் ஏரி  - #செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 31 மி.மீ
#கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 28 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 28 மி.மீ
#அண்ணாபல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 27
#திருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 25 மி.மீ
#சத்தியபாமா பல்கலைக்கழகம்  - #சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 22 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 22 மி.மீ
#மாதவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#பேசிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 17 மி.மீ 
#சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 11 மி.மீ
#தரமணி  (சென்னை மாநகர் ) - 10 மி.மீ
#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ 
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ

மழைக்கான வாய்ப்புகளுடன் இன்று மீண்டும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



01-11-2018 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கலாம் - #யூடு (#YUTU) புயலின் வீரியம்

29-10-2018 நேரம் பிற்பகல் 2:15 மணி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது தற்பொழுது பதிவாகி வரும் நிகழ் நேர செயற்கைகோள் படங்களின் உதவியுடன் அதனை தெளிவாக அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகலாம் தற்பொழுது ஒடிசாவின் #பிரமாப்பூர் (#Brahmapur) க்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று மேலும் வட -வட மேற்கு திசையில் நகர்ந்து 30-10-2018 ஆகிய நாளை காலை ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip) நகரின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் பின்னர் அது மேலும் வடக்கு  திசையில் நகர தொடங்கி ராஜ்நகர் உட்பட ஒடிசா மாநிலத்தின் பல கடலோர பகுதிகளிலும் நல்ல வலுவான மழை பொழிவை ஏற்படுத்தி ஒடிசா மாநிலம் #பாலசோர் அருகே உள்ள கடலோர பகுதிகளில் 31-10-2018 ஆகிய நாளை மறுநாள் கரையை கடக்க முற்படலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் நான் முன்பு பதிவிட்டு  இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது இலங்கைக்கு அருகே கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை வட கடலோர மாவட்டங்களில் அங்கங்கே ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 ஆகிய நாளை மறுநாள் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 முதல் 02-11-2018 வரை உள்ள 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளை வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வானிலை ஆய்வு மையத்திடன் இருந்து வெளியாகலாம்.

29-10-2018 நேற்று ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த #யூடு (#YUTU) சூறாவளியானது தற்பொழுது ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலு குறைந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதிகளை நெருங்க முற்பட்டு வருகிறது.மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை அந்த #யூடு (#YUTU) சூறாவளியின் மையப்பகுதியானது #பலானன் (#Palanan)  நகரின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம் மேலும் #Tuguegaroa ,#ilagan , #Santiago , #Baggao , #Appari , #Santaana, #Dilasag , #Kabugao,#Baguio , #candon , #vigan , #Laoag மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #லூசன் (#LUZON) மாகாணத்தின் அநேக வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் மிக மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இந்த 2018 ஆம் ஆண்டில் இதுவரையில் நிகழ்ந்தேறிய இயற்கை பேரிடர்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய பட்டியல்கள் வரிசையில் இந்த #யூடு (#YUTU) வுக்கும்  கண்டிப்பாக இடம் இருக்கும்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பிலிப்பைன்ஸ் வடக்கு லூசன் மாகாணத்தை அச்சுறுத்தும் யூடு (YUTU ) புயல் - தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை எப்போது தொடங்கலாம் ?

28-10-2018 நேரம் பிரிப்பகல் 2:10 மணி நான் இதற்கு முந்தைய எனது பதிவுகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது அணைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக அரங்கேறி வருகின்றன.அந்த பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல 29-10-2018 ஆகிய நாளை மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இதன் காரணமாக 29-10-2018 ஆகிய நாளை மாலை முதல் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் 30-10-2018 அன்று நள்ளிரவு அல்லது  31-10-2018 அன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip ) அருகே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் குறிப்பாக #தம்ரா (#Dhamra) , #ராஜ்நகர் (#Rajnagar) அருகே உள்ள கடலோர பகுதிகளில் அது கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசாவில் கரையை கடந்து அதன் தாக்கம் குறைய தொடங்கியதும் முன்பு நான் பதிவிட்டு இருந்தது போல தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே நிலைகொள்ள முற்படலாம் இதன் காரணமாக 30-10-2018 அன்று மாலை அல்லது நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் அதக்ரு மறுநாள் ஆன 31-10-2018 ஆம் தேதி அன்று திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,புதுச்சேரி ,கடலூர் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.31-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நவம்பர் மாத முதல் வார நாட்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

28-10-2018 கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த 5 ஆம் வகை மிக சக்திவாய்ந்த சூறாவளியான #யூடு (#YUTU) வானது தற்பொழுது ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணமான #லூசன் (#LUZON) இன் வட கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான #TUGUEGARAO வுக்கு கிழக்கே மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக அது நிலைகொண்டிருக்கும் கடல் பகுதிகளில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 240 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் கிழக்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதியான #Palanan , #Divlacan ,#Dinapigue அருகே கரையை கடக்க முற்படலாம் மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அப்பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ க்கு அதிகமான அளவு காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் #MANGHUT போல அல்லாமல் வடக்கு  #லூசன் (#LUZON)  மாகாணத்தின் அநேக இடங்களிலும் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை என ஒரு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தகூடியதாக இருக்கலாம்.இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் இதுவரையில் பிலிப்பைன்ஸ் சந்தித்த இயற்கை பேரழிவுகளில் இது மறக்குமுடியாததாக கூட பதிவாகி விடலாம்.#Santiago , Candon , #Laoag , #Aparri , #Baguio, #calayan என அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் இது பலத்த சேதத்தை உண்டு பண்ணலாம்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


25-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-10-2018 நேரம் இரவு 10:10 மணி தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்ச்சி நிலவி வருகிறது அதே சமயம் நேற்று முன்தினம் கம்போடியா நாட்டுக்கு தெற்கே தாய்லாந்து வளைகுடா பகுதிகளுக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்பொழுது தாய்லாந்து வளைகுடா பகுதிகளில் ஒரு Trough ஆக நிலைகொண்டுள்ளது அதாவது அது ஒரு முலு சுழற்சியாக அல்லாத குறைந்த அழுத்தம் நிலவும் பகுதியை குறிக்கிறது மலாய கடலோர பகுதிகளை கடந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் அதவாது  26-10-2018 ஆகிய நாளை அது வங்கக்கடல் பகுதிக்கு வரலாம் மேலும்  28-10-2018 அல்லது 29-10-2018 ஆம் தேதி வாக்கில் அது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒடிசா மற்றும் மேற்குவங்க பகுதிகளை நெருங்க முற்பட்டு வங்கதேசம் அருகே கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளது அதன் பின்னர் அதனுடைய தாக்கம் முற்றிலும் குறைந்த பிறகு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர முற்படலாம் இதன் காரணமாக 31-10-2018 அல்லது 01-11-2018 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவை அனைத்தும் தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சி மற்றும் உருவாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டது.இந்த ஆண்டு இதுவரையில் இரண்டு முறை வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் சாதகமான சூழல்கள் உருவாக வில்லையே அதைப்போன்று இம்முறையும் நடந்து விடுமா ? என்கிற கேள்வியை நீங்கள் முன் வைப்பீர்களானால் அதற்கான என்னுடைய பதில் இயற்கையை யாரும் இயக்கவும் முடியாது தடுக்கவும் முடியாது அதன் வழியை கட்டுப்படுத்துவம் இயலாது என்பதாக மட்டும் தான் இருக்க முடியும்.சாதகமான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் காத்திருப்பதே சிறந்தது என நான் கருதுகிறேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நான் இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 26-10-2018 ஆகிய நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டியுள்ள ஒரு சில உள் மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம் குறிப்பாக பகல் ,மாலை மற்றும் இரவு நேரங்களில் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் இன்றே காரைக்கால் ,நாகப்பட்டினம் உட்பட வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் வட கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரித்து இருந்ததை உணர முடிந்தது கடலோர மாவட்டங்கள் தவிர்த்து அரியலூர் ,தஞ்சை ,திருச்சி உள்ளிட்ட உள் மாவட்ட பகுதிகளிலும் வட கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரிப்பு அதிகமாக உணரப்படலாம்.காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அடுத்த 3 அல்லது 4 நாட்களில் அதவாது 26-10-2018 முதல் 29-10-2018 வரையில் அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.தற்பொழுது பதிவிட்டு வருவதை போலவே அன்றன்றைக்கான மழைக்கான வாய்ப்புகளை தினமும் பதிவிடுகிறேன் மேலும் அடுத்த வரக்கூடிய 4 முதல் 5 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்க கூடும் மணிக்கு  35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும்.

எல் -நினோ தெற்கு அலைவு (ENSO) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான (Neutral Phase)  கட்டத்தில் உள்ளது ஆனபோதும் நினோ 1+2 பகுதியை தவிர்த்து  தற்போது நினோ 3, நினோ 4 ,நினோ 3.4 என பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பசிபிக் கடல் பரப்பின் பெரும்பாலான இடங்களிலும் அதன் இயல்பான சராசரி அளவுடன் ஒப்பிடுகையில் கடல் பரப்பு வெப்பநிலையானது 0.5° C க்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளது.குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகே அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான சராசரி அளவை  விட தற்போது 0.9° C அதிகரித்துள்ளது.அதே போல நினோ 3 பகுதியில் 1.0° C ,நினோ 4 பகுதியில் 0.9° C மற்றும் நினோ 1+2 பகுதியில் 0.3° C என்கிற அளவில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது அடுத்த 2 மாதங்களில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக 70% சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுற்றுசூழல் மற்றும் முன் அறிவிப்பு மையம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேடன் - ஜூலியன் அலைவு (#MJO) ஆனது தற்போது அதன் 8 வது கட்டத்தில் உள்ளது 1 க்கும் குறைவான வீச்சு அளவை கொண்டுள்ளது அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதனை வீச்சு அளவு அதிகரித்து அதன் 8 ஆம் கட்டத்திலேயே வலுவடையலாம் பின்னர் அடுத்து வரக்கூடிய வாரத்தில் அது 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் அதன் 1 வது கட்டத்துக்கு நகர்ந்து வரலாம் மேலும் நவம்பர் முதல் வார இறுதியில் அல்லது இரண்டாவது வாரத்தில் அதாவது 07-11-2018 அல்லது 08-11-2018  ஆம் தேதி வாக்கில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் அது அதன் 2 வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளது.இது நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் பருவமழைக்கு மிக சாதகமான ஒன்றாக அமையலாம்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

25-10-2018 நேரம் காலை 10:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்கள் இன்று காலை 10:00 மணி வாக்கில் பதிவானவை நேற்று இலங்கையில் நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இதென்ன மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் தாக்கத்தால் தென்மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள அந்த மேலடுக்கு சுழற்சியானது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுதும் நாகை மாவட்டம் #கோடியக்கரை பகுதிக்கு தெற்கே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வருகின்றன மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.25-10-2018 ஆகிய இன்றும் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்கள் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,விருதுநகர்,மதுரை  மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் வலுவான மழையை எதிர்பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.


25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 98 மி.மீ
#திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 87 மி.மீ 
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 84 மி.மீ
#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ 
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -63 மி.மீ
#தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 58 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ
#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 40 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் )- 35 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 33 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் )- 31 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 30 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ 
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 16 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#விளாத்திகுளம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் )  - 9 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் )  - 8 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்

22-10-2018 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த மன்னார் வளைகுடா பகுதிகளில் #ராமேஸ்வரத்துக்கு மேற்கே இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது #தூத்துக்குடி க்கு மேற்கே ராமேஸ்வரத்துக்கு தென் கிழக்கே இலங்கையின் #மன்னார் பகுதிக்கு தெற்கே இலங்கைக்கு அருகே மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது மேலும் நேற்று நான் பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரையிலும் #காரைக்கால் மற்றும் #நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின இன்று காலை வலுவான மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தி வந்தன #காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் சற்று முன்பு #பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்தன அவை மேலும் நகர்ந்து நாகை மாவட்டத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அங்கங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தலாம் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் கிழக்கு நோக்கி நகர முற்படும் பட்சத்தில் மீண்டும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம்.

22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 28 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 21 மி.மீ

22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் நிலவரம்.

#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 90 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 86 மி.மீ
#கொள்ளிடம் - #அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 81 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -70 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 66 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 65 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 65 மி.மீ
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ
#சித்தாறு  (கன்னியாகுமரி மாவட்டம் ) -56 மி.மீ
#தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 56 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 48 மி.மீ
#மணிமுத்தாறு  (திருநெல்வேலி மாவட்டம் ) - 35 மி.மீ
#செங்கோட்டை  (திருநெல்வேலி மாவட்டம் ) - 34மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 33 மி.மீ 
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -32 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) -31 மி.மீ
#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 27 மி.மீ
#தொண்டி (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
#கீரிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#வலங்கைமான் (தஞ்சாவூர் மாவட்டம் ) -20 மி.மீ
#நாங்குநேரி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) -20 மி.மீ
#திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ
#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#அம்பாசமுத்திரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ
#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -17 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#இளையான்குடி (சிவகங்கை மாவட்டம் ) -15 மி.மீ
#ராதாபுரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#விழுப்புரம்(விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ 



அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...