தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
வேலை வாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை வாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி மாநிலத்தில் சுருக்கெழுத்தாளர் (Stenographer Grade- II ) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

புதுச்சேரி அரசின் அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துறை சார்பாக சுருக்கெழுத்தாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 12/01/2016 அன்று வெளியாகியுள்ளது அதன்படி 41 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான தகுதில் கீழே.
புதுவை யூனியன் பிரதேசத்தில் குடியுரிமை உள்ளவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மேல்நிலைக்கல்வியில்  தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.

பணி  : சுருக்கெழுத்தாளர் Grade -I I (Stenographer Grade-II)

நிரப்பட உள்ள பணியிடங்கள் : 41

கல்வி தகுதி  : மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  ( A Pass in H.S.C (+2 ) or its equivalent from a recognized board or university ).

தொழில்நுட்ப தகுதி : A pass  in Stenography in English in Lower Grade.A pass  in Typewriting in Tamil or Malayalam or Telugu in Lower Grade and A pass in Typewriting in English in Higher Grade.

வயது வரம்பு : 18 - 32  as on 05/02/2016.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 05/02/2016.

 
 மேலும் விபரங்களுக்கு http://dpar.puducherry.gov.in/Exam/Recruitment/Steno_Notification.pdf


பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் பணியிடத்திற்கான அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் சுரக்குடியில் இயங்கிவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி (PKIET) மற்றும் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவரும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி(PEC ) ஆகிய இரண்டு கல்லோரிகளுக்கும் முதல்வர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேர்க்கப்படுகிறது.


பணியின் பெயர் : கல்லூரி முதல்வர் (Principle )

காலி பணியிட எண்ணிக்கை : 02 (Perunthalaivar Kamarajar Institute of Engineering and Technology - 01 , Pondicherry Engineering College -01)

சம்பள அளவு : ரூபாய் 37,400  - 67,000 + கல்வி தர ஊதியம் ரூபாய் 10,000 +சிறப்பு கொடுப்பனவு ரூபாய் 3,000.

கல்வி தகுதி : (1) B.E / B.Tech மற்றும் ME / M.Tech முதல் தரத்தில் (First Class) பட்டயம் பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் . மற்றும் 
              (2) Ph.D அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
              (3)குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி /அல்லது தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்துடன் 3 ஆண்டுகளாவது பேராசிரியர் அளவிளான பணிபுரிந்தவராக இருத்தல் அவசியம்  (அல்லது ) குறைந்த பட்சம் 13 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி /அல்லது தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்தஅனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

கடைசி நாள் : 20/01/2016

 மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு     

http://dhte.puducherry.gov.in/download/rec/PRINCIPAL%20NOTIFICATION.pdf
 

ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாஹியில் வேலை வாய்ப்பு

ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி 
சாலக்கரா 
புதிய மாஹி - 673 311.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பகுதியான மாஹி நகரில் ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உள்ள காலிப்  பணியிடங்கள் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படியில் நிரப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பின்படி ஒரு இணைப்பேராசிரியர் ,ஒரு துணை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவி நர்சிங் கண்காணிப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.இதைப்போன்று ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக உதவியாளர் ,பொறியாளர் உள்ளிட்ட 39 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும் விபரங்களை பெற http://www.rgamc.in/

புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாடு துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாடு துறையில் 53 நூலகத் தகவல் உதவியாளர் (Library Information Assistant ) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்று இணையத்தில் வெளியானது.

புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை உள்ளவராக இருந்து நூலக தகவல் அறிவியலில் பட்டம் பெற்றவராக இருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.அந்த அறிவிப்பினை பற்றிய குறுந்தகவல் பின்வருமாறு.


பணி  : நூலகத் தகவல் உதவியாளர் (Library Information Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை :53.

ஊதிய விகிதம் : ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27/01/2016.

காரைக்காலில் மேல் குறிப்பிட்ட தகுதியுடன் யாரேனும் இருந்தால் கண்டிப்பாக விண்ணப்பியுங்கள்.நிறைய இளைஞர்கள் காரைக்காலில் இது என்ன 9,300 ரூபாய் சம்பளமா என்று விட்டு விடுகிறார்கள்.அது சம்பளம் அல்ல ஆறாவது ஊதிய குழுவின் படி உருவாக்கப்பட்ட சம்பள விகிதம்.( அகவிலை படி 119%  ,போக்குவரத்து படி ரூபாய் 3,200 மற்றும் 10% வீட்டு வாடகை படியுடன் சேர்த்து தொடக்கத்திலயே ரூபாய் 34,115 சம்பளமாக பெறுவீர்கள் )
ஏழாவது ஊதியக்குழு வெளியானால் இன்னும் உங்கள் சம்பளம் உயர வாய்ப்பு உள்ளது.அதனால் தகுதியுடைய இளைஞர்கள் விண்ணபிக்க தவறி விடாதீர்கள்.உங்கள் நண்பர்கள் அல்ல உறவினர்கள் இருந்தால் அவர்களிடமும் கூறுங்கள்.மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் எங்களின் இணையதளத்தில் தொடர்பு கொண்டால் எங்களால் முடிந்த உதவியை செய்வோம்.

(இது என்ன சென்ற முறை யு.டி.சி க்கு கூடத்தான் 504 போஸ்டுகள் என்று நம்பி வின்னப்பித்தோம்.ஆனால் திட்ட திட்ட புதுச்சேரியிலேயே 450 பேருக்கு வழங்கிவிட்டார்களே.இப்பொழுது இதிலும் 45 முதல் 50 பணியிடம் புதுச்சேரிக்கு தானா பிராந்திய இட ஒதிக்கிடூ என்பது கிடையாதா என்று நீங்கள் கேட்க விரும்புவது எண் காதில் விழுகிறது)

மேலும் தகவல்களுக்கு சொடுக்கவும்

காரைக்கால் NITயில் உதவி பேராசிரியர் மற்றும் பிற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

காரைக்கால் நகரில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கிக் கொண்டு இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி புதுச்சேரி (NIT Puducherry )யில் உதவி பேராசிரியர்கள் உட்பட பல காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு இந்த மாதம் 8ஆம் நாள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.அதண்ப்படி கணினி அறிவியல் ,மின் மற்றும் மின்னணு,இயந்திரவியல் போன்ற துறைகளில் தலா ஒரு உதவிப்பேராசிரியர் மற்றும் கற்பித்தல் இல்லாத துறைகளில் பதிவாளர் ,துணை பதிவாளர் ,நூலக உதிவியாளர் ,கணக்காளர் ,நிர்வாக பொறியாளர் ,இளநிலை உதவியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)/  இளநிலை பொறியாளர் (மின்னியல் ) போன்ற  பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

 NIT என்பது நம் காரைக்காலின் தேசிய அளவிலான அடையாளங்களில் ஒண்று.இந்தியாவில் உள்ள 30 NIT களில் ஒண்று காரைக்காலில் இருக்கிறது என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.வழக்கமாக அங்கு காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவது நம் காரைக்காலில் இருக்கும் இளைங்கர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.அந்த நிலை மாறி இந்த முறை காரைக்காலில் இருந்து அதிக மக்கள் பணியில் அமர்வார்கள் என்று நம்புவோம்.

NIT யின் அந்த அறிவிப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC) காரைக்காலில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

காரைக்கால் மாவட்டத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (OIL AND NATURAL GAS CORPORATION LIMITED) கீழ்க்காணும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் செய்தித்தாளில் இன்று வெளியானது.

 1. Technical Assistant grade III (Chemistry) : 03 Posts.
 2. Assistant Rigman(Drilling):08 Posts.
 3. Assistant Technician(Mechanical):03 Posts.
 4. Assistant Technician(Production):05 Posts.
 5. Security Supervisor:02 Posts.
 6. Junior Assistant Rigman(Drilling):57 Posts.
 7. Junior Assistant Technician(Diesel):05 Posts.
 8. Junior Assistant Technician(Fitting):03 Posts.
 9. Junior Assistant Technician(Welding):05 Posts.
 10. Junior Assistant(Material Management):02 Posts.
 11. Junior Assistant(Accounts):02 Posts.
 12. Junior Security Supervisor:01Post.
 13. Junior Motor Vehicle Driver(HV/Winch):06 Posts.
 14. Junior Fireman :07 Posts.
மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை (Department Of School Education Puducherry):192 பெண் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசு
Directorate of School Education

புதுச்சேரி அரசின் பள்ளிகளில் 192 Conducterss (குரூப்-c )யாக பணிபுரிய பெண் பணியாளர்கள் தேவை.

போஸ்டிங் Mode : Direct Recruitment .


பணி : Condectress .
சம்பளம் :ரூ 5,200 - 20,200 + த .ஊ  ரூ 1,800.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :27/10/2015

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
புதுச்சேரி நில ஆவணங்கள் இயக்குனரகத்தில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் Directorate of Survey and Land recordsஇல் 16 Field Surveyor பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.


ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் : 14/10/2015

மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்

அறிவிப்பு 

புதுச்சேரி அரசு 503 எழுத்தர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

புதுச்சேரி  அரசின்  DEPARTMENT OF PERSONNEL AND ADMINISTRATIVE REFORMS கீழ் 503 மேல் பிரிவு எழுத்தர்(Upper Division Clerk )  பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு http://dpar.puducherry.gov.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியானது.ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள்  : 14/08/2015
ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள்  : 14/08/2015


ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள்  : 14/08/2015

ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள் : 12/08/2015
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள்:  11/09/2015.

 மேலும் வபரங்களை கீழே சொடுக்கவும் 

அறிவிப்பு 

புதுவை பாரதியார் கிராம வங்கியில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி அரசு ,இந்திய அரசு மற்றும் இந்தியன் வங்கி இணைந்து  புதுச்சேரி மாநிலத்தில் இயக்கி வரும் புதுவை பாரதியார் கிராம வங்கியில் அலுவலர் (officer ) மற்றும் எழுத்தர்(clerk) /காசாளர் (Cashier ) உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேர்க்கப்படுவதாகா இண்று தினத்தந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள்  : 14/08/2015
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :28/08/2015

மேலும் வபரங்களை www.puduvaibharathiargramabank.in என்ற இணைய தளத்தில் பெறலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...