கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதிப் பற்றாக்குறை மற்றும் வருமானக் குறைவை காரணம் காட்டி புதுச்சேரி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே புதுச்சேரி விமான நிலையத்தில் விமானங்களை இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி பலமுறை டில்லிக்கு விரைந்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் கடந்த ஜூலை மாதம் முதல் புதுச்சேரியில் விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் புதுவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தின்தோறும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது மேலும் 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த விமான சேவைக்கு கட்டணமாக ₹ 2,800 வசூலிக்கப்படும் எனவும் அப்பொழுது கூறப்பட்டு வந்தது.இதனிடையே நேற்று 16-08-2017 அன்று புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டது .முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து இந்த விமான சேவையை தொடக்கிவைத்தார் மேலும் இந்த விமான போக்குவரத்துக்கு நபர் ஒன்றுக்கு பயணக்கட்டணமாக ₹2449 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.