தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
25-10-2018 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
25-10-2018 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-10-2018 நேரம் இரவு 10:10 மணி தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்ச்சி நிலவி வருகிறது அதே சமயம் நேற்று முன்தினம் கம்போடியா நாட்டுக்கு தெற்கே தாய்லாந்து வளைகுடா பகுதிகளுக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்பொழுது தாய்லாந்து வளைகுடா பகுதிகளில் ஒரு Trough ஆக நிலைகொண்டுள்ளது அதாவது அது ஒரு முலு சுழற்சியாக அல்லாத குறைந்த அழுத்தம் நிலவும் பகுதியை குறிக்கிறது மலாய கடலோர பகுதிகளை கடந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் அதவாது  26-10-2018 ஆகிய நாளை அது வங்கக்கடல் பகுதிக்கு வரலாம் மேலும்  28-10-2018 அல்லது 29-10-2018 ஆம் தேதி வாக்கில் அது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒடிசா மற்றும் மேற்குவங்க பகுதிகளை நெருங்க முற்பட்டு வங்கதேசம் அருகே கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளது அதன் பின்னர் அதனுடைய தாக்கம் முற்றிலும் குறைந்த பிறகு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர முற்படலாம் இதன் காரணமாக 31-10-2018 அல்லது 01-11-2018 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவை அனைத்தும் தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சி மற்றும் உருவாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டது.இந்த ஆண்டு இதுவரையில் இரண்டு முறை வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் சாதகமான சூழல்கள் உருவாக வில்லையே அதைப்போன்று இம்முறையும் நடந்து விடுமா ? என்கிற கேள்வியை நீங்கள் முன் வைப்பீர்களானால் அதற்கான என்னுடைய பதில் இயற்கையை யாரும் இயக்கவும் முடியாது தடுக்கவும் முடியாது அதன் வழியை கட்டுப்படுத்துவம் இயலாது என்பதாக மட்டும் தான் இருக்க முடியும்.சாதகமான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் காத்திருப்பதே சிறந்தது என நான் கருதுகிறேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நான் இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 26-10-2018 ஆகிய நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டியுள்ள ஒரு சில உள் மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம் குறிப்பாக பகல் ,மாலை மற்றும் இரவு நேரங்களில் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் இன்றே காரைக்கால் ,நாகப்பட்டினம் உட்பட வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் வட கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரித்து இருந்ததை உணர முடிந்தது கடலோர மாவட்டங்கள் தவிர்த்து அரியலூர் ,தஞ்சை ,திருச்சி உள்ளிட்ட உள் மாவட்ட பகுதிகளிலும் வட கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரிப்பு அதிகமாக உணரப்படலாம்.காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அடுத்த 3 அல்லது 4 நாட்களில் அதவாது 26-10-2018 முதல் 29-10-2018 வரையில் அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.தற்பொழுது பதிவிட்டு வருவதை போலவே அன்றன்றைக்கான மழைக்கான வாய்ப்புகளை தினமும் பதிவிடுகிறேன் மேலும் அடுத்த வரக்கூடிய 4 முதல் 5 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்க கூடும் மணிக்கு  35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும்.

எல் -நினோ தெற்கு அலைவு (ENSO) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான (Neutral Phase)  கட்டத்தில் உள்ளது ஆனபோதும் நினோ 1+2 பகுதியை தவிர்த்து  தற்போது நினோ 3, நினோ 4 ,நினோ 3.4 என பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பசிபிக் கடல் பரப்பின் பெரும்பாலான இடங்களிலும் அதன் இயல்பான சராசரி அளவுடன் ஒப்பிடுகையில் கடல் பரப்பு வெப்பநிலையானது 0.5° C க்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளது.குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகே அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான சராசரி அளவை  விட தற்போது 0.9° C அதிகரித்துள்ளது.அதே போல நினோ 3 பகுதியில் 1.0° C ,நினோ 4 பகுதியில் 0.9° C மற்றும் நினோ 1+2 பகுதியில் 0.3° C என்கிற அளவில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது அடுத்த 2 மாதங்களில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக 70% சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுற்றுசூழல் மற்றும் முன் அறிவிப்பு மையம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேடன் - ஜூலியன் அலைவு (#MJO) ஆனது தற்போது அதன் 8 வது கட்டத்தில் உள்ளது 1 க்கும் குறைவான வீச்சு அளவை கொண்டுள்ளது அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதனை வீச்சு அளவு அதிகரித்து அதன் 8 ஆம் கட்டத்திலேயே வலுவடையலாம் பின்னர் அடுத்து வரக்கூடிய வாரத்தில் அது 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் அதன் 1 வது கட்டத்துக்கு நகர்ந்து வரலாம் மேலும் நவம்பர் முதல் வார இறுதியில் அல்லது இரண்டாவது வாரத்தில் அதாவது 07-11-2018 அல்லது 08-11-2018  ஆம் தேதி வாக்கில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் அது அதன் 2 வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளது.இது நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் பருவமழைக்கு மிக சாதகமான ஒன்றாக அமையலாம்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

25-10-2018 நேரம் காலை 10:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்கள் இன்று காலை 10:00 மணி வாக்கில் பதிவானவை நேற்று இலங்கையில் நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இதென்ன மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் தாக்கத்தால் தென்மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள அந்த மேலடுக்கு சுழற்சியானது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுதும் நாகை மாவட்டம் #கோடியக்கரை பகுதிக்கு தெற்கே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வருகின்றன மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.25-10-2018 ஆகிய இன்றும் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்கள் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,விருதுநகர்,மதுரை  மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் வலுவான மழையை எதிர்பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.


25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 98 மி.மீ
#திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 87 மி.மீ 
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 84 மி.மீ
#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ 
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -63 மி.மீ
#தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 58 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ
#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 40 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் )- 35 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 33 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் )- 31 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 30 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ 
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 16 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#விளாத்திகுளம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் )  - 9 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் )  - 8 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...