15-11-2018 நேரம் பிற்பகல் 2:25 மணி தற்பொழுது அந்த தீவிர புயலான #கஜா (#GAJA) கிட்டத்தட்ட #காரைக்கால் நகரப்பகுதிக்கு 200 கி.மீ கிழக்கே நிலைக் கொண்டுள்ளது.அதனை காரைக்கால் வானிலை ஆய்வு மைய ராடார் படங்களின் வாயிலாக தெளிவாக அறியமுடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பதிவாக தொடங்கலாம் குறிப்பாக அந்த புயல் #நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளை நெருங்குகையில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் நகர பகுதிகள் உட்பட அம்மாவட்டங்களின் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகலாம் மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அந்த தீவிர புயலானது மேலும் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று 15-11-2018 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 16-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரத்தில் #காரைக்கால் - #கோடியக்கரை இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் மேலும் நான் முன்பு தெரிவித்து இருந்தது போல அந்த தீவிர புயலானது #வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அதாவது இன்று இரவு அல்லது நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#அரியலூர் ,#பெரம்பலூர் ,#திருச்சி ,#தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் #புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஆங்காங்கே வலுவான காற்றுடன் கூடிய மழை பதிவாகலாம்.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதாவது #தலைஞானியறு உட்பட #வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சமயங்களில் 120 கி.மீ வரையிலும் காற்று வேகம் எடுக்கலாம் #காரைக்கால் ,#நாகபட்டினம் ,#திருவாரூர் நகர பகுதிகளில் உட்பட அம்மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட ஆங்காங்கே இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.
#புதுச்சேரி மற்றும் #கடலூர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசலாம்.மேலும் #சீர்காழி ,#பரங்கிப்பேட்டை ,#பிச்சாவரம் ,#சிதம்பரம் ,#கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரையில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.
மேலும் அந்த புயல் கரையை கடந்து வலுகுறைந்து #முத்துப்பேட்டை உட்பட #திருவாரூர் ,#புதுக்கோட்டை ,#திண்டுக்கல் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் வழியாக கேரளாவை அடைந்து பின்னர் 16-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 17-11-2018 ஆகிய நாளை மறுநாள் அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் இதன் காரணமாக முன்பு நான் முன்பு பதிவிட்டு இருந்தை போன்று 16-11-2018 ஆகிய நாளை #திருச்சி ,#மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவகங்கை ,#கரூர் ,#வால்பாறை உட்பட #திருப்பூர் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.சில பகுதிகளில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கூட பதிவாகலாம்.இவை தவிர்த்து தமிழக்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் பரவலான மழை நாளை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் அது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து காற்றை தம்வசம் இழுப்பதாலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் இருப்பதாலும் 18-11-2018 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் 20-11-2018 மற்றும் 21-11-2018 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.
அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களை நெருங்குகையில் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்