தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
agriculture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
agriculture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்

புதுச்சேரி மாநிலத்தில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.இந்த இலவச மின்சார திட்டம் நடப்பு மாதமான ஏப்ரல் மாதத்திற்கும் பொருந்தும்.இதனால் சிறு விவசாயிகள் உட்பட 6,871 விவசாயிகள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு ஆண்டு 2017ல் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.இதனால் வங்கிகளில் தங்களுக்கு இருக்கும் விவசாய கடன்களை  ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் புதுச்சேரி அரசு விவசாயம் செய்யும் பொழுது பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடிகர் ஜீ.வி.பிரகாஷின் புதிய தொண்டு நிறுவனம்

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராக வளம் வரும் ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளின் நலனுக்காக புதிய தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க இருக்கிறார்.ஜல்லிக்கட்டு தடை நீக்க போராட்டத்தில் ஈடுபட்டு இளைஞர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று இருக்கும் அவருக்கு இந்த விவசாயிகள் தொண்டு நிறுவன விஷயமும் பொதுமக்களிடையே நல்ல பெயரினை பெற்று தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

இவர் நிஜ வாழ்வில் பிறருக்கு பலனளிக்கும் வகையில் எடுக்கும் நல்ல முடிவுகளைப் போல இனி வரக்கூடிய காலங்களில் நல்ல சமூக வளர்ச்சிக்கான கருத்துடைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என நம்பலாம்.

ஜப்பானில் விவசாயம் செய்யும் செயற்கை மனிதர்கள்

இரண்டாம் உலகப்போரின் பொழுது 1945ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணு குண்டு வீசப்பட்டது அதற்கு பிறகு உலக நாடுகள் "ஜப்பான் இனி புல்,பூண்டு கூட அறுவடை செய்ய முடியாத மலட்டு பூமி என ஏலனம் செய்து வந்தனர்".அந்த உலக நாடுகளின் கேலி பேச்சுகளை உடைத்தெரியும் வகையில் இன்று இயந்திர மனிதர்களைக் கொண்டு விவசாயம் செய்யும் அளவிற்கு முன்னேறிவிட்டது ஜப்பான்.
ஆம்,அதற்காக 4400 ச.மீ அளவிலான ஒரு விவசாய நிலத்தை வடிவமைத்து உள்ளது அது மட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய 98% சதவிகித சுத்திகரிக்கப் பட்ட நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது இதனால் வீணாகக்கூடிய நீரின் அளவு மிகவும் குறைவு.இவை அனைத்துக்கும் காரணம் விவசாயத்திற்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் தான்.

அறிவியலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அந்த வளர்ச்சியை பயன்படுத்தி விவசாயம் செய்து விளைச்சலை அதிகரித்து வருகின்றன.ஆனால் நமது நாட்டிலோ இயற்கையான விவசாய நிலங்களை அழித்து மீதேன் திட்டம்,நியூற்றினொ ஆராய்ச்சி மையம் என்று ஆரம்பித்து அறிவியலில் வளர்ச்சி அடைவதாக கூறிக் கொண்டு இருக்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...