தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
beach லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
beach லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாகூர் கடற்கரையில் அழுகிய நிலையில் கிடக்கும் குதிரையின் சடலம் - காரைக்கால் கடற்கரையில் சில நாட்களுக்கும் முன்பு காலில் ரத்தம் கசிந்து உடல் நலம் குன்றி காணப்பட்ட குதிரையாக இருக்குமோ ? என்று வருந்தும் பொதுமக்கள்

சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் கடற்கரையில் கால்களில் ரத்தம் கசிந்த படி காயங்களுடன் உடல் நலம்  குன்றிய நிலையில் கயிற்றினால் கட்டப்பட்டு உயிருக்கு போராடி நின்று கொண்டிருந்த குதிரையின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி காரைக்கால் மக்களின் கவனத்தை ஈர்த்தது.நமது இணைய தளத்திலும் அந்த குதிரை குறித்து செய்தி வெளியிட்டு இருந்தோம் அதன் பின் அந்த குதிரை திடீரென காணாமல் போய்விட்டது இன்று வரை அந்த குதிரை குறித்து எந்த தகவலும் இல்லை இந்நிலையில் நாகூர் கடற்கரை நுழைவு வாயில் அருகே சில நாட்களுக்கு முன்பு ஒரு குதிரை இறந்த நிலையில் கிடந்துள்ளது மூன்று நாட்கள் ஆகியம் அந்த குதிரையின் உடல் அங்கிருந்து அகற்றப்படாமல் சிதைந்து அழுகிய நிலையில் உள்ளது அதனால் நாகூர் கடற்கரைக்கு தினமும் வருகைதரும் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் மனதளவில் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலை இருந்து வந்தது அது மட்டுமின்றி தற்பொழுது அங்கு அரை கிலோமீட்டர் தூரம் வரை துர் நாற்றம் வீசி வருவதால் சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

நாகூர் கடற்கரையில் குதிரையின் சடலம்


நாகூர் கடற்கரையில் அகற்றப்படாமல் இருக்கும் குதிரையின் சடலத்தால் நாகூர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை தினமும் சந்தித்துவரும் நிலையில்,ஒரு வேலை காரைக்கால் கடற்கரையில் காயங்களை காக்கைகள் கொற்றி திங்க வழியால் துடித்து விதியால் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போன குதிரை இதுவாக இருக்குமோ என்ற சந்தேகம் காரைக்கால் பகுதி மக்களின் மனதில் எழுந்துள்ளது அதனால் காரைக்காலில் இருக்கும் மிருக நல ஆர்வலர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.


நாகூர் கடற்கரை குதிரை சடலத்தின் நேற்றைய நிலை
கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் ஜெல்லி மீன்கள் -தொட வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை

தற்சமயம் காரைக்கால் மற்றும் ஒரு சில தமிழக வட கடலோர பகுதிகளில் கடல் வாழ் உயிரினமான ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றில் சில காரைக்கால் கடற்கரை போன்ற கடலோர பகுதிகளில் கரையொரங்களில் அதிகமாக தென்படுகின்றன.வினோதமான தோற்றத்தில் அது காணப்படுவதால் கடற்கரைக்கு வருகை தரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதை ஒரு அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.சிலர் ஒரு படி மேலே போய் அதை கையில் எடுத்து விளையாட ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் காரைக்கால் மீன்வளத்துறை துணை அதிகாரி அலுவலகத்தில் இருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது அதன்படி தற்பொழுது காரைக்கால் கடல் பகுதிகளில் காணப்படும் கடல் வாழ் உயிரினமான ஜெல்லி மீன்களை யாரும் தொட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது .அந்த மீன்கள் உடல் அரிப்பு ,எரிச்சல் போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.மேலும் தற்பொழுது யாரும் காரைக்கால் கடற்கரையில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
காரைக்கால் கடற்கரையில் குடும்பத்துடன் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்

இந்த ஆண்டு அக்னி வெயிலின் தாக்கத்தால் பகல் நேர  வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மாலை நேரத்தில் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பள்ளி விடுமுறை நாள் என்பதால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இவ்வழியாக செல்லும் பொது மாலை நேரத்தில் காரைக்கால் கடற்கரையில் சிறிது நேரம் இளைப்பாறி ஓய்வெடுத்து செல்கின்றனர்.நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காரைக்கால் கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது.இந்த ஆண்டு இறுதியில் திருநள்ளாறு சனி பகவான் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதால் சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது . அப்படி சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு  வரும் பக்தர்கள் ஒரு நாள் முழுவதும் காரைக்காலை சுற்றியுள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மறுநாள் மாலை காரைக்கால் கடற்கரைக்கு வந்து இயற்கை காற்றை அனுபவித்து மகிழ்கின்றனர்.

காரைக்கால் கடற்கரையில் திடிரென மக்கள் இப்படி அதிக எண்ணிக்கையில் குவிந்து வருவதால் சில இடங்களில் சாலை நெரிசலும் ஏற்படுகின்றது.அதிகரித்து வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சரியாக ஏற்பாடு செய்யப்படாமல் இருப்பதால் மிகுந்த அவதிக்கு உள்ளானதாக சில சுற்றுலாப்பயணிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்துவிட்டும் செல்கின்றனர்.காரைக்கால் கடற்கரையில் பரிதாப குதிரை

கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பகல் நேர வெப்ப நிலையானது  அதிகரித்துக் கொண்டே வருவதால் மாலை நேரங்களில் கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையும் கணிசமாக அளவு அதிகரித்துவருகிறது.பிற கடலோர மாவட்டங்களைப் போல காரைக்கால் கடற்கரையிலும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது காரைக்காலை சார்ந்த மக்கள் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள நாகப்பட்டினம் ,குமபகோணம்,மயிலாடுதுறை போன்ற தமிழக பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் மக்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்து மாலை மற்றும் இரவு நேரங்களை குடும்பத்தோடு சந்தோஷமாக செலவிட்டு செல்கின்றனர்.

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காரைக்கால் கடற்கரை சாலையில் சில நேரங்களில் கூட்ட  நெரிசல்கள்  கூட ஏற்படுகின்றன.அதற்கு முக்கிய காரணம் திருநள்ளாறுக்கு  வரும் பக்தர்கள் பெருந்திரளாக மாலை நேரங்களில் இங்கு வந்து குவிவது தான்.அதேபோல ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மக்களும் குடும்பத்துடன் கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

 அப்படி குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக கடற்கரையை தேடிவரும் மக்களையும் குழந்தைகளையும் மகிழ்விக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.கடற்கரை காற்றை அனுபவித்த படி சுண்டல் ,சாட் ஐட்டங்கள்,ஐஸ்கிரீம் போன்றவற்றை சுவைக்கவும் செய்யலாம்.அதே போல குழந்தைகளை மகிழ்விக்க இராட்டினம் ,ஒட்டக சவாரி ,குதிரை சவாரி மற்றும் பல்வேறு விளையாட்டு பொருட்களை விற்பனை செய்ய பல வகையான வியாபாரிகளும் காரைக்கல் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.


 அப்படி குழந்தைகளை மகிழ்விக்க வியாபாரிகளால் குதிரை சவாரிக்காக பயன்படுத்தப்படும் அந்த குதிரையின் நிலை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது.கடந்த ஒரு மாத காலமாக அதனுடைய கால்களில் ரத்தம் கசிந்துக்கொண்டே இருக்கிறது.நாளுக்குநாள் வெளியாகும் இரத்தத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.தொடர்ந்து அந்த காயத்தில் கடல் மண் புகுந்து வருவதால் அந்த காயம் பெரிதாகிக்கொண்டே வருகிறது .இதைப்பற்றியெல்லாம் அந்த வியாபாரி கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை அவரிடம் அந்த காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டீர்களா என்று கேட்டாலும் சரியான பதிலில்லை.அவன் ஏதோ வியாபாரி பிழைத்துக்கொண்டு போகிறான் நீ ஏன் இதைக் கேட்கிறாய் ? என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அந்த குதிரையின் உண்மை நிலையை நீங்கள் நேரில் பார்த்தால் இப்படி சொல்லமாட்டீர்கள் சில சமயங்களில் அந்த காயத்தை காக்கா போன்ற பறவைகள் கொத்தி செல்கின்றன அப்பொழுது வலி தாங்க முடியாமல் அந்த குதிரை குடிக்கிறது.நமக்கு காலில் அடிபட்டால் ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுப்போம் அந்த குதிரைக்கு அதற்கும் வாய்ப்பு இல்லை.சரியான சிகிச்சையும் ஓய்வும் மட்டுமே அதனுடைய உயிரைக் காப்பாற்றும்.அந்த குதிரையை வைத்து ஒரு சவாரிக்கு 50 ,100 என வசூல் செய்யும் அந்த வியாபாரி இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது.அந்த வியாபாரியை தண்டிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல ஆனால் பரிதாபத்துக்குரிய தனக்கு ஏற்பட்டு இருக்கும் உடல் உபாதையை வெளியே கூட சொல்லக்கூடி முடியாத யாருக்கும் தெரியும் வண்ணம் கண்ணீர் விட்டு அழ முடியாத அந்த குதிரையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.இதோ அந்த குதிரையின் புகைப்படத்தை இந்த பதிவுடன் இணைக்கிறேன்.
இதோ அந்த குதிரை வலிப்பொருத்து வேறு வழியில்லாமல் நிற்கும் காணொளி

பரிதாப குதிரையின் இந்த நிலையினை பார்க்கும் பொழுது காரைக்காலில் மிருகநல அமைப்புகள் என்று ஏதாவது உள்ளனவா என்பதே சந்தேகமாக உள்ளது. இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குதிரையின் துயர் துடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள்.

பூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )

குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில்  மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்பைகளை குப்பைத் தொட்டியை  தேடிச்சென்று போட மறுக்கும் எண்ணத்தாலும் ஏற்படுத்திய சீரழிவுகளை இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளில் பார்த்தோம்.தற்பொழுது நாம் பார்க்க இருக்கும் பகுதி உலகளவில் புகழ் பெற்ற சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பகுதி என்று சொன்னால் அது மிகையாகாது.இந்நேரம் உங்களுக்கே தெரிந்து இருக்கும் அது  பூம்புகார் கடற்கரை தான் என்று. ஆம் இம்முறை நாம் விவாதிக்க இருப்பது பூம்புகார் நகரில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் சீரழிவுகளைப் பற்றித்தான்.

உண்மையான பூம்புகார் நகரம் நாகை மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் கடலுக்கு அடியில் இருப்பதாக நம்பப் படுகிறது.அக்காலத்தே காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்து இருந்ததால் இப்பகுதி காவிரிபூம்பட்டினம் ,புகார், பூம்புகார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.கல்வி,வீரம்,வணிகம்,கலை,பண்பாடு உள்ளிட்ட  பல்வேறு கூறுகளில் சிறந்து விளங்கிய நகரமாக இது இருந்ததாக சங்க இலக்கியங்களில்  குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்நகரம் அக்காலத்தில் சோழநாட்டின் துறைமுகமாக விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நகரம் இப்பொழுது கடலில் முழ்கி இருப்பதாக அறியப்பட்டாலும் 1997ல் பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்று ஆரம்பிக்கப்பட்டது.இந்தியாவில் இருக்கும் ஒரே கடலடி அருங்காட்சியகம் இதுதான் என்ற பெருமை இதற்கு உண்டு.பூம்புகார் நகரின் பெருமையை வெளிக்கொணர கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுதும் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் ஒத்துழைப்பு மற்றும் போதிய நிதி  கிடைக்காததால் அவை அனைத்தும் கைவிடப்பட்டது.

பூம்புகார் என்ற மிகப்பெரிய நகரம் கடலுக்கடியில் எங்கு மூழ்கி உள்ளது என்பதில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும்.பூம்புகார் என்ற ஒரு நகரம் பண்டையகாலத்தில் இருந்தது என்பதனை உலகுக்கு பறைசாற்றும் வகையிலும் சான்றாகவும் இருப்பது தான் தற்போது  பூம்புகார் என்ற பெயரில் இருக்கும் இந்த நகரம்.ஆனால் இந்த நகரின் தற்போதைய நிலை என்ன ? கடற்கரைக்கு செல்லும் பகுதிகள் எங்கும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன அனைத்தும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள்.பூங்கா என்று ஒன்று உண்டு அங்கே எங்கு நோக்கினும் மது பாட்டில்களும் மனித கழிவுகளும் நிறைந்து காணப்படுகின்றன.பூங்காவில் அதிகமாக இருக்கும் செடி எது தெரியுமா சீமைக் கருவேல மரங்கள்தான் .அங்கு இருக்கும் இருக்கைகளில் எல்லாம் இருவர் இருவராக அமர்ந்திருக்கிறார்கள் பொது இடம் என்ற நாகரீகமும் பண்பாடும் அவர்களிடம் துளியுமில்லை அவர்களை பார்த்தால் காதலர்களை போலவும் தெரியவில்லை இன்னுமும் எழுதுவேன் ஆனால் நான் அவர்களிடம் இல்லை என்று கூறிய அதே நாகரீகம் மற்றும் பண்பாடு கருதி இன்னும் எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறேன். உலகெங்கிளும் இருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருகைப்  புரிகிறார்கள் அவர்கள் இந்த அவலத்தை பார்த்தால் நம் நாட்டை பற்றி என்ன நினைப்பார்கள் .நீங்கள் மேலே பார்க்கும் இடம் புகைப்படத்தில் ஓரளவுக்கு அழகாக தெரியலாம் ஆனால் நேரில் அப்படி இருக்காது இதன் அருகே சென்றவுடன்.சிறுநீரின் நாற்றம் உங்கள் மூக்கை துளைக்கும் அந்த படத்தில் உள்ள கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த கிணறு போன்ற அமைப்பு மிக அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது ஆனால் அதனுள் நீர் இல்லை இருப்பது மனித நிறுநீர் மட்டும்தான் அதையும் தாண்டி ஏகப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள்,மதுபாட்டில்கள் என அதனை புகைப்படம் எடுக்க கூட எனக்கு மனம் வரவில்லை.

இதோ தற்போதைய பூம்புகார் நகரில் நான் கண்ட ஒரு சில அவலங்களின் புகைப்படங்கள்.

பூம்புகார் பூங்காநான் எடுத்த புகைப்படங்களில் இன்னும் சில காட்சிகளும் பதிவாகியிருந்தன நாகரீகம் கருதி அவற்றை எல்லாம் நான் பதிவேற்றம் செய்யவில்லை.

பல கோடி ரூபாய் செலவு செய்து அரும்பாடுபட்டு உருவாக்கிய நகரம் இப்படி சிதலமடைந்து காணப்படுவதற்கு காரணம் என்ன அரசியல் போட்டியா ? .பழைய பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியது இந்த புதிய பூம்புகார் நகரம் குப்பைகளில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.இது தான் தற்போதைய பூம்புகார் நகரின் உண்மையான நிலை.

Related Posts Plugin for WordPress, Blogger...