தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
cyclone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cyclone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15-11-2018 காரைக்கால் நகர பகுதிக்கு 200 கி.மீ தொலைவில் கஜா (GAJA) புயல் - எங்கு கரையை கடக்கலாம் ?

15-11-2018 நேரம் பிற்பகல் 2:25 மணி தற்பொழுது அந்த தீவிர புயலான #கஜா (#GAJA) கிட்டத்தட்ட #காரைக்கால் நகரப்பகுதிக்கு 200 கி.மீ கிழக்கே நிலைக் கொண்டுள்ளது.அதனை காரைக்கால் வானிலை ஆய்வு மைய ராடார் படங்களின் வாயிலாக தெளிவாக அறியமுடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பதிவாக தொடங்கலாம் குறிப்பாக அந்த புயல் #நாகை மாவட்டத்தின் கடலோர  பகுதிகளை நெருங்குகையில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் நகர பகுதிகள்  உட்பட அம்மாவட்டங்களின் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகலாம் மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அந்த தீவிர புயலானது மேலும் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று 15-11-2018 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 16-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரத்தில் #காரைக்கால் - #கோடியக்கரை இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் மேலும் நான் முன்பு தெரிவித்து இருந்தது போல அந்த தீவிர புயலானது #வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அதாவது இன்று இரவு அல்லது நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#அரியலூர் ,#பெரம்பலூர் ,#திருச்சி ,#தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் #புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஆங்காங்கே வலுவான காற்றுடன் கூடிய மழை பதிவாகலாம்.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதாவது #தலைஞானியறு உட்பட #வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சமயங்களில் 120 கி.மீ வரையிலும் காற்று வேகம் எடுக்கலாம் #காரைக்கால் ,#நாகபட்டினம் ,#திருவாரூர் நகர பகுதிகளில் உட்பட அம்மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட ஆங்காங்கே இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.#புதுச்சேரி மற்றும் #கடலூர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசலாம்.மேலும் #சீர்காழி ,#பரங்கிப்பேட்டை ,#பிச்சாவரம் ,#சிதம்பரம் ,#கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரையில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.

மேலும் அந்த புயல் கரையை கடந்து வலுகுறைந்து #முத்துப்பேட்டை உட்பட #திருவாரூர் ,#புதுக்கோட்டை ,#திண்டுக்கல் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் வழியாக கேரளாவை அடைந்து பின்னர் 16-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 17-11-2018 ஆகிய நாளை மறுநாள் அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் இதன் காரணமாக முன்பு நான் முன்பு பதிவிட்டு இருந்தை போன்று 16-11-2018 ஆகிய நாளை #திருச்சி ,#மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவகங்கை ,#கரூர் ,#வால்பாறை உட்பட #திருப்பூர் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.சில பகுதிகளில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கூட பதிவாகலாம்.இவை தவிர்த்து தமிழக்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் பரவலான மழை நாளை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் அது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து காற்றை தம்வசம் இழுப்பதாலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் இருப்பதாலும் 18-11-2018 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் 20-11-2018 மற்றும் 21-11-2018 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களை நெருங்குகையில் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

கஜா புயல் காரைக்கால் அருகே கரையை கடக்க வாய்ப்பு - 15-11-2018 அன்று இரவு அது கரையை கடக்கலாம்

14-11-2018 நேரம் பிற்பகல் 1:50 மணி இன்று காலை முதல் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர தொடங்கி தொடர்ந்து தமிழக வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது இன்னும் சற்று நேரத்தில் அது தீவிரமடைய தொடங்கி அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது தற்பொழுது மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது நிலைகொண்டுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைய தொடங்கி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொள்ளலாம்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அது வட கடலோர பகுதிகளை நெருங்க முற்படுகையில் அதன் வலு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆகிய நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் அது #காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மாவட்ட பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது கரையை கடக்க முற்படுகையில் மணிக்கு 70 கி.மீ  - 80 கி.மீ வரை #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கற்று வீசக்கூடும் சில சமயங்களில் 90 கி.மீ வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

15-11-2018 அன்றைய மழைக்கான வாய்ப்புகள்
-------------------------------------------------------------------------
14-11-2018 அன்று நள்ளிரவு அல்லது 15-11-2018 ஆம் தேதி அதிகாலை முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் #சென்னை மாநகரில் ஆங்காகே மழை பதிவாக தொடங்கலாம் மெல்ல மெல்ல மழை #காஞ்சிபுரம் , #விழுப்புரம் ,#புதுச்சேரி ,#கடலூர் என அன்று நண்பகுலுக்குள் பிற வட கடலோர மாவட்டங்களுக்கும் பரவ தொடங்கலாம்.15-11-2018 அன்று வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

15-11-2018 நள்ளிரவு முதல் 16-11-2018 நள்ளிரவு வரை உள்ள 24 மணி நேரத்தின் மழைகான வாய்ப்புகள்
--------------------------------------------------------------------------

#காரைக்கால் ,#நாகப்பட்டினம் ,#திருவாரூர் ,#தஞ்சை ,#புதுக்கோட்டை ,#திருச்சி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது  கரையை கடந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து பின்னர் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் கேரளாவை கடந்து அரபிக்கடல் பகுதியை எட்ட முற்படலாம் இதன் காரணமாக இவை தவிர்த்து கரூர் ,திருப்பூர் ,கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக கோவை ,திருப்பூர் மாவட்டங்களின் தெற்கு பகுதிகளில் ஓரளவு வலுவான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள #நீலகிரி ,#தேனி ,#விருதுநகர் உட்பட தமிழக மேற்கு மாவட்டங்களிலும் #மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவங்கங்கை ,திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #நெல்லை ,#தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.பொதுவாக தென் உள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #அரியலூர் ,#பெரம்பலூர் ,#விழுப்புரம் ,#திருவண்ணாமலை மற்றும் #வேலூர் ,#ஈரோடு ,#சேலம் ,#நாமக்கல் ,#விழுப்புரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் இவைகள் உட்பட தர்மபுரி ,கிருஷ்னகிரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் 16-11-2018 அன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மொத்தத்தில் 16-11-2018 அன்று தமிழிகக்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

15-11-2018 மற்றும் 16-11-2018 ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கலாம் ?
------------------------------------------------------------------------------------
15-11-2018 ஆகிய நாளை காலை அல்லது நன்பகல் வாக்கில் #புதுச்சேரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் 15-11-2018 ஆம் தேதி நண்பகல் முதல் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கலாம் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் மேலும் அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படுகையில் அதாவது 15-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் 16-11-2018 அன்று அதிகாலை நேரத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் மணிக்கு 60 கி.மீ  - 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் 15-11-2018 ஆகிய நாளை நண்பகல் அல்லது பிற்பகல் வாக்கில் மழை பதிவாக தொடங்கலாம் அந்த கப்புயல் கரையை கடக்கையில் அதாவது 16-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சில சமயங்களில் மணிக்கு 90 கி.மீ என்கிற அளவிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.#காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மற்றும் #திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்

அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது தீவிர புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதன் நகர்வுகள் தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

21-09-2018 மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவானது "#டாயே " ( #DAYE ) புயல்

21-09-2018 நேரம் அதிகாலை 00:10 மணி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் "#டாயே " ( #DAYE )புயல் சில மணி நேரங்களுக்கு முன்பு அதாவது 20-09-2018 ஆகிய நேற்று இரவு உருவானது.20-09-2018 ஆகிய நேற்று நள்ளிரவு அந்த "#டாயே " ( #DAYE ) புயல் தெற்கு ஒடிசா வின் கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.தற்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் நிகழ் நேர செயற்கைகோள் புகைபடங்களின் உதவியுடன் அது கரையை கடந்து தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலைகொண்டிருப்பதை நம்மால் அறிய முடிகிறது மேலும் பிற்பகலில் நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே அது ஒடிசா மாநிலம் #கோபால்பூர் பகுதிக்கு மிக அருகில் கரையை கடந்து இருக்கலாம் அதேபோல 20-09-2018 ஆகிய நேற்று பிற்பகலில் மழைக்கான வாய்ப்புகளில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது #விசாகப்பட்டினம் (#Visakhapatnam) உட்பட வடக்கு ஆந்திராவின் கடலோர மற்றும் உள் பகுதிகளின் பல இடங்களிலும் வலுவான மழை பதிவாக தொடங்கியிருக்க வேண்டும் அப்பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை செயற்கைகோள் படங்களின் உதவியுடனும் அறியமுடிகிறது.மேலும் அடுத்த சில மணிநேரங்களில் அது வலுகுறைந்து மீண்டும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையை 21-09-2018 ஆகிய இன்று காலைக்குள் அடையலாம் மேலும் நன்பகல் வாக்கில் அது மேலும் வலுகுறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depession) உருப்பெறலாம்.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து சத்தீஸ்கர் ,மத்தியபிரதேசம் உட்பட மத்திய ,மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு மாநிலங்ககளில் அங்காங்கே கனமழையை ஏற்படுத்த முற்படலாம்.அதன் நகர்வுகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நான் நேற்று பிற்பகலில் பதிவிட்டு இருந்தது போல #நெல்லை ,#குமரி மற்றும் #மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவானது இவைதவிர்த்து நேற்று #கிருஷ்னகிரி ,#திருவண்ணாமலை  ,#வேலூர் மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமான மழை பதிவானது நேற்று மாலையும் ஜவ்வாது மலை அருகே மழை மேகங்கள் குவிய தொடங்கின பின்னர் #திருவண்ணாமலை உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் மிதமான மழை பொழிவை ஏற்படுத்தின பின்னர் அந்த மழை மேகங்கள் #விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைந்து #திண்டிவனம் பகுதிகளுக்கு அருகிலும் பதிவாகி வந்தன பொதுவாக நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை பதிவாங்கியிருக்க வேண்டும் தற்பொழுதும் #தர்மபுரி மாவட்டம் #அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மிதமான மழை பொழைவை ஏற்படுத்தக்கூடிய மழை மேகங்கள் ராடாரில் பதிவாகிவருகின்றன.தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த புயலால் எந்த வித பாதிப்புகளும் கிடையாது நேரடி மழை வாய்ப்புகள் என்றும் எதுவும் இருக்கப்போவது இல்லை அதன் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழக பகுதிகளில் வீசும் காற்றின் திசை மாறுதல் அடைந்து சாதகமான சூழல்கள் உருவாகுவதை பொறுத்தே அந்தந்த பகுதிகளின் வெப்பசலன மழைக்கான வாய்ப்புகள் அமையும் .


21-09-2018 இதுவரையில் அதாவது அதிகாலை 00:05 வரை பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் மழை அளவுகள்.

பேச்சிப்பாறை  ( கன்னியாகுமரி மாவட்டம் ) - 31 மி.மீ
பையூர் (தர்மபுரி மாவட்டம் ) - 27 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 18 மி.மீ
திருசெந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
நெய்யூர் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
திருப்பதிசாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ
திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 4 மி.மீ

இதர பகுதிகள் குறித்த நிலவரம் காலை தான் தெரியவரும்

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


28-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

27-10-2017 நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது அந்த செய்தியை தெரிந்துகொண்ட பலர் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிவிட்டதா ? என்று   நமது பக்கத்தில் என்னிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர் அவர்களுக்கான எனது பதில் இதுதான் தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கும் - தமிழகத்துக்கும் இடையே வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கும் பொழுது அது ஒரு புயலாக வலு பெற வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது அதிகபட்சமாக அது தென் தமிழகத்துக்கு அருகே அடுத்த 3 அல்லது 4  நாட்களுக்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற வாய்ப்புகள் உள்ளது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வலுவிழக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதனால் அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் அருகே புயலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.நான் இதற்கு முன்னரே தொடர்ந்து பதிவிட்டு வருவது போல வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதாலேயே  அடுத்தடுத்து புயல்கள் உருவாகி தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கனமழை பதிவாகவேண்டும் என்ற அவசியமில்லை கடந்த 3 நாட்களில் துளியளவும் மழை பெறாத இடங்களும் தமிழகத்தில் உள்ளன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

27-10-2017 நேற்று தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்து இருந்தது 28-10-2017 (இன்றும் ) அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே  நிலை தொடரலாம் இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை மழையின் அளவு சற்று குறைந்தே இருக்கும் 29-10-2017 அன்று இரவு அல்லது 30-10-2017 முதல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 31-10-2017 முதல் தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்பு உண்டு.தற்பொழுது தெற்கு சீன பகுதிகளுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வருகின்ற 31-10-2017 அல்லது 01-11-2017 அன்று வியட்நாம் கடல் பகுதிகளுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தாய்லாந்தை கடந்து  02-11-2017 அல்லது 03-11-2017 ஆம் தேதிகளில் வலு குறையாமல் அந்தமான் கடல் பகுதியை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அது 04-11-2017 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு சக்திவாய்ந்த புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் அது வங்கக்கடல் பகுதியில் வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அது இப்படித்தான் நகரும் என்றும் இந்த பகுதியில் தான் கரையை கடக்கும் என்றும் இப்பொழுதே 100% உறுதியுடன் கூறுவது சாத்தியமற்றது அதனால் அடுத்த ஒரு 4 முதல் 5 நாட்கள் காத்திருந்து அந்த புயல் குறித்த தகவல்களை பதிவிடுவதே சிறந்தது என நான் கருதுகிறேன் இந்த பதிவின் தொடர்ச்சியை வருகின்ற 03-11-2017 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகையில் சேர்த்து பதிவிடுகிறேன்.

நான் மேலே பதிவிட்ட தகவல்கள் அனைத்தும் தற்போது நிலவும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதாவது ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


அமெரிக்காவின் புளோரிடாவை நோக்கி நகரும் இர்மா புயல்...மியாமி நகரை விட்டு வெளியேறிய மக்கள்..மணிக்கு 220 முதல் 250 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது

கியூபாவை புரட்டிப்போட்ட இர்மாபுயல் தற்பொழுது தீவிரமடைந்து அமெரிக்காவின் புளோரிடா நகரை நோக்கி நகர்ந்து வருகிறது ஆம் கியூபாவை கடக்கும் பொழுது 3 ஆம் நிலை புயலாக இருந்த இர்மா தற்பொழுது வலு பெற்று 4 ஆம் நிலை புயல் என்கிற நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்பொழுது பரபரப்பான துறைமுக நகரமான மியாமி பகுதியில் புயலின் ஒரு பகுதி நுழைய தொடங்கிவிட்டது மியாமியில் இருந்து ஏற்கனவே பல லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.புயல் புளோரிடவை கடக்கும் பொழுது மணிக்கு 220 முதல் 250 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30-05-2017 வங்கதேசத்தில் கரையை கடக்க தொடங்கியது மோரா (Mora) புயல்

நேற்று மியான்மர்  அருகே வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த மோரா (Mora) புயலானது 30-05-2017 இன்று காலை வங்கதேச கடற்கரையை தாக்கியது.தற்பொழுது புயலின் மையப்பகுதியானது வங்கதேசத்தின் சிட்டகாங் நகர் அருகே உள்ளது.இந்த மோரா புயலால் மியான்மர் மற்றும் வங்கதேச கடல் பகுதிகளில் வாழும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கரையை கடக்கும் இந்த மோரா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பெரிய அளவிலான பாதிப்புகளும் இல்லாத பொழுதும்.இன்னும் சில நாட்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலம் வறண்ட வானிலையே நிலவும்.இந்த மோரா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.29-05-2017 புதுச்சேரியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்னும் 24 மணி நேரத்தில் மியான்மர் அல்லது வங்கதேசத்தில் புயல் கரையை கடக்கும்


29-05-2017 வங்கக்கடலில் மியான்மர் அருகே நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது புயலாக மாறியது.மோரா (mora ) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் அல்லது அதுக்கு அருகேயுள்ள மியான்மர் நாட்டு கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30-05-2017 நாளை காரையை கடக்கவிருக்கும்  இந்த மோரா புயலால் இன்று புதுச்சேரி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பெரிய அளவிலான மழை ஒன்றும் வந்துவிடப் போவதில்லை மாறாக இந்த மோரா புயலால்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கடலோர  மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.


28-05-2017 நாகை மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.29-05-2017 நாளை தமிழக வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

28-05-2017 அந்தமானுக்கு வட மேற்கு திசையில் மியன்மாருக்கு அருகே நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாகை மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு பெற்று வட கிழக்கு திசையில் நகர்ந்து  30-05-2017 அன்று ஒரு தீவிர புயலாக மாறி மியான்மரில் கரையை கடக்கக் கூடும்.மோரா (Mora) என பெயரிடப் பட்டிருக்கும் இந்த புயலால் தமிழகத்துக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாதது போல தோன்றினாலும் வட கிழக்கு திசையில் நகர இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை 29-05-2017 அன்றும் அதற்கு மறுநாள் 30-05-2017 அன்றும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் லேசாக வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

28-05-2017 இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை மற்றும் அதன் மறுநாள் 29-05-2017 மற்றும் 30-05-2017 ஆகிய தேதிகளில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் 1° முதல் 3° செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வருகின்ற 13-04-2017 அல்லது  14-04-2017 தமிழகம் மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு மத்தியில் இலங்கைக்கு வட கிழக்கே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளே தொடுருமானால் அது சக்தி வாய்ந்த புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.ஆனால் அதனால் தமிழகத்துக்கு எந்த அளவு மழை கிடைக்கும் என்று இப்பொழுதே உறுதியாக சொல்ல முடியாது.தற்பொழுது நிலவும் தகவல்களை கொண்டு பார்க்கையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கிழக்கு திசையில் நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது அதாவது மியன்மரை நோக்கி  அப்படியானால் தமிழகத்துக்கு பெரிய அளவிலான மழை கிடைக்க வாய்ப்பில்லை.அதே சமயம் அது திசை மாறி வட மேற்கு திசையில் நகரும் பட்சத்தில் தமிழகத்தில் நல்ல மழைக்கான வாய்ப்பு உண்டு.

அதே சமயம் இந்த புயலினால் வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது ஆம் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கிழக்கு திசையில் நகரும் பொழுது இங்குள்ள காற்று உறிஞ்சப்பட்டு வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக மக்களின் வெப்பம் தணிக்க திசை மாறி வருமா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


வர்தா புயல்: புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னைக்கு அருகே வர்தா புயல் கரையை கடக்க ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தில் புதுச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்வதற்கான அறிகுறிகள் தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படுகிறது.அதனால் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளவும்.மேலும் இந்த புயலினால் புதுச்சேரியில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ வரை பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.அவசர உதவிக்கு 1070 என்ற தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...