29-10-2018 நேரம் பிற்பகல் 2:15 மணி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது தற்பொழுது பதிவாகி வரும் நிகழ் நேர செயற்கைகோள் படங்களின் உதவியுடன் அதனை தெளிவாக அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகலாம் தற்பொழுது ஒடிசாவின் #பிரமாப்பூர் (#Brahmapur) க்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று மேலும் வட -வட மேற்கு திசையில் நகர்ந்து 30-10-2018 ஆகிய நாளை காலை ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip) நகரின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் பின்னர் அது மேலும் வடக்கு திசையில் நகர தொடங்கி ராஜ்நகர் உட்பட ஒடிசா மாநிலத்தின் பல கடலோர பகுதிகளிலும் நல்ல வலுவான மழை பொழிவை ஏற்படுத்தி ஒடிசா மாநிலம் #பாலசோர் அருகே உள்ள கடலோர பகுதிகளில் 31-10-2018 ஆகிய நாளை மறுநாள் கரையை கடக்க முற்படலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது இலங்கைக்கு அருகே கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை வட கடலோர மாவட்டங்களில் அங்கங்கே ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 ஆகிய நாளை மறுநாள் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.31-10-2018 முதல் 02-11-2018 வரை உள்ள 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளை வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வானிலை ஆய்வு மையத்திடன் இருந்து வெளியாகலாம்.
29-10-2018 நேற்று ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த #யூடு (#YUTU) சூறாவளியானது தற்பொழுது ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலு குறைந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதிகளை நெருங்க முற்பட்டு வருகிறது.மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 30-10-2018 ஆகிய நாளை அந்த #யூடு (#YUTU) சூறாவளியின் மையப்பகுதியானது #பலானன் (#Palanan) நகரின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம் மேலும் #Tuguegaroa ,#ilagan , #Santiago , #Baggao , #Appari , #Santaana, #Dilasag , #Kabugao,#Baguio , #candon , #vigan , #Laoag மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #லூசன் (#LUZON) மாகாணத்தின் அநேக வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் மிக மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இந்த 2018 ஆம் ஆண்டில் இதுவரையில் நிகழ்ந்தேறிய இயற்கை பேரிடர்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய பட்டியல்கள் வரிசையில் இந்த #யூடு (#YUTU) வுக்கும் கண்டிப்பாக இடம் இருக்கும்.
அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.